பெண்மையும் ஆண்மையும் நமக்குள்ளே நெறஞ்சிருக்க
பெண்மையும் ஆண்மையும் நமக்குள்ளே நெறஞ்சிருக்க
***********************************************************************************
தேன்ஆடும் வண்டுநிகர் கருமைநிற நீள்விழிகள் -- அதனை
அண்டியே காத்திடும் படபடக்கும் கூர்இமைகள்
மின்னிடும் திலகமதை ஏற்றிட்ட நன்நுதல்
மன்மதன் சிலையொத்த சீரான புருவங்கள்
மாணிக்க மூக்குத்தி ஒளிவீசும் சிறுநாசி
கன்னங்கள் இரண்டுமே மாங்கனிக் கதுப்புகள்
கண்ணனவன் சங்காக அமைந்திட்ட செங்கழுத்து
மின்னிடும் தோடுசேர்ந்த கேள்விக்குறிச் செவிகள்
மன்னனவன் கையாண்ட சிவதனுசே உன்தோள்கள்
காண்பவர் கண்களை ஈர்த்திடும் கனியகங்கள்
மண்கலையக் கழுத்தென அமைந்திட்ட சின்னஇடை
பனையொத்த துடைகள் சிற்றிடைக்கு அழகுசேர்க்க
கனிவாழைத் தண்டேயுன் பளிச்சிடும் நெடுங்கால்கள்
மென்பஞ்சுப் பாதங்கள் முத்துப்பறல் விரல்கள்
புனைந்தஇக் கவிபோல என்கனவில் வந்தவளே
கண்மாயும் ஓடையும் கோடையிலும் குளிர்ந்திருக்க
தென்னைமரச் சோலைகள் நிழலுக்கு குடைபிடிக்க
பண்பாடும் குயிலினங்கள் மோகனத்தில் இசைகூவ
பெண்மையும் ஆண்மையும் நமக்குள்ளே நெறஞ்சிருக்க -என்னவளே
இன்னமும் தாமதமேன் நாமிருவர் கூடுதற்கே !