பூகம்பமாய் பூமகள்

நாளெலாம் உழைத்து
நள்ளிரவில் விம்பிடுவாய்! - அதை
குறுஞ்செய்தியிலே விளம்பிடுவாய்!
களப்பணியில் உனக்கு உதவாத
கயவர்களை எண்ணி!
உன் பின் பேசும் பொல்லாத உருப்படிகள்!
வேதனையைத் தூண்டும் பல நச்சு நாகங்கள்!

அடுப்பங்கறை அரசுப் பணி செய்து -உனை
ஆளாக்கிய அன்னையை நினைவில் கொள்!
நித்தம் ஒரு போர்முனை கண்டவள்! பல
போராட்டங்களை வென்றவள்!
தனிப்பெண்ணாய்!
வழிக்காட்டியாய் அவள் இருக்க
வருத்தம் ஏன் கொள்கிறாய்?

இனியும்
புறம்பேசும் புழுக்களை எண்ணி விம்பாதே!
பாரதியின் புதுமைப் பெண்ணாய்
புறம்படு பூகம்பகமாய்! உனை
பகடிக்கும் மூடர் கூட்டம்
புதையுண்டு சாகட்டும்!
நோகாமல் பணி செய்யும் நரக்கூட்டம்
பாதாளம் போகட்டும்!

நோகடிக்கும் வார்த்தைகளை மறந்துவிடு!
கடமையை திறம்பட ஆற்றிவிடு!
அறிவை தீச்சுடராய் வீ சி விடு!
பணியை தெளிந்த நீராய் செய்திவிடு
எண்ணிய கருமம் நிறைவேற்றுவிடு!

புன்முறுவல் பூத்தது போதும்
பூந்தென்றலாய் இருந்தது போதும்!
என்றும் உன் வாசமாய் இருக்கும்
சீனிவாசன் இருக்க பயமேன்!
வெட்டி பேச்சுகளை
வேரறுக்க மகேசுவரி போதும்!
புறம்படு பூமகளே! பூகம்பமாய்!

எழுதியவர் : பரந்தாமன் (5-Apr-19, 3:28 pm)
சேர்த்தது : பரந்தாமன்
பார்வை : 291

மேலே