விண்ணே நீ உயரமா

விண்ணே நீ உயரமா?

விண்ணே நீ உயரமா?
வெள்ளயர்களை விரட்ட
வெண்ணிலவை போல் தேய்ந்துவிட்டு
வெளிச்சம் கொடுத்துவிட்டு போன
விடுதலை வீரர்களை பற்றி நீ அறிவாயா?
வெந்தவர்கள், மாய்ந்தவர்கள்
விபரம் நீ அறிவாயா?
விண்மீன்கள் பட்டியல்
என்பதை அறிவாயா?
அவதாரம் எடுத்து
அரக்கர்களை அழித்தான்
அதை நீ அறிவாய்
அரும்பணிக்காக அவதாரம் எடுத்து
அவர்களையே அழித்து கொண்டார்களே!
அதை நீ அறிவாயா?
வீரம் கொண்டு வேள்வி நடத்தி
அவ்வேள்வியிலே தன்னை மாய்த்து
வீரத்தியாகத்தால்
வீரசுதந்திரம் தந்தவர்கள் முன் நீ
வாமனன் என்பதை அறிவாயா?

சங்கர் சேதுராமன்

எழுதியவர் : SANKAR SETHURAMAN (3-Apr-19, 5:25 pm)
சேர்த்தது : SANKAR
பார்வை : 56

மேலே