மை விழி
மை விழி ஏந்திய பாவை
இரு விரல் வழி பார்க்கிறாள்.. காதலிதுவென விழி மொழி பகிருகிறாள்..
தினம் மாக்கோலயிழை மங்கையவள் போடக்கண்டேன்.. இவள் விரல் கோலம் போட்டது யாரென விழி திறந்து புருவமுயர்த்தி நின்றேன்...
இவள் நகப்பூச்சு கண்டு நான் அதிசயித்தேன்..
மாதுளை முத்துக்கள் ஆங்கே கோர்க்கக் கண்டேன்! ஒருவழிப்பாதையில் நான் செல்லமாட்டேன்...
உன் நினைவால் உறங்கா என் கண்களுக்கு கருணை கூட்டி இருவிழி காட்டி நீ வந்தால் மறுமொழி கூறிட இடமுண்டோ!!