கைமேல் பலன்

பத்து ரூபாய்-
ஓட்டையை மறைத்து
ஒட்டுப்போட்ட நோட்டை
கூட்டத்தோடு கூட்டமாய்
நடத்துநரிடம்
நாசூக்காய்த் தள்ளிவிட்ட
நிம்மதி..

திருடனைக் கொட்டிய
தேளாய்,
திரும்பக் கிடைத்தது
சில்லரை-
அழுக்காய் மடித்த
அக்குப் பஞ்சர்
ஐந்து ரூபாய் நோட்டு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Mar-19, 6:06 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 47

மேலே