என் தந்தை

அகரம் முதலாய் அனைத்தும் கற்பித்தவர்!
ஆசையாய் எனை கண்ணே என்றவர்!
இளந்தென்னங்கன்றாய் எனை வளர்த்தவர்!
ஈகைப்பண்பினை என்னுள் விதைத்தவர்!
உயர உயர நான் செல்ல ஏணிப்படியாய் நின்றவர்!
ஊராரெலாம் எள்ளி நகையாடினர்
எதற்கு பெண்பிள்ளைக்கு பட்டப்படிப்பென்று?
ஏதும் பேசாது மௌனம் காத்தவர் !- எனது
ஐயங்களை நீக்கி என் தைரியமாய் துணை நின்றவர்!
ஒய்யாரமாய் ஈப்பில் நான் பவனி வர - என்றும்
ஓயாது உழைத்தவர்!
தான் காணாத உலகை நான் காண கனவு கண்டவர்!
புன்முறுவல் ஒன்றில் என் காயங்கள் ஆற்றும் மருத்துவர்!
இறைவா.......
எங்கள் பந்தம் ஏழ்பிறப்பும் தொடர வேண்டும்
தந்தை மகளாய்.................

எழுதியவர் : தேவிபரந்தாமன் (3-Apr-19, 11:40 am)
சேர்த்தது : பரந்தாமன்
Tanglish : en thanthai
பார்வை : 204

மேலே