சக்கரவாகம்

கல்யாணம் சட்டு புட்டுன்னு நடந்தது பையனுக்கு, ஒரே ஒரு வார லீவும் முடிஞ்சிருச்சி, முதலிரவுக்கு நல்ல நாள்; நல்ல நேரம் அருகில் இல்லை அப்படியே அம்போன்னு விட்டுவிட்டு மாப்பிள்ளை தாலி கட்டின உடனே பொண்ணு கிட்ட கூட இரண்டு வார்த்தை பேச முடியல ஏர்போர்ட் க்கு போயிட்டான் கிருஷ்ணா

°° ஏம்பா கிருஷ்ணா பொண்ணை கூடவே கூட்டிக்கிட்டு போலாமே°° என்றார் கிருஷ்ணா வின் அப்பா

°°ஆமாம்....கூட்டிக்கிட்டு போலாமே°° என்றார் நர்மதா வின் அப்பாவும்

°°ஐயோ அது ஒன்னும் மிடில் டவுன் இல்லை ; பெரிய டவுன், பொம்பளைங்கள வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு போகமுடியாது, இல்லாத பிரச்சினை க்கு ஆளாகவேண்டி வரும், இல்லேன்னா நானாவது விட்டுவிட்டு போறதாவது , இந்த வாடகை வீடு மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது; சும்மா பந்தாகாட்டுவாங்க, அங்க போய் பார்த்தால் தெரியும் அவங்க படும்பாடு , அதுக்காக கடன் வாங்கி கட்ட முடியாம ஐயோ அது பெரிய தலைவலி அங்கிள் ; இங்கே கப்பலாட்டம் வீடு இருக்கையிலே நமக்கு ஏன், பத்தாததுக்கு பாதுகாப்புக்கு நீங்கள் எல்லோரும் இருக்கிறீங்க இதைவிட பாதுகாப்பு அங்கே கிடைக்காதுப்பா; வேணுமுன்னா சொந்மா வீடு வாங்கலாம் அதைவிட்டா இதுதான் பெட்டர் அங்கிள் °°

°°ஆமாம் ஆமாம் அதுவும் சரிதான் வீண் விபரீதத்தை நாமே விரையம் செய்து வாங்குவது போல் ஆகிவிடக்கூடாது தான் சரி சரி°° என்றார் நர்மதாவின் தந்தை

வார கடைசியில் , மனைவி நர்மதாவுக்கு ஒரு மெசேஜ் வந்தது, அது இன்னதென்று வீட்டில் வேறு யாருக்கும் தெரியாது,
°° என் சிநேகிதிக்கு கல்யாணம் நான் போயிட்டு வந்துடுறேன்°° என்று காலையில் புறப்படுவாள் சாயங்காலம் வீட்டுக்கு வந்து விடுவாள் நர்மதா

ஒரு வாரம் கழித்து இன்னொரு சிநேகிதிக்கு கல்யாணம், °°அவள் என் கல்யாணத்திற்கு வந்திருந்தாள் நான் அவள் கல்யாணத்திற்கு போகலன்னா எப்படி கூட படித்தவள்°° என்று காலையில் புறப்பட்டு மாலையில் வந்துவிடுவாள்

மறுபடியும் ஒரு வாரம் கழித்து இன்னொரு °°சிநேகிதிக்கு குழந்தைக்கு முதல் பிறந்த நாளுக்கு°° போவதாக காலையில் புறப்பட்டு மாலையில் வந்து விடுவாள்

பிறகு ஒரு வாரம் கழித்து வேறொரு °°சிநேகிதிக்கு கல்யாணம்°° என்று காலையில் போனால் மாலையில் வந்துவிடுவாள்

மீண்டும் இரண்டு வாரம் கழித்து இதேபோல் போனால் மாலை வந்துவிடுவாள் ஒரு ஒன்னறை இரண்டு மாதம்வரை இப்படியே நடந்தது

வீட்டில் உள்ளவர்கள் கடுப்பாகி விட்டார்கள், சந்தேகிக்கப்படும் சூழல் உருவானது, அதே சமயத்தில் இரண்டு வீட்டாரின் தலப்பா கழண்டுவிடுமோ என்ற கௌரவப் பிரச்சினையும் அடங்கும்

°°முன்னாடியும் தொங்கிப்போச்சி , பின்னாடியும் இறங்கிப்போச்சி, முகமும் மினுமினுப்பு உண்டாகி மாறிப்போச்சி, மறுமகள் ஏதோ தப்பு பண்ணுகிறாள்°° என்று அவளை மனம் புண் படும் படிக்கு எரிந்து விழுந்தார்கள்

°°இத்தனை நாளாக வேலை வேலை என்று கிடந்தான்; கல்யாணம் வேண்டாம் என்றே சொல்லி வந்தான்; எப்படியோ அவனை தட்டி கொட்டி சம்மதிக்க வச்சி கல்யாணத்தை பண்ணி வச்சா; இவ ஏதோ கூத்தாடுறா இது அவனுக்கு தெரிஞ்சா எங்களைத் தான் வைய்யிவான்; இதை எப்படி கொண்டக்குறது ஒன்னும் புரியவில்லை °°என்று கிருஷ்ணாவின் அம்மா புலம்பினார்

°°முன்னால் போனால் முட்டுது பின்னால் போனால் ஒதைக்கிது எப்படியும் வாழ முடியாது போல் தெரிகிறது°° என்று வருந்தினார் நர்மதாவின் மாமி

ஒரு நாள் தலைசுற்றி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள் நர்மதா நல்ல வேளை வீட்டுக்குள்ளவே விழுந்து விட்டாள், இதுவே வெளியில் வீழ்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும், ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள் டாக்டர் °°உங்க மறுமகள் கர்பமா இருக்காங்க இது மூனாவது மாசம்°° என்றார் டாக்டர்

மாமியாருக்கு நாம நெனைச்சது சரியாப்போச்சி என்று நினைக்க நெஞ்சுவலி வந்துவிட்டது அந்த டாக்டர் சொன்னதைக்கேட்டு அதை அறிந்து செக் பண்ணிட்டு சத்தம் போட்டு நர்சுகளை அழைத்தார்

மாமியாரை அட்மிட் பண்ணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது டாக்டர் சொன்னதை மாமி யாருக்கும் சொல்லவில்லை காரணம் சொல்லும் நிலையில் மாமி இல்லை

சம்மந்தி அட்மிட் ஆகியிருப்பதை கேள்விபட்டு பெண்ணின் அப்பாவும் அம்மாவும் ஆஸ்பத்திரி வந்தார்கள்
விசாரித்தார்கள்°° உடம்புக்கு என்ன°° என்று பெண்ணின் மாமனார் சொன்னார் °°அதிர்ச்சி தரக்கூடிய சம்பவத்தையோ இல்லை சங்கதியையோ கண்ணால் பார்த்தாலும் இல்லை காதால் கேட்டாலும் இந்த மாதிரி நெஞ்சில் வலி வந்துவிடும் இது இரண்டாவது முறை என்ன என்பதை சொல்லும் ஸ்டேஜில இப்போ அவள் இல்லை இதே போல் மூன்றாவது முறையும் வந்து தம்மை தனிமை படுத்தி விட்டு போய்விடுவாளோ என்ற பயம் உள்ளுக்குள்ளே, கத்திரிக்காய் வெளைஞ்சிட்டா கடத்தெருவுக்கு வராமலா போய்விடும் என்று நானும்பொருத்திருக்கிறேன்°° என்றார்

ஏதோ உள்குத்து இருக்கிறமாதிரி தோன்றியது நர்மதாவின் தந்தைக்கு, அதை காட்டிக் கொள்ளாமல், °° இது வீட்டில் ஆனதா இல்லை ஆஸ்பத்திரியில் ஆனதா°° சோகத்துடன் நர்மதாவின் அப்பா கேட்டார்

°°இல்லை மறுமகள் மயக்கம் போட்டு விழுந்து விட்டதாக, எங்களிடம் கூறிவிட்டு மறுமகளை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரி வந்தாங்க இங்கே வந்த பிறகு தான் ஏதோ நடந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்°° நர்மதாவின் மாமனார்

°°அப்போ நர்மதாவை கேட்டீங்களா °°

°°கேட்டேன் அவள் என்னை டாக்டர் செக் பண்ணிட்டு விசிட்டிங் ஹாலில் உட்காரச் சொல்லிட்டாங்க, கொஞ்ச நேரம் கழித்து டாக்டர் மாமியை மட்டும் உள்ளே கூப்பிட்டாங்க, அப்புறம் பார்த்தால் டிராலியில் படுக்க வச்சி பெட்டுல கொண்டுவந்து போட்டாங்க அவ்வளவுதான் எனக்கு தெரியும் என்கிறாள் °° என்றார்

°°ஒன்னு பண்ணலாமே டாக்டரையே கேட்டுவிடுவோமே°° என்று பெண்ணின் அப்பாவும் மாமனாரும் போனார்கள்

கொஞ்சம் நேரம் கழித்து போன இரண்டு பேருமே இரண்டு டிராலியில் வெளியில் கொண்டுவந்து பெட்டில் அட்மிட் பண்ணினார்கள்

பெண்ணின் அம்மாவுக்கு நடுக்கம் ஏற்பட்டு அழுதபடியே டாக்டரை போய் சந்தித்து கேட்டார்கள்

°°உங்க மகளா அது ஏதோ மயக்கம் போட்டு விழுந்து விட்டதாக அழைத்து வந்தாங்க நானும் செக்பண்ணிட்டு உள்ளதைச் சொன்னேன் °°

°°எல்லாரும் அட்மிட் ஆகும் அளவுக்கு நீங்க என்னதான் சொன்னீங்க °°என்று கேட்டார் அதை சொல்வதற்குள் எம்டி கிட்டே இருந்து இன்டர்கம் மணியடித்தது எடுத்து கேட்டுவிட்டு °°அர்ஜண்டு வந்து சொல்றேன்°° என்று ஓடிவிட்டார் டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்குள்

பெண்ணின் அம்மா ரொம்ப நேரமாக காத்து காத்து கண்ணு ரெண்டும் பூத்து பூத்து இருந்தும் விஷயத்தை கேட்க முடியவில்லை

அட்மிட் ஆனவர்களின் மகன்கள் மகள்கள் இன்னும் உறவினர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஒன்றாக போய் டாக்டரை பார்க்கவில்லை எம்டியை பார்த்தார்கள் கேட்டார்கள்

எம்டி அந்த கேசை பார்த்த டாக்டரை வரவழைத்தார் °°இவர்கள் கேட்பது என்ன பதில் சொல்லுங்க°° என்றார்

°°சார் இந்த பொண்ணோட அவங்க மாமியாரும் வந்தாங்க பொண்ணு மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள் என்று சொன்னாங்க நானும் செக்பண்ணி விஷயத்தை சொன்னேன் அதைக்கேட்டு நெஞ்சுவலி வந்து விட்டது °°

°°விஷயத்தை சொன்னேன்னு சொன்னீங்களே அது என்ன விஷயம் அதை அவங்ககிட்ட சொல்லிவிடுங்க °° என்றார் எம்டி

°°சார்...°°கிட்டே சென்று ரகசியமாக °° சார் பொண்ணிடம் சந்தோஷமான விஷயத்தை சொன்னாலும் அல்லது துக்கமான விஷயத்தை சொன்னாலும் தாங்கிக்க கூடிய சக்தி இல்லையாம் காக்கா வலிப்பு மாதிரி வந்து விடுமாம் அதனால் அவளிடம் சொல்லாதீர்கள் °°என்று கேட்டுக்கொண்டார்கள் என்று சொன்னார் டாக்டர்

°°அட. சந்தோஷமான விஷயத்தை ஏன் மறைக்கிறீங்க அதுவும் ஆஸ்பத்திரியில் இருந்துக்கொண்டு °°

°°எதுவா இருந்தாலும் பொண்ணுக்கிட்டகூட சொல்ல வேண்டாம் ஏங்கிட்டமட்டும் சொல்லுங்கன்னு அவளோட மாமியார் கேட்டுக்கொண்டதின் பேரில் சொல்லவில்லை °°

°°அந்த பொண்ணோட அப்பாவும் மாமனாரும் வந்து கேட்கிறப்போ மட்டும் எப்படி சொன்னீங்க °°

°°சார் நான் விசிட்டிங் போய் இருந்தப்போ அவங்க கேபின்குள்ள வந்து இருக்காங்க டாக்டர் பேஷண்டுங்கள பார்க்க போயி இருக்காங்க உக்காருங்க வந்துவிடுவாங்க என்று உட்காரவைத்திருக்கிறார் வார்டு நர்ஸ் அந்த ரிப்போர்ட் கேஸ் பேப்பர் என் பேடில் கிளிப் பண்ணி மேசைமேல் வைத்திருந்தேன் அதை எடுத்து பார்த்து இருக்காங்க சார் விஷயம் தெரிந்து இருக்கும் அதனால் அவர்கள் அதிர்ந்து போய் நெஞ்சி வலி வந்திருக்கலாம்°°

°°அப்படீங்களா.... °°என்று பெண்ணின் அப்பாவையும் மாமனாரையும் வந்தவர்கள் கேட்டார்கள்

°°அவங்க ரெண்டு பேரும் நெஞ்சுவலி என்று அட்மிட் ஆகி இருக்காங்க அதை அவங்களைத்தான் கேட்கனும் ஏன் எதுக்கு என்று °° என்றார்

°°சரி டாக்டர் நீங்க போகலாம் °°

°°தேங்க்யூ சார் °°

°°இங்கே பாருங்க..... இந்த பொண்ணு கர்பமாகி இருக்கிறதைத்தான் ரகசியமா அந்தம்மா கேட்டு இருக்காங்க °°

°°கர்ப்பமா....°°என்று எல்லோரும் அதிர்ந்து போனார்கள் °°இது எப்படி சாத்தியம் அதை கேட்டதும் பொங்கி வழிந்தது கோபம் °°

°°கல்யாணம் ஆகி முதலிரவு அரேஞ்சி பண்ணல பையன் டெல்லியில் இருக்கிறான் இவள் இங்கே கர்ப்பம் அதுதான் எப்படி°°

°°என்னது நான் கர்பமா°°

°°என்ன நக்கலா இத்தனை பேரை பெட்டுல சேத்து இருக்கே இதுக்கெல்லாம் காரணம் யாரு இதை கல்யாணம் அவரதுக்கு முன்னரே சொல்லி தொலைச்சி இருக்க வேண்டியது தானே சனியனே யாரவன் இத்தனை பேர் உயிரை பறிக்க வந்த கொலகாரி நம்பி தாலி கட்டிட்டு போனவன் வந்து கேட்டா யாரு பதில் சொல்றது என்ன பதில் சொல்றது °°

°°அவரே வந்து பதில் சொல்வார் யாரும் டென்ஷன் எடுத்துக்காதீங்க °°
°°எப்படி மெசேஜ் அனுப்புறேன் அதுக்கு என்ன பதில் வரப்போவுதுன்னு பாருங்க
" நீங்க அப்பாவா ஆகப்போறீங்க" இதுல என்ன எழுதி இருக்கு நீங்க எல்லோரும் பாத்துக்கோங்க, பாத்தாச்சா கொண்டாங்க கைப்பேசியை, செண்ட் பண்ணிட்டேன் கொஞ்சம் பொருங்க
" congratulation baby" அது சரி டாக்டர்ங்க என்ன சொன்னாங்க அது ஆணா இல்லை பெண்ணா பிறந்ததும் பெயர் வைக்க, பெயரை செலக்ட் பண்ணத்தான் கேட்டேன்°° °° இந்தாங்க எல்லாரும் பாருங்க என்ன எழுதி இருக்குன்னு ம்....°°

°°எப்படிடீ.....கல்யாண ஏற்பாடு நடத்திக்கொண்டு இருக்கும் போதே சேர்ந்துவிட்டீங்களா என்ன....°°

°°இல்லை சட்டத்துக்கும் சம்ரதாயத்துக்கும் சத்தியத்துக்கும் உங்க எல்லோறோட கௌரவத்திற்கும் குறைவு ஏற்படும்படி ஐயோக்கியத் தனம் செய்யமாட்டோம்
நாங்க காலேஜ் ஒன்னா படிக்கும்போதிலிருந்தே கடைப்பிடிச்சிக்கிட்டு வர்றோம் இப்போ அவரே ஒரு வீடியோ அனுப்புவார் அதைப்பாருங்க இந்தாங்க சொல்லி வாயை மூடல வந்துவிட்டது இந்தாங்க பாருங்க °°

°°அடியே நீ எப்படிடீ அவங்கூட டெல்லியில அட தேதியோட இருக்கே இது எப்படி சாத்தியம் நீ என்ன பெண்ணா இல்ல பேயா கூடுவிட்டு கூடு பாயறதை கேட்டிருக்கேன் இப்போ நாடுவிட்டு நாடு பாயறதை இப்போ தான் கேள்விபடுறேன் °°

°°முதலில் பெட்டுல இருக்கிறவங்க டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வரட்டும் அப்போ சொல்றேன் எப்படின்னு அதுக்கு முன்னே இந்த செய்தியை கொஞ்சம் படிங்க °° நர்மதாவை யாரும் சந்தேக நோக்கோடு பார்க்க வேண்டாம் மழை நீரை மட்டும் பருகும் அவள் ஒரு “”சக்கரவாகம்”” பறவை °°

°°மாமி நான் உண்டான கதையை ரகசியமாக வைத்து இருந்திருக்கக் கூடாது, உண்மை இன்னதென்று ஏங்கிட்ட கலந்திருந்தால் எப்படி என்ற விஷயத்தை அன்னைக்கே சொல்லியிருப்பேன் அவங்களாகவே ஒரு முடிவை எடுத்து வீணாக அவங்களை அவங்களே முடிவு எடுத்துக் கொண்டதால் வந்த விபரீதமே இந்த இதயவலி என்பது ,அதற்கு பொருப்பு நானாக இருக்கமுடியாது °°

°°அப்பாவும் மாமனாரும் டாக்டரை சந்திக்க முடியல என்னோட கேஸ் பேப்பரை பார்த்து அவர்களாக முடிவு பண்ணிக்கொண்டது அதை தவறு என்று சொல்ல முடியாது எங்கள் அவசரம் இப்படி நடந்துக்கொள்ளும் படியாகிவிட்டது லீவும் குறைவு வேலையும் முக்கியம் என்பதால் நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவே இந்த முடிவு °°

ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் வீடு வந்தார்கள் °°நான் முதல் தடவை சிநேகிதியின் கல்யாணத்திற்கு போவதாக சொன்னது பொய் காரணம் எனக்கு பிளேன் ரிட்டன் டிக்கட்டும் ஆன்லயினில் புக் பண்ணி கைபேசியில் அனுப்பிடுவார் அதை வாங்கி பிளேன் பிடித்தேன் நாலு ஹவர் ஜர்னி போய் சேர்ந்தேன் அவர் ஏர்பொர்ட்டில் என்வருகைக்காக காத்திருந்தார் ஏற்கெனவே ரூம் எடுத்து வைத்திருந்த இடத்தில் தங்கினோம் மூன்று நான்கு மணிநேரம் ஆனதும் அனுப்பி வைத்தார் நாலு மணி நேரத்தில் வீடுவந்து சேர்ந்து விட்டேன் அவர் எப்போவெல்லாம் டிக்கெட்டு அனுப்பு வாரோ அப்போவெல்லாம் சினேகிதி கல்யாணம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுவேன் இப்படித்தான் நான் கர்பமானது அதற்கு அவரும் வீடியோ மூலம் நிருபித்துவிட்டார் இன்னும் என்ன வேண்டும் °°

ஆஹா…….எங்கிருந்து கண்டுபிடிக்கிறாங்களோ என்னா டெக்னிக் இதுவரைக்கும் கேள்விபட்டதேயில்லை இப்படி ஒரு செயல்களை ஐயோடா... வீணா நம்ம பெண்ணை நாமே கேவலமான பார்வையால் பார்த்த நம்ம கண்கள் இருந்தும் நாம் குருடர்களே நம்ம காலத்தில்

வெளியில் போன ஆம்பளைங்க எப்போ வீடுவந்து சேருவார்களோ என்று பார்த்த கண்சிமிட்டாம தவமா தவம் கிடந்த காலம் வேற ; இதுதானா கலியுகம் நாம வேஸ்ட் என்று சலித்துக்கொண்டது கிழங்கள்



°°°°°°°°°°°°

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (8-Apr-19, 10:36 pm)
பார்வை : 314

மேலே