கருவிழி பார்வையில்

உண்மையில்
அது கண்களா? இல்லை...
பூம்புகார் கலைக்கூடமா?

பெண்ணே,
உன் கண்களோ
வண்ணம் தீட்டாத
வரைபடம்!!!
புருவமோ
வண்ணமில்லாத
வானவில்!!!
இமைகளோ மழைகால
மயில்தோகை!!

உன் கருவிழி பார்வையில்
காந்தம்தான் உள்ளதோ..!!
என் இரும்பு மனம்
சட்டென்று ஒட்டிக் கொண்டதே.

எழுதியவர் : சிவா பாலா (28-Mar-19, 3:56 pm)
Tanglish : karuvili paarvaiyil
பார்வை : 635

மேலே