பரந்தாமன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பரந்தாமன்
இடம்:  குடியேற்றம்
பிறந்த தேதி :  30-Aug-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Apr-2019
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் ஒரு ஆசிரியர்.
என் உயிரில் கலந்த உணர்வாய்
என் தமிழை நேசிக்கின்றேன்

என் படைப்புகள்
பரந்தாமன் செய்திகள்
பரந்தாமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2019 3:28 pm

நாளெலாம் உழைத்து
நள்ளிரவில் விம்பிடுவாய்! - அதை
குறுஞ்செய்தியிலே விளம்பிடுவாய்!
களப்பணியில் உனக்கு உதவாத
கயவர்களை எண்ணி!
உன் பின் பேசும் பொல்லாத உருப்படிகள்!
வேதனையைத் தூண்டும் பல நச்சு நாகங்கள்!

அடுப்பங்கறை அரசுப் பணி செய்து -உனை
ஆளாக்கிய அன்னையை நினைவில் கொள்!
நித்தம் ஒரு போர்முனை கண்டவள்! பல
போராட்டங்களை வென்றவள்!
தனிப்பெண்ணாய்!
வழிக்காட்டியாய் அவள் இருக்க
வருத்தம் ஏன் கொள்கிறாய்?

இனியும்
புறம்பேசும் புழுக்களை எண்ணி விம்பாதே!
பாரதியின் புதுமைப் பெண்ணாய்
புறம்படு பூகம்பகமாய்! உனை
பகடிக்கும் மூடர் கூட்டம்
புதையுண்டு சாகட்டும்!
நோகாமல் பணி செய்யும் நரக்கூட்டம்
பாதாளம் போகட்டும்!

நோகட

மேலும்

பரந்தாமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2019 6:41 pm

கண் விழிக்கையில் முன் தோன்றும் கதிரவன்! -என்
கல்யாண வாழ்வின் துணை அவன்!

கார்முகிலாய் காதல் மழையாய் என்னுள் வந்தவன் - நான்
காணாத கனவுலகை கண்முன் நிறுத்தியவன்!

கூடி வாழும் குடும்ப வாழ்க்கை தந்தவன்!
கூடு கலையாமல் நிதம் கட்டிக்காப்பவன்!

தவறு ஏதும் செய்தால் தனியே வந்து திருத்திடுவான்!
தாய்க்கு தலைமகனாய்! மனைவிக்கு மணாளனாய்!

பள்ளியிலேயே ஒழுக்கம் கற்பி்ப்பவன்- செய்யும்
பணியிலேயே மணிமகுடம் தரித்தவன்
பழக்கத்திலே பணிவானவன்!
பார் புகழும் பண்பாளன் - என் பரந்தாமன்

குறுஞ்செய்தி பகரயிலேயே அழைத்து - உன்
குரல் கேட்க ஆசை என்பான்!
குழந்தை போல் குறும்பு பல நான் செய்ய
சத்தமில்லாமல் அதட்

மேலும்

பரந்தாமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2019 11:40 am

அகரம் முதலாய் அனைத்தும் கற்பித்தவர்!
ஆசையாய் எனை கண்ணே என்றவர்!
இளந்தென்னங்கன்றாய் எனை வளர்த்தவர்!
ஈகைப்பண்பினை என்னுள் விதைத்தவர்!
உயர உயர நான் செல்ல ஏணிப்படியாய் நின்றவர்!
ஊராரெலாம் எள்ளி நகையாடினர்
எதற்கு பெண்பிள்ளைக்கு பட்டப்படிப்பென்று?
ஏதும் பேசாது மௌனம் காத்தவர் !- எனது
ஐயங்களை நீக்கி என் தைரியமாய் துணை நின்றவர்!
ஒய்யாரமாய் ஈப்பில் நான் பவனி வர - என்றும்
ஓயாது உழைத்தவர்!
தான் காணாத உலகை நான் காண கனவு கண்டவர்!
புன்முறுவல் ஒன்றில் என் காயங்கள் ஆற்றும் மருத்துவர்!
இறைவா.......
எங்கள் பந்தம் ஏழ்பிறப்பும் தொடர வேண்டும்
தந்தை மகளாய்.................

மேலும்

உயிர் எழுத்தின் தொடரில் ஒரு உன்னத படைப்பு. 03-Apr-2019 5:08 pm
பரந்தாமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2019 5:15 pm

என்னவளே.......
என் ஆதியும் அந்தமுமாய் ஆனவள்
என் முகம் நோக்கி மனம் அறிபவள்
என் புன்னகை கண்டு பூரிப்பவள்
என் வருகை தாமதமாகும் நொடிகளை
கழிந்திடுவாள் யுகங்களாய்....
என் இயக்கமாய் அழகின் உருவமாய்
அறிவின் சிகரமாய் இருப்பவள்...
என் வெற்றிக்காக தோல்வியை முன் வந்து ஏற்பவள்
பூமித்தாய்க்கு மட்டும் பொறுமையில் எப்போதும் போட்டியாய் இருப்பவள்!
என் கணித ஆர்வம் கண்டு
உன் அணிகலங்களும் படித்தன வங்கியில்!
என் கண்ணீர் கூட தோற்கும் நித்தம் நீ கண்ட வலிகளை எண்ணி.....
என்னவளே....
என் அன்னையே......என்றும் என் வேண்டுதல்
என் மகளாய் உன் பிறப்பு மறுபிறவியில் வேண்டும் என்பதே.......

மேலும்

பரந்தாமன் - ஸ்பரிசன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2018 3:56 pm

இந்திய கூட்டாட்சி தத்துவம் 2050ம் ஆண்டுகளில்?

மேலும்

வீழ்ந்து விடும் 02-Apr-2019 11:22 am
தொடரும்பலமாகும் 25-Mar-2019 4:19 pm
THERIYAVILLAI 13-Feb-2019 6:14 pm
Theriyavillai 19-Jan-2019 6:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே