உயிராய் என்னுள் நீ புகுந்தாளே

கண்ணாலே கத்தி வீசுற
கனந்தோறும் என்னை கொல்லுற
கடிவாளம் மாட்டிய குதிர போல்
கம்முன நான் நிற்கிறன்

ஆத்தாடி உன் அழகாலே
காத்தாடி போல் நான் பறக்கிறேன்
பார்ப்பாயோ நீ பார்த்திருக்கேன்
பருந்தாட்டம் தினம் காத்திருக்கேன்

வெண்ணெயில் செய்த வெண்ணிலவே
உன் விரலால் என்னை தீண்டேண்டி
சூலையில் வைத்த நெருப்பாட்டம்
சூடு தெரியாமல் இருக்கேண்டி

அழகில் மத்திமம் ஆனவளே
என்னை அணைத்தால் அழகு கூடுமடி
உயிராய் என்னுள் நீ புகுந்தாளே
இவ்வுலகம் நமக்குள் அடங்குமடி.
--நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (22-Mar-19, 6:54 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 743

மேலே