என் அப்பத்தா

எட்டாம் வகுப்பு வரைதான் படித்துவிட்டு தனக்கென்று அப்பா அம்மா சம்பாதித்து வைத்து விட்டு போன கொஞ்சம் நிலம் அதில் விவசாயம் செய்துக்கொண்டு இருந்தான் ஏழுமலை

இதில் மாத சம்பளம் கிடையாது, பிராவிடன் பண்டு பிடிப்பது கிடையாது, லோன் எடுக்கவோ அடைக்க முடியாமல் பைநெல்லை நம்பி கைநெல்லை இழக்கவோ அவசியம் இல்லை, ரிட்டயர்மெண்டு கிடையாது, செட்டில் மென்ட் கிடையாது, ஓய்வூதியம் கிடையாது, காலமாயிட்டா அக்கவுன்ட் க்ளோஸ் கிடையாது, நானே ராஜா நானே மந்திரி, நானே முதலாளி நானே தொழிலாளி, முதுகு வளைத்து உழைத்தால் பணக்காரனும் நானே, சொம்பி வந்து முடங்கி கிடந்தால் ஏழையும் நானே, என்பதில் மட்டும் யாரும் எவரும், எதுவும் கருத்து சொல்ல முடியாது.

அப்பத்தா ஆயிசு ரொம்ப கெட்டி, தைரியக்காரி, அதனால் தானோ என்னவோ, பெத்த மகனையும் மறுமகளையும் வாரி கொடுத்துவிட்டு, பேரனை நல்லபடியாக பார்த்துக் கொண்டாள் அஞ்சேமுக்கால் அடி உயரம், உயரத்திற்கு தகுந்தாப்போல உடல் கட்டு ஒரு கவலையும் இல்லாமல் வளர்ந்தவன், அப்பத்தா இருக்கும் நிலத்தில் பேரனை வேலை செய்ய விடுவதில்லை களை எடுக்க, வரப்பு கழிக்க, ஏரு உழ, நாற்று இட, நாற்று பறிக்க, நடவு நட எல்லாம் கூலியாட்களை வைத்து செய்துக்கொள்வாள்

பேரனுக்கு தெக்கத்திய வண்டிமாடு ஒரு ஜோடியும், வட்டிக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தாள், அதுகளை அக்கறையோடு பார்த்துக்கொண்டான் வண்டியை , வண்டியில்லாதவர்களின் விளைந்த தானியத்தை கமிட்டிக்கு கொண்டு போக, தட்டுமுட்டு சாமான்களை ஏற்றிச் சென்று சொல்லும் இடத்தில் இறக்குவது அதற்கு அவர்கள் கொடுக்கும் பணத்தை இந்த பொடி, பீடி, குடி, லேடி, சூது , நொறுவு எந்த பழக்கமும் கிடையாது அப்பத்தாவிடம் பைசா செலவு பண்ணாமல் கொண்டுவந்து கொடுப்பான், அந்த வேலையில்லாத நாட்களில் தம் நிலங்களை உழுவதில் அக்கறை காட்டுவான், இது அவனே அப்பத்தா சொல்லாமல் விரும்பி செய்வது

அவன் கல்யாண வயதை நெருங்கிவிட்டான் மேலும் வயதானாலும் கல்யாணம் பண்ணாத கபோதி என்று ஏளனமாக பேசுவார்கள் அதனால் காலாகாலத்துல கல்யாணத்தை ஆறப்போடக்கூடாது இது அப்பத்தாவின் பெருங்கவலையாக இருந்தது, அதே சிந்தனை,சரிவர தூங்கு வதில்லை, வழக்கத்துக்கு மாறாக படுப்பது, வழக்கத்துக்கு மாறாக எழுவதுமாக இருந்தாள்

ஒரு அழகு என்றால் அழகு, அப்பத்தா லெவலுக்கு எதனோடும் ஒப்பிடமுடியாத அழகு வயக்காட்டு வேலை என்றால் பொருமையோடு, பொருப்போடு, அவளே மனதிருப்தி கொள்ளும்வரை செய்வாள் பெருமை படவேண்டிய விஷயம்

பேசரி கல்லு மூக்குத்தி அவள் முகத்தை மேலும் அழகு படுத்திக்காட்டும் உலக அழகி அவ கெட்டா அப்படியொரு அழகு

வீதியில் நடந்து போகும் போது தள்ளாடும் கிழவன்கள் கூட கோட்டரு ஊத்திக்கிட்டதைப் போல் கிரங்கிபோய் விடுவார்கள், °°எனக்கு வயது ஏன் தான் ஆனதோ, ஆசைபட்டதை அனுபவிக்கும் அதேஷ்டம் இல்லையே, ஆற்றில் ஓடும் நீரை அள்ளிக் குடிக்க முடியலையே°° என்று வருந்துவார்கள்

அப்பத்தா; இவ்வளவு அழகு வாய்ந்தவளை நம் பேரனுக்கு கேட்டால் தருவாங்களோ மாட்டாங்களோ என்ற சந்தேகம், பொண்ணு கேட்க போவலாமா வேணாமா என்ற சிக்கலில் சிக்கியிருந்தாள் அப்பத்தா

அப்பத்தா கொஞ்ச நாளாவே முகம் கொடுத்து பேசமாட்டேங்குதே ஒரு வேளை மண்டையை போடப்போவுதோ
அப்பத்தா மண்டையை போட்டுவிட்டால் ஒரு பையல் நம்மை மதிக்கமாட்டான் என்ற வருத்தம் °° அப்பத்தா கொஞ்ச நாளாவே ஆழ்ந்து சிந்திக்கிறீங்க போல இருக்கு, அப்பத்தா நீ இப்படி இருக்கிறதை பார்க்கும் போது எனக்கு பயமா இருக்கு அப்பத்தா என்னை ஏன் இப்படி பயமுறுத்துறே, என்ன உடம்புக்கு முடியலையா, வாங்க ஆஸ்பத்திரிக்கு போகலாம், உடம்புக்கு என்ன பண்ணுது அப்பத்தா °° என்று கேட்டான் ஏழுமலை

°° உடம்புக்கு ஒன்னும் இல்லையடா பேராண்டி மனசு சரி இல்லையடா°° என்றாள் அப்பத்தா

°° ஏன் அப்பத்தா என்னாச்சி மனசுக்கு உங்க வீட்டுக்காரர் நெனப்பு வந்துடுச்சா °°

°° அது இல்லையடா பேராண்டி °°

°° பின்னே இதுதான்னு மனசு விட்டு சொன்னா தானே தெரியும் அப்பத்தா °°

°° கல்யாணம் பண்ணனும்டா °°

°° பாருடா... பாட்டிக்கு ஆசையை போயும் போயும் இந்த வயசிலா, ஆமாம் யாரு மாப்பிள்ளை, மாப்பிள்ளை பாத்தாச்சா அப்பத்தா, யாரையாவது மனசில வச்சிருக்கியா அப்பத்தா, அது யார்ன்னு மட்டும் சொல்லு கையை காலைக்கட்டி வண்டியில தூக்கி போட்டுக்கிட்டு வந்து உம்முன்னாடி நிறுத்துறேன் அப்பத்தா சொல்லு...சொல்லு...சீக்கிறத்தில் சொல்லு °°

°° எனக்கில்லடா கூழுமுட்ட உனக்கு °°

°° எனக்கா அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிற வயசுக்கு வந்துட்டேனா, பொண்ணு பாத்துட்டியா, பொண்ணு யாரு அப்பத்தா °°

°° பாத்துட்டேண்டா கேட்டா கொடுப்பாங்களோ மாட்டாங்களோன்னு தான் ஒரே கொழப்பமா இருக்குடா பேராண்டி °°

°° அப்பத்தா நீ பார்த்த பொண்ணை காட்டு எனக்கும் புடிச்சி இருந்தால் கேக்கவெல்லாம் வேணாம் தூக்கிக்கொண்டு வந்துடுறேன் °°

°° கிழிச்சே°°

°° அப்பத்தா நான் யாரு உங்க பேரன் எங்கிறதை நிருபித்து காட்டுறேன் °°

°° அப்படி ங்கிற....°°

°° அப்பத்தா பொறப்படு பொண்ணு நம்ம ஊரா இல்லை வெளி ஊரா°°

°° பக்கத்து ஊரில்தான், நாம யாரு எதுக்கு வந்திருக்கோமுன்னு யாருக்கும் தெரியக்கூடாது மொதல்ல பார்ப்போம் உனக்கு புடிச்சி இருந்தால் மட்டும்தான் மேற்கொண்டு முயற்சி பண்ணுவோம்°°

°° சரி அப்பத்தா °°

பறப்பட்டு போனார்கள் ஊரை அடைந்தார்கள் ஒரு பையனோட அந்த பெண் பேசிக்கொண்டு வந்தாள்

°° அந்தா வராளே அவளத்தான்டா பேராண்டி என்றாள் °°

°° அப்பத்தா இவளையா பார்த்தே ஐ...யோ... கிளியோபட்ராவை போட்டோவில் பாத்திருக்கேன் அவளைவிட அம்சமாக இருக்கிறா அப்பத்தா நம்ம தமிழ் பொண்ணு தமிழ் பொண்ணுதான் அப்பத்தா இரு இரு கொஞ்சம் நில்லு அப்பத்தா எட்டாவதிலே ஏங்கூட படிச்சவனோட பேசிக்கிட்டு இருக்கிறா ஒரு வேளை அவன் அமுக்கிட்டானோ நாம காலம் தாழ்த்தி வந்திருக்கோம் அப்பத்தா °°

°° இருடா பேராண்டி அந்த டீ கடை காரருக்கிட்ட கேப்போம், ஏங்க அதோ அந்த மரத்துக்கடியில் ஒரு பையனும் ஒரு பொண்ணும் பேசிக்கிட்டு இருக்காங்களே அவங்க யாருண்ணு சொல்ல முடியுமாங்க°°

° ° அந்த பையன் என் மகன் அந்தப் பொண்ணு என் மகள் ஏன் கேட்கிறீங்க°°

°° தூக்கி வாரி போட்டது. போல் அப்பத்தா திடுக்கிட்டுப் போனாள் °°

°° என்ன பையனுக்கு பொண்ணு பார்க்கிறீங்களா°°

°° முட்டி முணகி...ம்....ஆமாங்க என்றாள் அப்பத்தா °°

°° என்ன பொண்ணை புடிச்சி இருக்கா °°

°° என்னங்க இது புடிக்காமலா பார்க்க வந்திருக்கோம் எந்த மடையனாவது புடிக்கலன்னு சொல்லு வானாங்க அந்த அழகு சுந்தரியை °°

°° அவங்க இரண்டு பேரும் என் புள்ளைங்க இல்லீங்க °°

°° என்னங்க இப்போ தான் என் மகன் என் மகள்ன்னு சொன்னீங்க இப்போ குண்டை தூக்கி போடுறீங்களே °°

°° அவங்க இரண்டு பேரும் பள்ளிக்கூடம் போய் இருக்கையிலேயே எரிவாயு பானை வெடிச்சி அவங்களோட அம்மா காலமாயிட்டாங்க, காப்பாத்த போன அப்பாவும் போய் சேந்துட்டார், அப்போ பையனுக்கு எட்டு வயசு பொண்ணுக்கு ஆறு வயசு அதில் இருந்து நான்தான் அவங்களுக்கு எல்லாமும் என்னை அவங்களும் சித்தப்பான்னு சொல்லி கூப்பிட மாட்டாங்க அப்பான்னுதான் கூப்பிடுவாங்க அதவச்சி என் மகன் என் மகள்ன்னு சொன்னேங்க , எங்க குடும்பம் கூட்டு குடும்பம் அதனால அவங்க இரண்டு பேரையும் வீட்டில் இருக்கிறவங்க தாயி தகப்பன் இல்லாதவங்கன்னு, படாத பாடு படுத்துறாங்க அதுக்காக அவங்களுக்கும் எனக்கும் மனஸ்தாபம் வரும் , இவங்க இரண்டு பேர் நலனுக்காக அவங்ககிட்ட அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டு பேசாமல் இருப்பதுண்டு, அத வச்சி இது இரண்டுக்கும் ஒரு நல்லக்காலம் பொறக்காதான்னு வேண்டிக்குவேன் அதனால் தானோ என்னவோ உங்களை நான் வணங்கிய தெய்வம் கொண்டு வந்து விட்டிருக்கோன்னு நினைக்கும் போது உடம்பெல்லாம் புல்லறிக்கிதுங்க ஒரு நல்ல நாள் பார்த்து வாங்க பேசிக்கலாம் பையனோட பெத்தவங்க வரவில்லையா°° என்றார் டீ கடைக்காரர்.

°° என் பேரனோட கதையும் அப்படித்தான், அப்பா அம்மா இரண்டு பேருமே இல்லை அவன் சிறுவனாக இருந்த போதே தீபாவளி நாள் எங்க வீடு கூரை வீடு சொர்வானம் விட்டு இருக்கிறார்கள் அதன் பொறி விழுந்து எரிந்து விட்டது இரவு நேரம் எட்டு தூலம் வீடு சாம்பலாகி போச்சி பேரன் அவங்க அம்மா அப்பா கூட எப்பவும் படுக்கமாட்டான் எனக்கென இரண்டு தூலம் வீடு அவன் என்னோடு தான் படுத்துப்பான் அதனால் அவன் தப்பிச்சான் அன்னையில இருந்து இன்னையவரைக்கு அவனுக்கு எல்லாமும் இந்த அப்பத்தா தான்°°

°° இரண்டு பேர் நிகழ்வுகளும் ஒரே மாதிரி இருக்கே சரி ஒரு நல்ல நாள் பார்த்து சேதி அனுப்புங்கள் இந்த நாளில் பெண் பார்க்க வரோமுன்னு நாங்க காத்திருக்கிறோம்.°°

மறாவது வாரத்தில் பெண்ணை பார்த்து நிச்சயம் பண்ணியாகிவிட்டது

பக்கத்து பட்டிணத்துக்கு புது படம் வந்தால் நாலு ஐந்து பேர் வண்டி கட்டி பறப்பட்டு போவது வழக்கம் பாதி வழியில் ஒரே கூட்டமாக இருப்பதை கண்டு அருகில் போனார்கள் அங்கே பட்டாளத்துக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று ஒரே கூட்டம் °°டேய் படம் நாளைக்கு கூட பார்த்துக்கொள்ளலாம் நாமும் முயற்சி பண்ணி பார்ப்போமே°° என்று விளையாட்டு தனமாக போய் பெயர் கொடுத்தார்கள் என்ன ஆச்சரியம் அந்த ஐந்து பேரும் தகுதியானவர்களாக சேர்த்து கொள்ளப்பட்டார்கள் அதேஷ்டம் என்பது அணையை உடைத்துக் கொண்டோடும் ஆற்று வெள்ளம் போன்றது

°°படித்துவிட்டு ஒரு வேலைவித்தியை புள்ளைங்க புடிக்குமுன்னு இல்லாமல் ஊரை சுத்திவந்தா சோறு எப்படி கெடைக்கும் மூனு வேளையும் கொட்டிக்க வர்றீங்க இல்லை இந்த வயசான காலத்திலே யாரு ஜென்மத்தை செருப்பால் அடிச்சி சம்பாதித்து உங்க கொலையில கொட்டுறது °° என்று தம்மை கூறிய பெற்றோரின் வாயை அடைக்க நமக்கு கடவுள் காட்டின வழி இது கடவுளே உமக்கு கோடி நன்றியப்பா என்று கண் கலங்கினார்கள் ஏழுமலையின் கூட இருந்தவர்கள்

என்னை எங்க அப்பத்தா ஒரு துரும்பை ஒடிச்சி மேலபோடாது சரியாக சொல்லப்போனால் நிச்சயம் செய்துவிட்டுவந்த பொன்னம்மாளின் அதேஷ்டம் என்று அப்பத்தா சொன்னாலும் சொல்லுவாங்க என்று நினைத்து கொண்டான்

உடனே ஏழுமலை தனது ஊர்காரரிடம் சொல்லி அப்பத்தாவுக்கு சேதி சொல்லச் சொன்னான், அப்படியே என்னோட பள்ளி சான்றிதழ் என் பெட்டியில ஒரு துணிப்பையில வச்சிருக்கேன் அதை எடுத்து கொடுக்க சொல்லி வரும் போது வாங்கியாங்க அவரோட பையனும் இருக்கான் அவரும் அவர் பையனோட சான்றிதழ் எடுக்கத்தான் வந்திருக்கேன்னு கண்டிப்பாக மறக்காம சொல்லுங்க இல்லையானா அப்பத்தா என்னை காணவில்லை என்று அழுதே செத்தாலும் செத்துவிடும் அப்புறம் நான் அனாதையாகிவிடுவேன் ஐயா, உங்க காலில் வேணும்னாலும் விழுறேன் மறக்காமல் சொல்லச்சொல்லி அனுப்பினான் ஏழுமலை

பயிற்சி முகாமுக்கு கொண்டு சென்றார்கள் அப்பத்தாவுக்கும் நிச்சயித்த பெண்ணுக்கும் கடிதம் போக்கு வரத்து தொடர்ந்தது

ஓராண்டு முடிய விடுமுறை கிடைத்தது ஊருக்கு வந்தான் நிச்சயம் செய்து வைத்திருந்த பொன்னம்மாளை கல்யாணம் செய்துக்கொண்டான் ஒரு மாதம் விடுமுறையை கழித்து விட்டு மீண்டும் தனது பணியை தொடர புறப்படும் போது தனது மனைவியின் அண்ணனையும் கூடவே அழைத்துப் போனான் முதலில் கார்டனில் சேர்த்தான் ஆறு மாதத்திற்கு பிறகு பட்டாளத்தில் சேர்த்து கொள்ளப்பட்டான்

கூட்டுக்குடும்பத்தில் அண்ணனும் தங்கையும் பட்ட கஷ்டத்திற்கு கடவுள் நல்ல காலத்தின் கதவை திறந்துவிட்டான் அக்குடும்பத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தப்பாவை மட்டும் அவர்கள் மறக்க வில்லை அதைக்கண்டு மற்றும் உள்ளவர்கள் வயிறு எரிந்தார்கள்

அங்கே கூட்டாக இருந்த குடும்பம் பங்கு பாகங்களை பிரித்துக்கொண்டு தனியாக பிரிந்துவிட்டார்கள் பையனின் பெண்ணின் பங்கை சித்தப்பா உரியவர்களாகிய தன் அண்ணன் மகனுக்கும் மகளுக்கும் சேர வழி கோலினார்

தற்போது பிரிந்தவர்கள் பிச்சை எடுக்கும் நிலமையை அடைந்தார்கள்

ஏழுமலை தன் மனைவியின் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி தன் ஊரிலேயே குடியமர்த்தி வைத்தான் அவன் கல்யாணத்திற்கு பிரிந்த உறவுகள் யாருமே வரவில்லை ஒரு பின்னைக்கூட கல்யாண பரிசாக வழங்க வாங்க முடியாத நிலைக்கு வந்துவிட்டார்கள்

ஏழுமலை வீட்டில் கலப்பைக்காக செதுக்க மரம் இரண்டு மூன்று வைத்திருந்தான் அதை கலப்பை செய்ய தச்சனை வரவழைத்து செய்யச் சொல்லி கடிதத்தில் எழுதியிருந்தான், அதன்படி பொன்னம்மா அப்பத்தாவிடம் சொன்னாள்

ஒருவன் இராக்கூத்து கிருஷ்ணன் வேஷம் போட்டு தெருமேடையில் ஆடினால் உண்மை யான கிருஷ்ணன் போலவே இருப்பான் அவனுக்கு என்று ரசிகர்களுக்கு குறைவில்லை, கூத்து இல்லாத நாட்களில் ஏர் கலப்பை செதுக்கி கொடுப்பான் அவனை அப்பத்தா அமர்த்தினாள்

ஏழுமலையின் மனைவியை கண்டவன் தான் செய்யும் தொழிலை ஆற அமர செய்ய ஆரம்பித்து மேலும் நாள் எடுத்துக்கொண்ட முயற்சியது

அவளிடம் அனாவசியமாக பேச்சுக்கொடுப்பான் அவள் அசைந்து கொடுக்கமாட்டாள் அவன் எண்ணம் அவளை அடைய வேண்டும் இவனது தொழிலே இதுதான் என்பது ஊர்மக்கள் பேச்சில் இருந்து தெரியவந்தது

ஓரு நாள் யாருமில்லாத நேரம் பார்த்து சன்னல் வழியாக பார்த்தான் பொன்னம்மா நல்ல உரக்கதில் இருப்பதை அறிந்து தனது பையில் வைத்திருந்த சீசாவை எடுத்து ஒரு துண்டு துணியில் ஏதோ திரவத்தை ஊற்றி ஒரு மூங்கில் குச்சியில் முனையில் கட்டி கொண்டுபோய் அவள் மூச்சுவிடும் மூக்கருகில் காட்ட கையை நீட்டினான்

கிழக்கு பக்கம் சன்னல் மேற்கு பக்கம் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த சாமிப்பட கண்ணாடியில் தச்சனை அவன்தான் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டாள் தெரியாதது போல் படுத்திருந்தாள்

தெருவில் ஒரு டெம்போவில் வெங்காயம் கிலோ பத்து ரூபாய், பூண்டு கிலோ இருபது ரூபாய் உருளைக்கிழங்கு பத்து ரூபாய்க்கு ஒன்னரை கிலோ என்று ஒலி பெருக்கியில் கத்திக்கொண்டு வருவதைக்கண்டு ஒன்றும் தெரியாதவர் போல் கலப்பையை சுராய்ந்து கொண்டிருந்தான்

இதைகவணித்தவள் வீட்டில் குடும்ப அட்டையில் வாங்கி வைத்திருந்த மண்ணெண்ணையையும் வத்திப்பெட்டியையும் தாயாராக எடுத்து வைத்து கொண்டாள் மீண்டும் முன்பு படுத்திருந்தது போலவே படுத்திருந்தாள்

டெம்போக்காரன் கத்திக்கொண்டே நகர்ந்து விட்டான் தச்சன் மீண்டும் சன்னல் வழியில் மூங்கிலை நீட்ட மூச்சு விடாமலும் முச்சு இழுக்காமும் மூச்சு கட்டினாள்

அவள் மயங்கிவிட்டாள் என்று எண்ணி மெல்ல உள்ளே வந்து அவள் மேல் கையை வைத்தான் உடனே அவள் எழுந்து தயாராக வைத்திருந்த எண்ணையை அவன்மேல் ஊற்றி தீ வைத்துவிட்டாள் தீப்பிடித்து எரிய வெளியில் ஓடினான் அங்கே மாட்டுக்கு தண்ணிகாட்டும் தொட்டியில் விழுந்து தீயை அனைத்து கொண்டு தச்ச சாமான்கள் வைத்திருந்த கோணியை தோளில் போட்டு முகத்தை மறைத்து க்கொண்டு தன் வீட்டுக்கு ஓடிவிட்டான்

தலைமுடி ஒன்னு கிடையாது எல்லாம் பொசுக்கி போய் மொட்டையாக மேலே போட்டிருந்த துணியும் எரிந்து போக அறைகுறையாக கோணியால் மறைத்து கொண்டு ஓடினான்

வீட்டில் இருந்தவர்கள் விசாரிக்க மூச்சு விடவில்லை வேறு ஏதேதோ பொய்யைச் சொன்னான் அதை யாரும் நம்பவில்லை

அப்பத்தா வயக்காட்டில் இருந்து வீட்டுக்கு வந்தாள் °°என்னம்மா பொன்னம்மா வீடெல்லாம் சீமையெண்ணை நாத்தமா அடிக்குதே கீழே ஊத்திக்கொண்டதா ஜாக்கிறதையா பாக்கிறதில்லையா பக்கத்தில் நெருப்பு கிருப்பு இருந்திருந்தால் நிலமை என்ன ஆகியிருக்கும்°° என்று கேட்டாள்

°°ஆமாம் பாட்டி°° என்று சொல்லிவிட்டாள்

°°தச்சன் இன்னைக்கு வரலையா°° என்று கேட்க

°°தெரியலையே பாட்டி °°என்றாள்

°°சரிவிடு நாளைக்குவருவான் ஒன்னும் அவசரம் இல்லை °°

°°இனிமேல் வரவேமாட்டான் பாட்டி°° என்று மனதுக்குள் சொல்லி க்கொண்டாள்

ஒரு நாள் அப்பத்தா தவறி தண்ணீர் இரைத்துவிட்ட கிணற்றில் விழுந்து மண்டையில் அடி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள் பொன்னம்மா தன் கணவனுக்கு சேதி அனுப்பினாள்

கேசுவல் லீவில் அலறியடித்து ஓடி வந்தான் ஏழுமலை , அழுகையான அழுகை நினைத்து நினைத்து அழுதான் ஆஸ்பத்திரியே ஆச்சரியமாக பார்த்தார்கள், பெத்த அம்மா அப்பாவையே கண்டும் காணாமல் இருக்கும் இந்த ஜனரேஷன்ல அப்பத்தாவுக்காக உயிரை வட்டுக்குவான் போல இருக்கே அப்படி அழறான் பேராண்டி என்று நினைக்கும் போது வருந்தமா இருக்கு, நமக்கு வாய்த்ததுங்க கொடுக்கிற இடத்தில் கறக்கிறவங்களா இருக்காங்க இந்த மாதிரி நம்ம குடும்பத்தில வந்து பிறக்கவில்லையே என்று வருந்தினார்கள்

அருகில் இருந்வர்கள் ஏதேதோ அவர்களால் முடிந்தவரை தேத்தல் மாத்தல் சொன்னார்கள்

°°ஐயா…நான் அதேஷ்டம் இல்லாதவன் தரித்திர பிறவி, நான் பிறந்ததும் என் அப்பா அம்மாவை பறிகொடுத்தேன், எனக்கு இருந்த ஒரே பலம் என் அப்பத்தா மட்டும் தான் அவங்க பொம்பளைக்கு பொம்பளை ஆம்பளைக்கு ஆம்பளை, என் அப்பா அம்மா சாகாமல் இருந்திருந்தால் கூட என்னை என் அப்பத்தாவை போல் கவனித்து இருப்பாகளோ , அன்பு பாசம் இவைகளை என்மேல் பொழிந்து இருப்பார்களோ என்பது சந்தேகமே அப்படிப்பட்ட என் தந்தை யின் தாய் எனக்கும் தாய்தான் இப்போ அவங்களையும் பறிகொடுத்து விட்டிருப்பேனே °° என்று கதறினான்


அப்பத்தா குணமடைந்தார்கள் ஏழுமலை அப்பத்தாவை பார்த்ததும் லீவு இல்லாத காரணத்தால் அப்பத்தாவை விட்டுப்போக மனம் இல்லாதவனா போய் சேர்ந்தான்

பொன்னம்மாளை அப்பத்தா கேட்டாள் தச்சன் வந்தானா கலப்பை செதுக்கி தந்தானா தரவில்லையா என்று கேட்டாள் அப்பத்தா

மருமகள் நடந்ததைச் சொன்னாள் அதனால் வேணுமென்றே மண்ணெண்ணையை அவன் மேல் ஊத்தி நெருப்ப கொளுத்தி போட்டுட்டேன் பாட்டி

அப்படியா கதை இவனால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையை இழந்து புருஷன்மார்களால் சிக்கறுத்துக்கொண்ட நாலு பெண்கள் இவன்கூத்தாட்டத்திற்கு மயங்கி கருவை தாங்கி நாலு பேருக்கும் பிறந்த பிள்ளைகள் இவனை அச்சடித்தது போலவே பிறந்திருந்ததினால் விரட்டப்பட்டார்கள் அந்த நாலுபேரின் பிள்ளைகளையே இவனுக்கு எமனாக மாற்ற வாய்ப்பு இருக்கிறது அதற்கு……

°° நல்ல யோசனை °° அப்பத்தா அந்த நான்கு பேரையும் நியமித்து யாருக்கும் தெரியாமல் அரவம் இல்லாத இடத்திற்கு தச்சனை கொண்டு போய் மரத்தில் கட்டி போட்டு நாலு அறை விட்டு, நாலு குத்துவிட்டு °°எங்க நாலு பேரையும் தெரியுமா °°என்று விஷயத்தை கேட்டார்கள்

°°பார்க்க என்னைப்போலவே இருக்கீங்க உலகத்திலே ஒரு உருவத்தைப்போல ஏழு பேர் இருப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன் இப்போ நீங்க நாலுபேர் என்னை சேர்த்து ஐந்து பேரைக்கண்ணால் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது உண்மை யிலேயே நான் ரொம்ப ரொம்ப கொடுத்துவைத்தவன் தான், இன்னும் அந்த இரண்டு பேர் எங்கே இருக்காங்களோ °° என்றான்

°° உன்னை சுதந்திரமா விட்டா அந்த இரண்டு பேரையும் நீயே உருவாக்கிவிடுவேடா°° என்றார்கள் அந்த நாலு பேரும்

°°என்ன சொல்றீங்க°°

°°அவனுக்கு ஒன்னும் இப்போ தெரியாது °°


ஒரு பலமான குத்து பல்லே விழுந்தது
°°பொன்னம்மா கிட்ட நீ காட்டிய புத்திசாலி தனத்தை சொல்லு °°


°°இருங்க…… பொருங்க….... எல்லோரும் நான் விரிக்கும் வலையில் விழுந்து விட்டாங்களே, இவங்க விழமாட்டாங்களா என்ற நப்பாசையில் நானா பேச்சி கொடுத்து பார்த்தேன்
அவங்க காதுல வாங்காதமாதிரி போயிட்டாங்க மறுபடி அவங்க என் எதிரில் வரவே இல்லை ஒரு நாள் ஜன்னலை லேசாக திறந்து பார்த்தேன் உள்ளே தூங்கிக்கிட்டு இருந்தாங்க
நான் எப்பவும் மயக்கத்திரவம் வச்சிருப்பேன் அன்னைக்கு வீட்டுக்கு ஓடி அதை மறைத்து கொண்டு வந்து அவங்க மூக்கு கிட்ட காட்டினேன் அவங்க துவண்டு போயிட்டது தெரிந்தது அப்போது நான் என் தேவையை நிறைவேத்திக்கொள்ள இருந்தேன் என் மேல மண்ணெண்ணையை ஊத்தி தீவச்சிட்டாங்க உண்மை யை சொல்லிட்டேன் என்னை விட்டுவிடுங்க°° என்றான்

அப்பத்தா யோசித்தாள் °°தப்பு என்னுடையது தான் நான் கலப்பை செதுக்கி வைக்கச்சொல்லி போயும் போயும் இவனை அமர்த்தினேன் பாரு அது என் தப்புதான், இவனை கூப்பிடாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தே இருக்காது°°

இப்போ இவனை என்ன பண்ணலாம் அவன் உங்க நாலுபேருடைய அன்னையர்க்கு செய்த துரோகத்துக்கு தண்டனையாக, அறுக்க வேண்டியதை அடியோட அறுத்துட்டு வந்துவிடுங்க°° என்று சொல்லிவிட்டு அப்பத்தா இடத்தை விட்டு வந்து விட்டாள்....

°°பேசாமல் அவன் ஒத்துக்கொண்டதை வச்சி போலீஸ்ல ஒப்படைச்சிடுங்க பாட்டி °° என்றான் ஒருவன்

°°இது குடும்ப பிரச்சினை அதோட உங்க அன்னையரோட மானப்பிரச்சனை நமக்கு திருப்தி ஆனால் போதும் நாம் மரத்தடியில் நின்றிருக்கும் போது காக்கா குருவியின் எச்சம் விழுந்து விட்டால் என்ன செய்வோம் எச்சம் விழுந்த ஆடையை கழட்டி எரிந்து விட்டு நிர்வாணம் ஆகி நிற்போமா துவைத்து போட்டுக்கொள் வதில்லையா அப்படித்தான் போய்க்கொண்டே இருக்க வேண்டும் அவர்களை அசிங்கப்படுத்தி இன்னும் இழிபெயர் என்னும் சேற்றை வாரி பூசிக்கொண்டால் என்னாகும் நாறிக்கொண்டேதான் இருக்கும்°° என்றாள் அப்பத்தா

°°அவன் நம்மை போலீஸ்ல மாட்டிவிட்டுவிட்டால் பாட்டி °°

°°அவன்பண்ண தப்பு அவனுக்கே ஆப்பு அடிக்கும் என்பது அவனுக்கே தெரியும் அதனால அவனாக போக வாய்ப்பில்லை நீங்க பயப்படாதீங்க பாட்டி நானிருக்கிறேன், என் பேராண்டி லீவில் வருவான் உங்க நாலுபேரையும் பட்டாளத்தில சேக்க வழிபன்றேன், உங்க அம்மாக்களை தொறத்தினவங்க நாலுபேரும் தானா வந்து உங்கள ஏத்துக்கொள்ளுவாங்க, பாசத்திற்கா இல்லேன்னாலும் உங்க சம்பாதனைக்காக இது நடக்கும் நடக்கலன்னா நடக்கவைப்பேன் புரிஞ்சதா °°

°° புரிஞ்சது பாட்டி °°

மனசை சுத்தமா வையுங்கள் வர்ட்டா

°°°°°°°°°°°°°

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (8-Apr-19, 10:28 pm)
Tanglish : en appaththaa
பார்வை : 259

மேலே