இறைவி பெண் பிறவி

இறைவி பெண் பிறவி "

○○ கல்யாணம் பண்ணி முதலிரவு சேக்கிறப்போ °° என்னம்மா, என்னப்பா இது கூத்தா இருக்கு இன்னைக்கு, முகம் பரிட்ஷயம் இல்லாத ஒரு பொண்ணு கூட போய் தூங்கச்சொல்றீங்களே அந்த பொண்ணு என்னைப்பத்தி என்ன நெனைக்கு ○○ முன்னு கேட்டவன்தான் என் மகன்


○○ எங்களுக்கு பேரன் பேத்தியை எப்போ பாக்கிறது சுடுகாட்டுக்கு போனபிறகா ○○ என்று கேட்டால்


○○ வயசானதுங்களே உங்களுக்கு எத்தனை பேரன்கள் எத்தனை பேத்திகள் வேணும்முன்னு மட்டும் சொல்லுங்க○○ என்றவன்தான் என் மகன்


○○ அதற்கு உனக்கு நாங்கள் ஒரு பெண்ணைத்தான் கட்டிவச்சிருக்கோம் தாறாளமா குட்டிபோடும் பன்னியை , நாயை, பூனையை இல்லையடா வீட்டுக்கு ஒன்னும் உறவுக்கு ஒன்னும் பெத்து கொடுத்தா போதும்○○ என்று நாங்க சொன்னவங்கதான்


°° அது என்னம்மா உறவுக்கு ஒன்னு °°


○○ சிறகு முளைக்காத குஞ்சுக்கு சிறகு முளைப்பது போல், பொண்ணை கொடுத்து பொண்ணை கட்டுவதால் தான் உறவு முளைக்கிறது , இங்கே உறவு மொளைக்கிறமாதிரி தெரியல, நீ கட்டிக்கிட்டு வந்த பொண்ணை என்னென்ன பாடு படுத்துறே, உனக்கு பொறக்கிறதும் ஒருத்தனை கட்டிக்கிட்டு போயி அந்த பாடு படவேணாமா அதை நெனைச்சி உன் மனம் நோக வேணாமா ○○ ன்னும் சொன்னோம் தான்


○○ இங்கப்பாருடா…பெத்தவங்களே விடுற சாபத்தை○○ என்று முணகி தள்ளியவன் தான்


○○ ஒரு தடவை ஒருத்தி எங்க வீட்டுக்காரரை வயசு அறுவதை தாண்டிய பிறகும் இருவது முப்பது மதிக்கத்தக்க வாலிபர்களை போல தோற்றத்தை காட்டுகிறது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டாள் உடனே அவருக்கு பொத்துக்கொண்டு வந்தது கோபம் கையில் இருந்த குடும்ப அட்டைக்கான விண்ணப்பத்தை பிடுங்கி கிழித்து போட்டு துரத்திட்டார், இவங்க குடும்ப அட்டை இல்லேன்னா அப்படியே பட்டினி கெடந்து ஒன்னும் செத்துவிடமாட்டோம் , கொஞ்சம் விட்டா என் வீட்டுக்காரியை அந்தராசியா ஆக்கி விட்டுவிடுவா போல இருக்கு என்று சொன்னார் , அப்போது நான் தூக்கத்தில் இருப்பதுபோல அவர் கணக்கு, நானோ இப்படி பட்டவரை இழந்து விடுவேனோ என்ற துக்கத்தில் இருந்ததுண்டு○○


○○ கடைசியில் எனக்கு பொறந்த மகன் இந்த மாதிரியான இரக்கம் இல்லாதவனா இருப்பான்னு நாங்க கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை○○ என்று பையனை பெற்றவங்க மனம் குமுறிக் கொண்டார்கள்


பஞ்சாயத்து கூட்ட பணம் கட்ட பஞ்சாயத்து கூட்டப்பட்டது °° ஐயா தலைவரே என்னோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெண்ணின் குடும்பம் வக்கத்தவங்கன்னு தெரியாது, பொண்ண கட்டிட்டேன் இப்போ நந்தனம் ஒன்னும் இல்லன்னு தெரிஞ்சிக் கிட்டாச்சி அவளுக்கு மண்டை மடியுமளவுக்கும் சோறுபோட்டு துணிமணி கொடுத்து சோப்பு சீப்பு கண்ணாடி தலைக்கு எண்ணெய் சகலமும் கொடுத்துக்கிட்டு இருக்க எங்க அப்பாவோ இல்லை நானோ ஒன்னும் அநாதை இல்லம் வச்சி நடத்தலை கால் காசுக்கு பிரயோசனமும் இல்ல அப்படிப்பட்டவளோட வாழ்க்கை நடத்த எனக்கு விருப்பம் இல்லீங்க பஞ்சாயத்து தயவுசெய்து எங்களை பிரிச்சி விடும்படி கேட்டுக்கி றோமய்யா°° என்றான் மாப்பிள்ளை


°° சரியான கோரிக்கை தான், ( தலைவர் கொஞ்சம் யோசித்து) சரி பிரிச்சி விட்டுவிடலாம், ஏதோ அவ வசதிக்கு தகுந்தாப்போல ஏதாவது கொண்டுவந்து இருப்பா இல்ல அதையெல்லாம் கொண்டுவந்து இந்த பஞ்சாயத்துக்கு காட்டும் அதை கணக்கில் கொண்டு பிரிச்சிடலாம்°°


ஞாயம் சொல்ல அமர்ந்து இருந்தவர்களுள் ஒருவர் °° இதைப்போய் சரியான கோரிக்கை என்கிறீர்களே °° என்று முனுமுனுத்தார்


அதற்கு நாட்டாமை யின் பதில் °° இது அப்படி இல்லை, முதலில் தூக்கிவிட்டு அப்புறம் தான் கொலையில உதைக்கனும் பொருங்கப்பா○○ என்றார் நாட்டாமை


○○ எனக்கென்னவோ பையன் லூப் லயின்ல வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்கிறான் என்கிற சந்தேகம், முதலில் காக்காவின் வாயால் பாடவிட்டுதான் வாயிலிருந்து வடையை விழவச்சி கைப்பற்ற முடியும்○○ என்றார் இன்னொருவர்


○○ நான் நெனைச்சதைத்தான் நீங்களும் நெனைச்சி இருக்கீங்க திடுதிப்புன்னு பொண்டாட்டியை கழட்டிவிடும் அவனது உள் நோக்கம் இதுவாகத்தான் இருக்கலாம்○○ என்று வேறொருவர் சொன்னார்


°°அவ கொண்டுவந்த எல்லாத்தையும் வித்து பொருக்கி தின்னுட்டியே இப்போ எதை கொண்டுவந்து காட்டுவே°° என்று அம்மா ரகசியமாக கேட்டாள்


°° ஐயா பொண்ணைப் பெத்தவரே உங்க மகளுக்காக சீதனமா கொடுக்க கடையேறி பொருள் வாங்கிய சீட்டு உங்ககிட்ட இருக்குமே அதை கொண்டு வாங்க பஞ்சாயத்தில கொடுங்க°°


°° சரிங்க எல்லாம் பத்திரமா இருக்குங்க பஞ்சாயத்தில ஒப்படைக்கிறேனுங்க°° என்றார் பெண்ணை பெத்தவர்


கணவன் பாய் தலையனை கட்டில் அலமாரி கடன் வாங்கி அடமானம் வைத்த பொருள்களை எல்லாம் மீட்டு ஒரு பின்னு கூட விடாமல் கொண்டு வந்தான் பொருள்களை ஓரிடத்தில் சேர்த்தான்


பஞ்சாயத்து பார்வையிட்டது °° யாருப்பா இங்கே வாரும்… இந்த சீட்டில் உள்ள பொருள் எல்லாம் ஒன்னும் விடுபடாம இருக்கான்னு பாருங்க°° என்றார் நாட்டாமை


°° எல்லாம் சரியா இருக்குங்க ஆனால் பதினைந்து சவரன் நகை பொண்ணு மேலேயும் போட்டு இல்லை, இங்கே பொருளோடகூட வைக்கப்படவும் இல்லீங்க ஐயா °°


○○ மாப்பிள்ளை பதினைந்து சவரன் நகை போட்டு அனுபினாங்களா இல்லையா○○


○○ போட்டாங்க ஐயா ○○


○○ பதினைந்து சவரன் நகையை போட்டவங்க உங்க கணக்கிலே வக்கத்தவங்களா தம்பி, அந்த அளவுக்கு தம்பி கொழுத்த பணக்காரர் அம்பானி, டாட்டா,பிர்லா வம்சத்தை சேர்ந்தவன் மாதிரி இருக்கே, உன் தகுதிக்கு இதுவே தொன்னூறு சதம் அதிகம் இது உன்மூஞ்சிக்காக போடல அவங்க பொண்ணுக்காக போட்டது தம்பி, எங்கே அந்த நகை சரி அந்த பெண்ணை கூட்டியா நீ சொல்லும்மா அந்த நகை என்னாச்சி○○


○○ ஐயா ஏதோ ஒரு வேலையை குத்துமதிப்பா இவ்வளவு ஆகும் செஞ்சி கொடுக்க என்றாராம், அவங்களும் சம்மதித்து வேலையை எடுத்தாராம் அவரு கூப்பிட்டு வேலையை வாங்கினவங்களுக்கு கூலி கொடுக்கல அவங்க பாவம் அன்னாடக் காய்ச்சிங்க அன்னைய கூலியை நம்பி வாழரவங்க அவங்க மனைவி பிள்ளைகள் அவங்களுக்கு என்ன தொல்லை கொடுத்தாங்களோ தெரியாது இவங்களுக்குள்ள வாக்குவாதம் முத்திப்போய் அடிதடியில் வந்து இருக்குங்க மூஞ்சி மொகறக்கட்டையெல்லாம் வீங்கி ரத்தம் ஒழுக ஒழுக வீட்டுக்கு வந்தாருங்க நான் தான் பதறிப்போய் நகையை அடமானம் போட்டு அவங்க கூலியை கொடுத்தேங்க அந்த நகையை எங்க அம்மா வீட்டுல மூட்டு கொடுக்கச்சொல்லி இத்தனை கூத்தும் நடக்குதுங்க ஐயா இதுல வேற சந்தேகம் அவங்கிட்ட என்ன பேச்சி இவங்கிட்ட என்ன பேச்சின்னு அந்த மாதிரியான பேச்சை பேசும்போது ஒரு மொழ கயித்துல தொங்கிடனும் போல இருக்குமுங்க ○○


○○ எனக்காக வச்ச நகை நானே எப்படியாவது மீட்டு கொடுத்துவிடுறேனுங்க○○ என்றான் கணவன்


○○ ஒரு அம்மா மறைந்து இருந்தபடியே ஒரு ஆள் மூலம் நாட்டாமை ஐயாக்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் போய் சொல்லு ○○ என்றார்


அந்த ஆள் போய் நாட்டாமை காதில் சொன்னார்


நாட்டாமை அந்த அம்மா மறைந்து இருந்த இடத்திற்கு தனியாக போனார் ○○ என்ன விஷயம் சொல்லம்மா○○ என்றார் நாட்டாமை


○○ அவன் எப்படியாவது நகையை மீட்டு கொடுப்பதா சொன்னானே அவன் அந்த நகையை எப்பவோ மீட்டு எடுத்துட்டான் உங்களுக்கு அந்த மார்வாடியை நல்லா தெரியுமே நீங்களே கைப்பேசி மூலமா கேட்டு பாருங்க இந்தாங்க இது அந்த ரசீதோட நகல் ○○ என்று நாட்டாமையிடம் கொடுத்தாள்


○○ நகையை என்ன பண்ணான்னு உமக்கு ஏதாவது தெரியுமா ○○


°°அது வேற எங்கேயும் போகல என் மகளை வேறு ஒருவனுக்கு கட்டிக்கொடுத்தேன் அவள் அவன் கூட வாழாமல் இவன் பின்னால் சுத்திக்கிட்டு இருக்கா அந்த நகை எல்லாமும் அவள் கழுத்தில் இருக்கப்பார்த்தேங்க நாள பின்னே விஷயம் தெரிந்து போலீஸ் கோர்ட் கேசுன்னு வந்தா பெரிய பெரிய இக்கட்டான சூழ்நிலை உருவாகும் என் மகளா இருந்தால் என்ன மனசாட்சி க்கு பயந்து நடக்கனுங்க அதுதான் மனசை உருத்திக்கிட்டே இருந்தது அதான் ○○ என்றாள் அந்த அம்மையார்


○○ சரி…சரி.. என்ன பண்றது இதில் ஒரு பெண்ணின் வாழ்க்கை அடங்கி இருப்பதால் நாங்களும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறோம் ஆமாம் உங்க பொண்ணு பெயர் என்ன சொன்னீங்க ○○ கேட்டார் நாட்டாடமை


○○ ரெங்க நாயகிங்க ○○ என்றாள் அம்மையார்


சரி…நான் பார்த்துக்கிறேன் நீங்க ஜாக்கிறதையா போங்க என்று அனுப்பி விட்டு, அவனோட மனைவியை அந்த பொருளாண்ட நிக்கச்சொல்லி பஞ்சாயத்து தலைவர் கேட்டார் °° ஏம்பா மாப்பிள்ளை இந்த பொருள் முதல் கொண்டு அந்த பெண் உட்பட இந்த பழசானைதையா கொடுத்தாங்க புதுசா தானே கொடுத்தாங்க°°


°° இல்லங்க….ஆமாங்க°°


°° என்ன இல்லங்க என்ன ஆமாங்க


பழசையா கொடுத்தாங்கன்னு கேட்டீங்க அதுக்கு இல்லங்கன்னேன், புதுசா தானே கொடுத்தாங்கன்னு கேட்டீங்க அதுக்கு ஆமாங்க ன்னேனுங்க... புதிதாகத்தான் கொடுத்தாங்கய்யா°°


°°அப்போ புதுப் பொருளை அவுங்க கிட்ட ஒப்படைக்கிறது தானே ஞாயம், பெண் உட்பட அவளை எப்படி ஓங்கிட்டே புதுசா நீ தாலி கட்ட மணவரைக்கு அனுப்பினாங்களோ அந்தமாதிரியே அவங்ககிட்ட அவங்க பொண்ணை ஒப்படைக்கிறது தானே ஞாயம், ஞாயமா இல்லையா.... ம்... ஒப்படை °°


°° அப்படி போடு நாட்டாமை ன்னா இப்படி, இப்படி உடும்பு பிடிச்சாரு பாரு°° என்றார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களுள் ஒருவர்


°°அது எப்படிங்க முடியும் ஐயா °°


°° முடியாது இல்ல…முடியாது இல்ல.. டே.... யார்..அங்கே அவனை இழுத்து மரத்தில் கட்டிப்போட்டு பஞ்சாயத்து சொல்லுவது தான் ஞாயம் என்று யார் யாருக்கெல்லாம் படுதோ, படுகிறவர்கள் மட்டும் எழுந்து போய் ஆளுக்கொரு அறை விடுங்க°° என்றார் நாட்டாமை
.

நாட்டாமை சொல்லிக் கொண்டு இருக்கும் போதே எழுந்து ஒருவர் பின்னால் ஒருவர் வரிசையாக நின்றார்கள் கூட்டம் கூடியிருந்த களம் காலியாகி வெறிச்சோடிக் காணப்பட்டது என்றால் இதில் எல்லோருக்கும் சம்மதம் என தெரிந்து கொண்டார் நாட்டாமை


மாப்பிள்ளையின் வேட்டி தொப்பக்கட்டையா நனைந்து விட்டது ( ஒன்னுக்கு விட்டுக்கொண்டான் போல் தெரிகிறது என்றார்கள் அவனுக்கு அருகாமையில் இருந்தவர்கள் )


°° ம்....ஏன் நிக்கிறீங்க ஆரம்பிங்க°° அவ்வளவுதான் மாப்பிள்ளை பக்கம் போக முடியாமல் எல்லோரும் மூக்கை பொத்திக்கொண்டார்கள் அந்த நாற்றத்தை நுகர்ந்த பன்றிகள் கூட்டம் அங்கே வட்டமிடத் துவங்கியது அதனால் யாரும் அடிக்கவில்லை
°°

ஐயா...ஐயா..என்னை .மன்னிச்சிடுங்க...ஐயா மன்னிச்சிடுங்க என்று கதறினான்°°


°° ஏம்பா நீ கேட்டது ஞாயம் தானே °°


°° இல்லை ஐயா நான் பண்ணது அநியாயம் °°


○○ சரி…நகையெல்லாம் இப்போது யார்கிட்டே இருக்கு ○○ கேட்டார் நாட்டாமை


○○ அடகு கடையில் இருக்கு ஐயா ○○ என்றான்


○○ ஐயா அடகுக் கடைக்காரரே காரைவிட்டு கொஞ்சம் வரீங்களா(வந்தார்) இவனோட நகைகள் உங்ககிட்ட அடகுல இருக்கா ○○


○○ இதோ நிக்கிறானே இவன் மூனு மாசம் முன்னாடியே மீட்டுக்கொண்டு போயிட்டாங்க இதோ அவனோட கையெழுத்து, கைரேகை இது போல லப்படா வருமுன்னு எல்லாருகிட்டேயும் நான் கையெழுத்தும் வாங்குவேன் ஏன்னா அது என்கையெழுத்து இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது அதனால் கூடவே கைரேகையும் வாங்குவேன் ஏன்னா கையெழுத்தை எனதில்லை என்று ஈசியா சொல்லலாம் கைரேகையை எனதில்லை என்று சொல்லமுடியாது இந்தாங்க பாருங்க என்று ரசீது புத்தகத்தை காட்டினார் அடகுகடைக்காரர்


என்னப்பா சத்தியகீர்த்தி அடகு கடைக்காரர் சொன்னது பொய்யா


மௌனம் சாதித்தான்


இப்போ சொல் அந்த நகை என்னாச்சி எங்கே இருக்கிறது


ஐயா நகையை மீட்டு கொண்டு பேருந்தில் வரும் போது யாரோ தூக்கிக்கொண்டு விட்டார்கள் ஐயா


என்னடா இது அந்த அம்மா அவங்க மகள் கழுத்தில் பார்த்ததா சொன்னாங்க இவன் யாரோ தூக்கிட்டு போயிட்டாங்க என்கிறான் இதுல எது உண்மை ஒருவேளை அந்த அம்மா மகளோட கழுத்தில் பார்த்தது கவரிங் நகையாக இருக்குமோ என்று யோசித்தார்


இல்லை இப்போது பொய் சொல்றே இனி மேலும் பொய் சொன்னா இப்போதைக்கு ஊர் பஞ்சாயத்தா இருப்பது கோர்ட் பஞ்சாயத்தா மாற வாய்ப்பு நிறைய இருக்கு டேய் மடையா உனக்கு பொய் சொல்ல வரலடா ரொம்ப முயற்சி பண்ணி ஒரு சிறு பொய் என்கிற தீப்பொறியால் காட்டையோ வீட்டையோ தரைமட்டமாக்கிடும் யோசிச்சி பேசு


இல்லை ஐயா நிஜமாகவே சொல்றேன்


இல்லங்க இவன் சரிபட்டுவரமாட்டான் அவன் பொண்டாட்டி பிராது கொடுக்கிறமாதிரி எழுதி கையெழுத்து வாங்கி போலீஸ்ல ஒப்படைச்சிடுங்க…….( சற்று தாமதித்தார் )இரு இரு தம்பி என் கார்ல போய் மீதியை காதில் சொல்லி அனுப்பிவிட்டார் நாட்டாமை அரை மணிநேரம் கார் திரும்பி வந்தது காரில் இருந்து ரெங்கநாயகி வந்தாள் எங்கே அந்த பொய்யப்புடிச்சவன் மனைவியை கூப்பிட்டு அந்த பொண்ணு போட்டு இருக்கும் நகை யாருடையது என்று பார் , அது சத்தியம் தங்கமாக இல்லை கவரிங் நகைகள் போய் பார் என்றார் நாட்டாமை


°° இவ எப்படி இங்கே வந்தா வகையாக மாட்டினோம் கடவுளே காப்பாத்து இப்போது நான் கொசுவாகி நிக்கிறேன் ஒரு கொட்டு நான் கொட்ட வலிக்கிறது என்று கடிபட்டவங்க ஒரு தட்டு தட்ட அதில் தப்பித்து வந்தா ஒரு கொடம் எண்ணெய் சாத்துறேன் அண்ண்மலையாரே°° என்று வேண்டிக்கொண்டான் வெள்ளையடிப்பவன்


°° ஐயா அவள் போட்டிருப்பது எல்லாமே என்னோட நகைகள் தாங்க ஐயா ஆவேசமாக சொன்னாள்°° அதைக்கேட்ட அனைவரும் அவனை சரமாரியாக திட்டி தீர்த்தார்கள்


நாட்டாமை கூட்டத்தை நோக்கி சொன்னார் °° அவனை கட்டிப்போட்டு உங்களை அறைவிடச்சொன்னேன் ஏன் தெரியுமா ஒருவன் அடித்தாலே ஒடம்பு தாங்காது இந்த ஊரே அடிச்சா சங்கு நிச்சயம் என்றெண்ணி அந்த பயத்தில் தொண்டையில் அடைத்து கொண்டிருக்கும் உண்மையை கக்கிவிடுவான் என்ற நோக்கத்திலேயே சொன்னது அவன் நல்ல கெரகம் ஒன்னுக்கு இரண்டுக்கு வந்து உங்களை அவங்கிட்ட நெருங்கவிடாம பாதுகாத்துவிட்டது பஞ்சாயத்தின் நோக்கம் யாரையும் துன்புறுத்தும் நோக்கமில்லை உங்களுக்கு அவங்க சங்கதி தெரிந்து நீங்களாவது சொல்லுவீங்கன்னு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் நீங்களும் மூச்சுவிடவில்லை அக்கத்தில் பக்கத்தில் குடியிருப்போருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை
கொலையே நடந்திருந்தாகூட இப்படி தான் இருப்பீங்களா முடியாது போலீ துருவி துருவி விசாரிக்கும் போது தாய் வச்ச சொவனையே தானா வந்துவிடும் °° என்றார்


°° அடே எட்டப்பா நடந்து வா கிட்டப்பா அந்த நகை அவளிடம் எப்படி போனது ஏன் போனது அவளுக்கும் உனக்கும் என்ன உறவு தொட்டு தாலி கட்டின பொண்டாட்டியைவிட அவள் என்ன ஒசத்தியா அப்படியே ஒசத்தியா இருந்தாலும் அவளுக்கு ஊரான் வீட்டு நகைதான் கிடைத்ததா ஏன் காட்டை வீட்டை வித்து நகை வாங்கி போடவேண்டியது தானே அப்படியும் அவள் உனக்கு யாரு அக்கா மகளா அத்தை மகளா யாரு அவள் , ஏம்மா ரெங்க நாயகி அவன் எப்படி ஓங்கிட்ட மாட்டினான்


ஐயா...சொல்லப்போனா, அவன் ஏங்கிட்ட மாட்டவில்லை ஐயா, என்னைத்தான் அவங்கிட்ட மாட்ட வச்சிட்டான் விவரமா சொல்லப்போனால், ஐயா நானும் அவரும் நான் வயசுக்கு வராத நாள்ல இருந்து பழக்கம், எங்க இஷ்டப்படி நாலுபேர் பார்க்கிற மாதிரி பயம் இல்லாமல் நடந்துக்குவோம், யாரும் பார்க்காதபடி கெடந்து க்குவோம், காதலிச்சோம் கல்யாணம் பண்றது ன்னு முடிவானப்போ, அவரோட அப்பாவும் அம்மாவும் சம்மதிக்கல என்னை கட்ட, அதேபோல என்னோட அப்பா அம்மாவும் சம்மதிக்கல அவரைக்கட்டிக்க , ஆனாலும் எங்க பழக்கம் அறுந்து போவல அவருக்கு கல்யாணம் ஆன பிறகும் வருவார் போவார் இது அவரோட பொண்டாட்டி நகைகள் என்பது இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன் ஏங்கிட்டே சீட்டுபோட்டு வச்சிருந்தேன் அந்த பணத்தில் வாங்கியாந்தேன் என்றார் நானும் நம்பிட்டேன், ஒரு சவரனா ரெண்டு சவரனா பதினைந்து சவரன், அந்த தாயி பிராது கொடுத்து அது ஏங்கிட்ட இருக்கின்னு தெரிஞ்சா என்னையில்ல திருடியாக்கிடுவாங்க என்று நகைகளை கழட்டி கொடுத்துவிட்டு , இந்த சபையில என்னை அவமானப்படுத்தினவனை சும்மா லேசுல விடமாட்டேன் செஞ்சிடுவேன்
ஏன்னா இவன் என்னை அடைய வசியம் பண்ணியிருந்தது இப்ப தான் எனக்கு தெரியவந்தது அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த ஆளே அவர் செஞ்ச பாவத்தை குழுவிக்க வீடு தேடி வந்து உண்மையை சொன்னார் அதை கேட்டதும் எனக்கு புத்திவந்தது நான் எனக்கு தாலி கட்டினவர்கிட்டேயே கையை காலை புடிச்சி விழுந்து மன்னிப்பு கேட்டு சேர்த்து கிட்டா போய் சேர்ந்து வாழ்வதுதான் ஞாயம் என்றாள்


○○ அடே...பொய்யனே...என்ன வேலை பண்றே○○ ( அவன் வெள்ளை அடிப்பவன் என்று தெரிந்திருந்தும் கேட்டார் நாட்டாமை )


°° வெள்ளை அடிக்கிற வேலைங்க ஐய்யா °°

°° ம்.... இங்கே கூடியிருக்கும் பெரிய மனுஷாள் எல்லாருக்கும் வெள்ளை அடிச்சிடலாமுன்னு நெனைச்சே இல்லையா°°


°° இல்லை ஐயா °°

°° நீ ஆம்பளையா பொம்பளையா°°


°°அமைதியாக இருந்தான் °°

°° அவன் அமைதியாக இருப்பதை பார்த்தால் அவனுக்கே சந்தேகம் போல°° என்றார் கூட்டத்தில் ஒருவர் அதைக்கேட்டு ஒரே சிரிப்புமயமானது பஞ்சாயத்து களம்


°° ஆண்மையை இழந்தவன் தான் தன் பொண்டாட்டிய சந்தேகம் படுவான் ஆமாவா இல்லையா…. ஏங்க நீங்க சொல்லுங்க °° ஒருவரைக் காட்டி

°° ஆமாங்க ஆண்மை இல்லாதவன் தான் தன் பொண்டாடி மேல சந்தேகம் படுவானுங்க ஏன்னா நம்மால் இவள் தேவையை பூர்த்தி பண்ண முடியலையே அவள் தேவைக்கேற்ப வேறு யாருடனும் பூர்த்தி செய்து கொள்வாளோ என்ற சந்தேகம் இதுல இவன் சந்தோஷத்தை இவனே கெடுத்துக்க இவன் கண்டுபுடிச்ச பார்முளான்னு மட்டும் தெளிவாக தெரிகிறதுங்க °° இதைக்கேட்டு கூட்டத்தில் ஒரே சிரிப்பு ஒலி ஒலித்தது


மேடையில் அமர்ந்திருக்கும் நபரை நோக்கி ○○ தம்பி வளறத்துடிக்கும் கவிக் கொழுந்தே நீங்களும் இரண்டு வார்த்தையை அவிழ்த்து விடுறது○○ என்றார் நாட்டாமை


°° ஆண்டவன் வார்க்கும். நீருதன்னை தாங்கிவந்து; ஊருதன்னை பசுமைப் படுத்தும்; ஆறுக்கெல்லாம் பெண்ணின் பெயரைத்தான் வைத்து அழைக்கப்பட்டு வணங்குகிறோம் ஏன் ? °°


°° அதுதான் பெண்மைக்கு நாம் செலுத்தும் மரியாதை நாம கொடுக்கிற அந்த மரியாதையால் தான் காலம் பூராவும் நல்லதோ கெட்டதோ, அடியோ உதையோ, குடிக்க கிடைத்தது கூழோ கஞ்சியோ எதையும் பொருட்படுத்தாமல் நமக்கு ஊழியம் செய்து கிடக்கிறாள் அப்படி இல்லேன்னா உன்னை விட பெட்டரா ஒருத்தன் கெடைச்சா அவன் பின்னால் போய் இருக்கலாம், அந்த பாதையை அமைத்து கொடுப்பது யார் புருஷனா வாய்ப்பவங்கதான் இது ஏன் ஒவ்வொரு ஆணுக்கும் புரிய மாட்டேங்குது அன்னியத்தில் இருந்து வந்தா ஆணுக்கு பெண் அடிமையா இருக்கனுமா அது என்ன சட்டமா °°

°°கடவுள் முதன் முதலில் ஆணை படைத்தவன் பெண்ணை படைக்காமல் இருக்க அவனால் முடிய வில்லை காரணம் இவ்வளவு பெரிய உலகை படைத்துவிட்டு வெரும் ஆண்களாக அவனே மெனக்கிட்டு ஒவ்வொன்னா படைத்து போட்டுக்கொண்டு இருக்க வேண்டி வந்திருக்கும் அப்படித்தான் உலகை நிறப்பியிருக்க முடியும் யோசித்தான் ஒரு பெண்ணை படைத்து மனுவை உருவாக்கும் பொருப்பை சக்தியை அவளிடம் கொடுத்தான் அப்படிப்பட்ட பெண்ணை இப்படி இழிவுபடுத்தி பார்ப்பது எந்த வகையில் ஞாயமாகும் அவளை ""இறைவி பெண் பிறவி"" என்று சொன்னால் தவறாகாது பெண் தேவதையரை எவனொருவன் நம் தேவதை என்று கொள்கிறானோ அவனே இம்மண் தேவதையின் மகன் ஆகிறான் மற்றவர்கள் எல்லாம் அந்த தகுதியற்றவர்களாவார்கள் என்றே சொல்கிறது அனுபவம், வாசல்கள் இல்லாத வீடடுகள் எல்லாம் கல்லறைகள்; நல்ல மனசு இல்லாதவர்கள் ; கல்லறைக்குள் அழுகிப்போகும் பிணங்கள் வெவஸ்தை கெட்டவனே இப்போது சொல் அவள் வேண்டுமா வேண்டாமா °°


°°பொதுவாக கட்டின பொண்டாட்டிக்கு கணக்கு பார்க்கிறவன் தானே நீ உனக்கு அவள் சம்பாதித்து போடனுமா அவளுக்கு நீ சம்பாதித்து போடனுமா அவளை கட்டும்போது எனக்கு நீ தான் சம்பாதித்து போடனும் என்று பேசி முடிவு பண்ணியா, பொண்டாட்டிங்க சம்பாதித்து போடும் கட்டமும் இல்லாமல் இல்லை தன் கணவனுக்கு கைகால் விளங்காமல் போனால், இதயத்தில் கோளாறு இருந்தால், விபத்தில் சிக்கி முடியாமல் போனால், நோய்வாய் தாக்கி எழமுடியாது வீழ்ந்தால் அந்த குடும்பத்தை வீழ்ந்து விடாதபடிக்கு நானிருக்கிறேன் நீ கவலைப்படாதே என்று தாங்கிக் கொள்வதில்லையா, சூழ்நிலை ஆட்டம் கொடுத்துவிட்டால் அவங்கவங்க குடும்பத்தை பார்த்துக் கொள்வார்களே அன்றி பயந்து விட்டுவிட்டு வேறு ஒருவனோடு ஓடிவிடமாட்டார்கள் அதுதான் பெண்மையின் அற்புதமான அடக்கமான ஒப்பற்ற குணம் °°


°°ஐயா அவள் தாய் வீட்டில் எதுவும் கொண்டுவர தேவையில்லை அவள் தான் வேண்டும் பிரிவு வேண்டாம் அம்மா தாயே என்னை மன்னித்து விடு
ஏதோ தெரிந்தோ தெரியாமலோ தவறு இழைத்தது விட்டேன், நீ மட்டும் உன் நகையை வைத்து வேலையாட்களுக்கு கொடுக்காமல் இருந்திருந்தால் அவர்கள் என்னை கொன்றே இருக்கலாம் பெண்ணின் அருமை பெருமை தெரியாமல் ஓங்கிட்ட இப்படி நடந்து கிட்டதுக்கு தயவு பண்ணி என்னை மன்னிச்சிடு இனி உசுரே போனாலும் பஞ்சாயத்து கிட்டவந்து ஞாயம் கேட்கமாட்டேன் இந்த பூமாதேவி மேல சத்தியம்°° என்று தரையில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தான்


உன் சத்தியம் பொய் சத்தியம் என்று அவனது மனசாட்சி எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் அவனுக்கு சொன்னது வேறு யாருக்கும் தெரியாது அவனைத்தவிர

அதன்பின் அவன் எதிரில் யாரும் தன் தாமரையோ, சகோதரிகளையோ, மனைவிமார்களையோ, மகள்களையோ மான நஷ்டமாக பேசுவதை, அவனால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை யாராவது பேசினால் அவர்களை அழைத்து நீ அவள் தாயோ கூடப்பிறந்த அக்காள் தங்கைகளோ, மனைவியோ மகளோ அவர்களை முதலில் நீ மதித்தால் அவர்கள் உன்னை துதிப்பார்கள் அது இல்லையென்றால் அது யாராக இருந்தாலும் போட்டு மிதிப்பார்கள் அது உன்னில் நான் குறைந்தவள் இல்லை என்பதை எடுத்துக்காட்டவே என்பதை உணர்வும்.

°°°°°°°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (9-Apr-19, 9:13 am)
பார்வை : 217

மேலே