அன்பே
அன்பே அன்பே
எங்கே நீ சென்றாய் ?
உனைத் தேடும் கண்கள்
அறிவாயோ?
உனைத் தேடும் நெஞ்சம்
தெரியாதோ?
நீ ஏன் பயணிக்கிறாய்
நெடுந்தூர பயணம்?
மேக கூட்டத்தில் காரிருளாய்
ஆனாயோ?
வீசும் நிலவின் ஒளியாய்
வந்தாயோ?
சூரியனின் ஒளிக்கற்றையாய்
சுடுகிறயா ?
மீண்டும் ஒர் வசந்த காலமாய்
மாறிட
என் வாசல் தேடி வா நீ?
தாலாட்டு பாடியே தமிழால்
தூங்க வைக்க
அள்ளி முத்தம் கொடுத்து
அன்பாய் பார்த்திட
உலகில் உள்ள மொத்த அன்பையும்
மழையாய் நீ பொழிந்திட
குடையில்லாமல் நனையவே நான்
பூஞ்சோலையிலே
நீ வா என் வாசல் தேடி!!!!