நிலா பெண்ணே
என் வீட்டு ஜன்னலோரம் பிறைமதியாய் உதயமாகும் நிலா பெண்ணே!
நீ உதிர விட்ட புன்னகை பூக்கள் விண்மீனாய் என் மன வானில் மின்னுதடி!
உன் கேசத்தில் இருந்து புறப்படும் தென்றல் என் ஜீவனை சேதம் செய்யுதடி!
உன் காதோர கம்மலாய் மாறி அனுதினமும் என் காதலை உரைக்க என் இருதயம் துடிக்குதடி!