சம்பூரணி அம்மா
இருந்த அஞ்சி ஏக்கர் நிலத்தை பம்பு செட்டோடு நாற்பது ஐம்பது லட்சம் பெருமான நிலத்தை, பத்து லட்சத்திற்கு அடமானம் வைத்து, கையிருப்பில் வைத்திருந்த ஐந்து லட்சம் மொத்தம் பதினைந்து லட்சத்தை தனது ஒரே பெண்ணை ஒரு இஞ்சினியருக்கு நல்ல முறையில் கல்யாணம் பண்ணி கொடுத்தார் தர்மலிங்கம்
இப்போது கிடைக்கும் குறைவான ஓய்வூதியத்தை வைத்து வேறு வழியில்லாமல் வயிற்றை கழுவுகிறார் தனது வயதான மனைவியோடு தர்மலிங்கம்; மேலும் உறவினர்கள் நல்லது கெட்டதில் கலந்து கொள்ள முடியாமல் அவர்கள் விடும் சாபனையை வாங்கி சுமந்து பாரம் தாங்காமல் ராப்பகலாய் தூங்காமல் கண்வடிக்கும் அவலை நிலை என்றும்,
வயது அறுவதை தாண்டிய தமது மனைவியின் தந்தையும் தாயும் நிம்மதியாக இல்லை என்ற சேதி கேட்டு மறுமகன் சுந்தரம் கன்ஸ்ட்ரக்ஷன் மனம் நொந்து போனான் இந்த கலியுகத்தில் இப்படியும் ஒரு மறுமகனா, பூர்வ ஜென்மத்தில் தொட்ட விட்ட குறையாக இருக்கும் இப்போது அதை சமன் செய்யப்படுகிறதோ
ஒவ்வொரு பெற்றோர்களும் அவர்கள் தம் பெண்ணுக்கு கொடுக்கின்ற சீர்வரிசைகளுள் முதலாவதாக அவரவர் மானம், மரியாதை, கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள செலவிடுவதே;
என்று தான் நினைக்கத் தோன்றுகிறது
குறைவாக கொடுத்தால் சித்ரவதை வதைப்பார்களோ என்ற பயம், அடுத்தது அடுப்பெரிக்கும் எரிவாயுவை திறந்து விட்டு பிள்ளையை தகனம் செய்துவிடுவார்களோ என்ற பயம். அதை கொண்டு வா, இதை கொண்டு வா என்று உதைத்து துறத்தி வாழாவெட்டி யாக்கி விடுவார்களோ என்ற பயம்; சிறு சிறு தவறுகள் மறதியால் விடுபடுவதை ஊதி பரிதாக்கி வெடிக்க வைத்து கை கொட்டி சிரிப்பார்களோ என்ற பயம்
இதில் இல்லாமையால் செய்ய தவியாய் தவிக்கும் பெற்றோர் சிந்தனைகளில் °° இப்படி கண்ணு மண்ணு தெரியாமல் பண்ணுறாங்களே ஏன் பொண்ணுகிட்ட ஏதாவது குறைகள் இருக்கும், குருடோ, செவிடோ, அரை பைத்தியமாகவோ, இல்லேன்னா வயிற்றில் வாயில் வாங்கிக்கொண்டு அதை மூடி மறைக்க இருக்கும் ; இல்லேன்னா இவ்வளவு செய்யவேண்டிய அவசியம் என்ன, என்ற நச்சரிப்பு இருக்கும்
அதை பார்கிறவங்க கேட்கிறவங்க பெண் பார்க்க போகும் இடத்தில் அந்த வீட்டில் அவங்க பொண்ணுக்கு இவ்வளவு செஞ்சி இருக்காங்க; அதபோல செஞ்சா போதும் என்று உதாரணம் எடுத்து காட்டுகிறார்கள் சிலர்
இருக்கிறவங்க செய்யலாம் இதை காரணம் காட்டினால் இல்லாதவர்கள் எங்கே போவார்கள் என்று யாரும் சிந்திப்பதே இல்லை; அவர்களின் தற்பெருமை; இல்லாதார்க்கு அது சிறுமை என்பதை யார் இந்த காலத்தில் கருத்தில் கொள்கிறார்கள்.
சுந்தரம் நல்ல உரக்கத்தில் இருக்கிறான் ஒரு அம்மா °° பேராண்டி.... சுந்தரம்... என் பேத்தி தான் உனக்கு மனைவியாக வாய்க்கப்பட்டு இருக்கிறாள், அவள் வயிற்றில் நான் பிறக்க போகிறேன், கடவுள் கிட்டே விண்ணப்பித்து அதற்கு உண்டான உத்தரவை வாங்கி விட்டேன்; அவள் என்றால் எனக்கு உயிர், காரணம் அவள் என்னைப்போலவே உருவத்தில் இருப்பதால், பரம்பரை சாடையை அவளிடம் கண்டேன், அவள் மேல் நான் அளவு கடந்த, அளவுக்கு அதிகமாக பாசம் வைத்துள்ளேன், எனது பெயர் " சம்பூரணி " விரும்பினால் உனக்கு பிறக்கப்போகும் மகளுக்கு அதே பெயரை வை, நான் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் உன் உதவியை நாட வேண்டியிருக்காது, என்மகன் அதான் உன் மாமனார் உன்னை போலவே இரக்க குணம் உள்ளவன், அதனால் நாளைக்கு வேண்டும் என்று சேர்த்துவைக்க தவறிவிட்டான், இப்போது உன் மனைவிக்கு சீமந்தம் செய்ய வேண்டியதை எண்ணி தனிமையில் என் படத்திற்கு முன்னால் மண்டியிட்டு கண்ணீர்விட்டு கதறினான், என் மகள் சீமந்தம், என்ன செய்வது என்று ஒன்றும் வழி தெரியவில்லையம்மா என்று கதறினான், சுந்தரம் நீ தற்போது டெண்டர் போடலாமா வேண்டாமா என்று தயக்கத்தில் இருக்கிறாய், தயங்கக்கூடாது டெண்டர் போடு, உனக்கே கிடைக்கும், சீக்கிரம் எழுந்திரு காலம் தாழ்த்தாதே அதற்கு உண்டான வேலையை செய் என்றாள் சம்பூரணி சுந்தரத்தின் மாமனாரின் காலமாகி விட்ட தாய் கனவில்
துடித்து பிடித்து எழுந்தான் சுந்தரம், சுற்றும் முற்றும் பார்த்தான், அங்கே யாரையும் காணவில்லை, கதவு உள் தாழ்பாள் போட்டு படுத்தது, அப்படியே இருந்தது, அட கனவா கொஞ்ச நேரம் யோசித்தான் சரி அதையும் ஒருதடவை சோதித்து தான் பார்ப்போமே போனால் டெண்டர் வாங்கிய பணம் ஐந்து ஆயிரம்தான் போகும், செக்குரிட்டி டெப்பாசிட் செய்த பணம் திரும்ப கிடைத்துவிடுமே என்று முயற்சி மேற்கொண்டான் சுந்தரம்
அடுக்கு மாடி கட்டிடம் கட்டித்தர டெண்டர் போட்டிருந்தான் அந்த டெண்டர் இவனுக்கே கிடைத்தது அது ஐந்து கோடி ருபாய்க்கான டெண்டர் மொத்தம் எட்டுபேர் இவனை சேர்த்து டெண்டர் போட்டிருந்தார்கள்
மீதமுள்ள ஏழுபேர்களின் ரேட்டு கோட்டு பண்ணியிருந்தது ஆறுகோடிக்கு மேல் கணக்கிடப்பட்டு காணப்பட்டது ஒவ்வொருவருடைய டெண்டரும்
கம்பாரேட்டிவ் ஸ்டேட்மெண்டு, உயர் அதிகாரிகளின் ஒப்புதலோடு நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது அதில் சுந்தரம் கன்ஸ்ட்ரக்ஷன் பெயர் டாப்பில் லோவெஸ்ட் டெண்டரர் என்று இருந்தது
மற்றவர்கள் தங்களது செக்குரிட்டி டெபாசிட் பண்ணியிருந்ததை வாப்பஸ் பெற விண்ணப்பித்துவிட்டார்கள் ஆனாலும் அது தொண்ணூறு நாட்களுக்கு பிறகு தான் கிடைக்கும் என்பது விதிமுறைகள் இருக்கிறது டெண்டர் கிடைக்காத விரக்தியில் செய்வதுண்டு
இவன் வெறும் (₹. 4,99,99,999.99) போட்டிருந்தான் அதனால் அந்த டெண்டர் சுந்தரம் கன்ஸ்ட்ரக்ஷனுக்கே கிடைத்தது என்பது சந்தோஷப்பட வேண்டிய விஷயம்
அக்சப்டன்ஸ் லட்டர் வீடு தேடி வந்து விட்டது, வேலையை ஆரம்ம்பிக்கச் சொல்லி , அதில் கம்ப்லிசன் பீரியடு ஆறுமாதமாக இருந்தது அதற்குள் வேலையை முடித்து கொடுத்தாக வேண்டும்
வேலையை ஆரம்பித்தான் அதற்குள் மனைவி ஊண்டாகி ஏழாவது மாதம் வளைகாப்பு ஏற்பாடு பண்ண கையில் ஒன்னும் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பதை கணவில் வந்து சொன்ன அம்மையார் மூலம் தெரிந்து கொண்ட மறுமகன் சுந்தரம் முதல் கான்ட்ராக்ட் பில் பாசானது; அதில் ஒரு லட்ஷம் ரூபாயை எடுத்து மாமனாரை வீட்டுக்கு வரவழைத்து அவனது அப்பா அம்மாவுக்கு தெரியாமல் ஒரு லட்சம் கொடுத்து இதை நான் கொடுத்ததாக யாரிடமும் மூச்சுவிடக்கூடாது, எங்க அப்பா அம்மாவுக்கு கூட நான் கொடுத்ததாக தெரியக்கூடாது அதேபோல் இதை எனக்கு திருப்பி கொடுக்க வேண்டுமே என்ற கவலையும் கொள்ளக்கூடாது என்று சொல்லி போய் வளைகாப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று அனுப்பி வைத்தான் அதோடு முக்கியமாக உங்க மகளுக்கு இதைப்பற்றி எதுவும் மறந்தும் சொல்லக்கூடாது என்று சொல்லி அனுப்பினான்
மாமனார் அதை தயங்கி தயங்கி வாங்கினார் அதை வேண்டாம் என்று சொல்ல வேறு வழியில்லாமல் வாங்கிக்கொண்டார்
வளைகாப்பு நல்லவிதமாக எதிர்பார்த்தபடி என்ன, அதற்கு மேலாகவே நடந்து முடிந்தது
அதற்குள் எடுத்த வேலையும் முடிவுக்கு வந்தது அதில் இவனுக்கு இருபத்தைந்து லட்சம் லாபம் கிடைத்தது அதில் பத்து லட்சத்தை மாமனாருக்கு கொடுத்து அடமானம் போட்ட நிலத்தை திரும்பப்பெற்று கொடுத்தான், காரணம் நாற்பது ஐம்பது லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை வெறும் பத்து லட்சத்துக்காக மீட்கமுடியாமல் போய்விடக்கூடாதே என்பதற்காக, இதையும் யாரிடமும் நீங்கள் மூச்சு விடக்கூடாது என்று கூறி மீதம் இருந்த பதினைந்து லட்சத்தை தனது அப்பாவிடம் கொடுத்தான்
மாமனார் அந்த நிலத்தை மறுமகன் மகள் பேருக்கு எழுதி கொடுத்துவிட்டார்
°°என்னங்க இது, இருந்ததை எங்க பேரில் எழுதிவைத்துவிட்டீர்கள், நீங்கள் என்ன பண்ணுவீங்க, எங்களை கேட்காமல் ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்தீர்கள்°° என்று கேட்டான் சுந்தரம்
°°நாங்கள் இருந்தாலும் இல்லாமல் போனாலும் இதுக்கு சொந்தமாகப்போகிறவள் உன் மனைவிதான் அதை இப்போது கொடுத்தால் என்ன எப்போது கொடுத்தால் என்ன, நாங்கள் உம்மை மறுமகனாக இருந்தாலும் எங்கள் மகனாகவே பாவிக்கிறோம், நாங்க உயிரோடு இருக்கும் வரை தண்ணி ஊத்துங்க , செத்தால் வாரி போட்டுவிடுங்க எங்களுக்காக இதைமட்டும் செய்தால் போதுமானது °° என்றார் மாமனார்
°°இந்த உதவியை நானாக செய்யவில்லை என் கனவில் ஒரு அம்மா வருவாங்க அவங்க தைரியம் கொடுத்த தனாலத்தான் இந்த காண்டிராக்டை எடுக்கவே சம்மதித்தேன், அவங்க சொன்னபடியே நல்ல முறையில் முடிந்தது இருபத்தைந்து லட்சம் கிடைத்தது, அதை என்ன பண்றது என்று யோசிச்சவாறே தூங்கிட்டேன் என் தூக்கத்திலேயே மறுபடி அந்த அம்மா வந்தாங்க உங்களுக்கு உதவச்சொன்னாங்க அதன்படி செய்தேன் அவ்வளவுதான் ஏன்னா அவங்க எனக்கு போட்ட பிச்சை °°
பேசிக்கொண்டே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த படத்தை பார்த்துவிட்டு °°மாமா....மாமா...அந்த படத்தைக்காட்டி இவங்கதான் என் கனவில் வந்தவங்க இவங்க யாரு உங்க அம்மாவா °°
°°ஆமாம் அவங்க என்னோட அம்மா தான் மாப்ளே °°
°°இவங்க பெயர் "சம்பூரணி" ங்களா °°
°°அட....சரியாகச் சொன்னீங்க மாப்பிளே°°
°°அவங்க மகன் நீங்கள், உங்களுக்கு நேரடியாக உதவாமல் என் மூலமா உதவி இருக்காங்க அதுதான் ஏன் என்று தெரியவில்லை மாமா °°
°°நான் பொருப்பற்றவன் என்பதால் மாப்ளே °°
°°எப்படி அப்படி முடிவுக்கு வந்தாங்க °°
°°அது பெரிய கதை மாப்ளே °°
°°சொல்லக்கூடியதாய் இருந்தால் சொல்லுங்களேன் °°
°°விடமாட்டீங்க போல இருக்கு இன்னைக்கு என் பொண்ணு க்காக நீங்க செய்துக்கொண்டுவரும் காரியத்தை அன்னைக்கு நான் பண்ணேன் என் மனைவிக்கு, அது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடிக்கவில்லை, அதனால் பொருப்பில்லாதவன் என்ற பட்டத்தை சூட்டினாங்க °°
°°அது எப்படி°°
°°நான் கட்டிக்கிட்டு வந்த உங்க மாமியார் ரொம்பரொம்ப ஏழ்மையானவங்க கல்யாணம் பண்ணிக்கொடுக்கக்கூட கையில் ஒன்னும் இல்லாமல் இருந்த விஷயம் எனக்கு தெரிய வந்தது, அவங்களை தவிர்க்க என் மனம் இடம் தரவில்லை
சீதனமாக அதை தருவாங்க இதைத் தருவாங்க என்ற எண்ணம் என்னை கடுகளவும் நெருங்காதிருந்தது அதனால என் அப்பா அம்மாவுக்கு தெரியாமல் என்னோட பிராவிடன்ட் பண்டுல இருந்து ஒரு அஞ்சி லட்சம் லோன் போட்டு அவங்களுக்கு கொடுத்தேன் மாதாமாதம் அந்த லோனை சமன் செய்ய ஐய்யாயிரம் கட்டாயிடும், என்ன பையன் சம்பளம் குறைவாக வருதே என்று சந்தேகப்பட்டு அவருக்கு தெரிஞ்சவரின் மகன் என் கூட வேலை பார்க்கிறார் எனக்கு தெரியாமல் அவருகிட்ட விஷயத்தை வாங்கி இருக்கிறார் வீட்டில் ஒரே ரகளை இப்படி பண்ணத்தான் படிக்க வச்சேனா என்று சொல்லி திட்டுவாரு அப்பா, அதே காரியத்தை இன்னைக்கு மாப்பிள்ளை நீங்க செய்றீங்க, உங்க வீட்டில் பூகம்பம் என்னைக்கு வெடிக்கப்போவுதோ என்கிற ஒரு அச்சம் அதனால்தான் சீமந்தத்திற்காக நீங்கள் கொடுக்கவந்த பணத்தை தயங்கி தயங்கி வாங்கினேன் °°
°°மாமா எனக்கு உங்க மகளை ரொம்பப் பிடிக்கும், அதை உங்ககிட்டேயே சொல்லக்கூடாது என்று சொல்லாமல் இருந்தேன், அவளுக்காக நான் என்ன வேணுமின்னாலும் செய்வேன் ஏன்னா உங்க அம்மா உங்களுக்கு துணையாகவோ, சாதகமாகவோ இருக்கிறாங்களோ இல்லையோ அது எனக்குத் தெரியாது ஆனால் உங்க அம்மா முதலில் அவங்க பேத்திக்கும் பிறகு எனக்கும் துணையாகவும் பாதுகாப்பாகவும் ஒரு நல்ல ஆலோசகராகவும் இருக்காங்க என்பதை நான் முழுக்க முழுக்க நம்புறேன் அந்த தைரியத்தில தான் நான் இத்தனையும் செய்றேன் மாமா கவலையை விடுங்க°° என்றான் சுந்தரம்
°°அப்படி இல்லை மாப்பள இந்த காலத்தில் உயிரோடு இருக்கிறவங்க
உரை உரைன்னு உரைச்சாக்கூட யாரும் மதிக்கிறது இல்லை, இதில் செத்தவங்க வந்தாங்க சொன்னாங்க போனாங்க எங்கிறீங்களே அதன்படியும் நடக்கிறீங்க நிறைவேறவும் செய்யிதே அதை நினைக்கும் போது ரோமம் எல்லாம் நிக்கிதுங்க மாப்ளே அதைத்தான் சொல்லவந்தேன் °°
கனவு என்பது எல்லோருக்கும் பலிப்பதில்லை யார் மீது அதிக பற்று கொண்டிருந்தார்களோ அவர்களை பிரிந்து சென்ற ஆன்மாக்கள் அவர்களை மறப்பதில்லை நினைவிலேயே இருக்கும்
°°மாமா என்வேலை நல்லபடியா முடிஞ்சிருச்சி இப்போ மைன்டனன்ஸ் பீரியடு ஒரு வருஷம் அது முடிஞ்சதும்
உங்க அம்மாவுக்கு நன்றிகடன் செய்யனும் அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள் மாமா°° என்றான் சுந்தரம்
°°அது என்ன மைன்டனன்ஸ் வேலையை முடித்து கொடுத்ததும், நம்ம வேலை முடிந்து போவதில்லையா பிறகென்ன°°
°°மாமா பில்டிங்கை ஹாண்டு ஓவர் பண்ணபிறகு ஏதாவது ஓட்டை ஒடைச்சல் இன்கேஸ் ஏற்பட்டால் அதை நம்ம செலவில சரிபண்ணி கொடுக்கணும் அவ்வளவுதான்; நான் அந்த அளவுக்கு வேலை நல்லபடியாக சூது வாது இல்லாமல் நானே அருகில் இருந்து செய்து கொடுத்திருக்கிறேன்; எந்த ஒரு கலப்படமும் இல்லை, எந்த ஒரு கண் துடைப்பும் இல்லை, எந்த வித ஒலிவு மறைவுமில்லை அதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை; இது டெண்டரில் உள்ள விஷயம் நாம கடைபிடிக்கனும் அவ்வளவுதான்°°
°°அதுக்குள்ள பேரன் பிறந்து விடுவான் மாப்ளே °°
°°என்ன சொன்னீங்க பேரனா நோ சான்ஸ், பேத்திதான் பிறப்பாங்க அவங்களுக்கு "சம்பூரணி" என்று தான் பெயர் வைக்கப்போறேன் °° என்றான் சுந்தரம்
°°இல்லை மாப்ளே பையன்தான் பிறப்பான் °°
°°இல்லை " சம்பூரணி" தான் பிறக்கப்போறாங்க °°
°°என்ன பந்தயம் கட்டுறீங்க °°
°°என்னவேணுமின்னாலும் ஓக்கே°°
°° நான் சுகாதார சூழலை வைத்து சொல்கிறேன், ஆமாம் நீங்க எதைவச்சி இவ்வளவு கண்டிப்பா அடிச்சி சொல்றீங்க மாப்ளே °°
°°அப்படி கேளுங்கள் சொல்கிறேன் அந்த சம்பூரணி அம்மாவே உங்க மகள் வயிற்றில் பிறக்கப்போறதா சொல்லிட்டாங்க; இவ்வளவு நிறைவேறி வந்து நிறவேறியும் விட்டது இது நிறைவேறாமல் போகாது என்பது எனது நம்பிக்கை அதவச்சி தான் அடிச்சி சொல்றேன் மாமா°° என்றான் சுந்தரம்
மாமா அமைதியாகிவிட்டார் கண்களில் வைர துளிகள் உருகி கண்ணத்தின் மேல் வழிகிறது அதைக்கண்டு எல்லாரும் அமைதியாகிவிட்டார்கள் °°அப்படி என்றால் நான் என்னை பெத்த தாயை மீண்டும் பார்க்கவேண்டிய பாக்கியம் எனக்கு கிடைக்கப்போகிறது என்பதை நினைத்தேன் கண்கள் கலங்கியது °°
சுந்தரம் சொன்னது போலவே சம்பூரணி அம்மாவே பொறந்துட்டாங்க, குழந்தை யோடு நன்றி கடன் செய்ய புறப்பட்டார்கள் அங்கேயே "சம்பூரணி" என்று நாமம் சூட்டினார்கள், வீட்டுக்கு வந்தார்கள் சுந்தரத்தின் மாமனார் தனது காலமான அம்மாவின் படத்தை அகற்றினார், எல்லாரும் கேட்டார்கள் °°ஏன் படத்தை அகற்றுகிறீர்கள்°° என்று
°°எங்க அம்மா சாகவில்லை உயிரோடு இருக்கிறார்கள்; பிறகு எதற்கு படம், அதற்கு மாலை, அணையா விளக்கு, அதற்கு என தனி மாடம் இனி எதுவும் வேண்டாம் அதனால்தான் எடுக்கிறேன்°° என்றார் சுந்தரத்தின் மாமனார்
எல்லாம் அமைதியாகிவிட்டார்கள்
°°பேத்தி பாசம் இருக்க வேண்டியது தான் இது அளவை கடந்த பாசமாக இருக்கிறது °°
°°ஹல்லோ .. திருத்தம்.... பிறந்தது பேத்தி இல்லை எனது அம்மா ஞாபகம் இருக்கட்டும்°° கண்ணை துடைத்துக்கொண்டு சொன்னார்
°°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்