உன் பார்வை

தீயோரைக் கண்டுகொண்டால் சுட்டெரிக்கும்
உந்தன் வாளொத்த கூறிய பார்வை
என்னை நீ பார்க்கையிலே அன்பாய்
அருளாய் காதலாய் மலர்ந்ததே இது
என் பாக்கியமே என்றே நினைக்கின்றேன் நான்
உன் பார்வையால் எனக்கு ஏற்றம் தந்தாய்
என்னை உன் காதலனாய் ஏற்று
உன் மனதில் நீ' இப்படித்தான் இவன்'
என்று எனக்கு தந்திருக்கும் ஸ்தானத்தை
எப்போதும் காத்து நிற்பேன் நம்
வாழ்வு உள்ளவரை இது சத்தியமடி
உன் பார்வைக்கு இமையாவேன் நான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Apr-19, 11:48 am)
Tanglish : un parvai
பார்வை : 321

மேலே