அண்ணிக்கிளி

அண்ணன் சிங்கமுத்து தம்பி தங்கமுத்து , அக்கா முத்தழகி, தங்கை சொர்ணமுத்து , அப்பா இல்லை பிள்ளைகள் நான்கும் சிறுவர்களாக இருக்கும் போதே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு தந்தை முத்தப்பன் தவறிவிட்டார் அம்மா பெரிய நாயகி மட்டுமே

நாலு பேருக்கும் மூத்தவன் சிங்கமுத்து ராணுவத்தில் முதலில் தோட்டக் காரனாக சேர்ந்து பிறகு ராணுவ வீரனாகி அடுத்த ஆண்டே அக்கா முத்தழகியை அதே ஊரைச்சேர்ந்த ஆசிரியராக பக்கத்து கிராமத்தில் பணியாற்றுபவர் காளிதாசனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தான் அவனது ஒரு கடமை நிறைவு பெற்ற மன திருப்தி அடைந்தான்

முத்தழகி முதல் இரவில் நிறைய வழிய எதிர்பார்ப்பு இருந்தது மெத்தையில் மலர்கள் தூவப் பட்டிருந்தது காளிதாசன் காத்திருந்தான் பால் செம்போடு வெளியில் இருந்தவர்கள் அவளை உள்ளே தள்ளி கதவை சாத்தினார்கள் அவள் சொம்பை கையில் வைத்தபடி நாணத்தால் தரையில் கோளம் போட்டிருந்தாள்

என்ன நாணமா கொண்டுவந்ததை கொடுக்கிறதா உத்தேசம் இல்லையா

சொம்பை கையில் கொடுத்தாள் வாங்கி மடக்மடக்கென்று குடித்துவிட்டு இதுக்கு மேல என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியாது, யாரும் சொல்லியும் கொடுக்கல உனக்கு தெரியுமா சொல்லு தெரியாதுன்னா விடு என்று படுத்து குறட்டை அடித்தான் அவளோ கட்டிலின் காலடியில் கண்கலங்கியபடி கண்ணயர்ந்தாள்

ஆசிரியர் காளிதாசனுக்கு ஏற்கனவே முத்தழகியை கல்யாணம் பண்ணுவதற்கு முன்பிருந்தே சொர்ணமுத்து மேல் கொள்ளை ஆசை கொண்டிருந்தான், கட்டினால் இவளைத்தான், இவளைமட்டும் தான் கட்ட வேண்டும் இல்லையென்றால் தூக்கில் தொங்கிவிட வேண்டும் அதுவும் இல்லாவிட்டால் சன்னியாசி ஆகிவிட வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டிருந்தான் என்ன செய்வது மூத்தவள் இருக்க இளையவளை மணக்க முடியாது, அதனால் மூத்தவளை மணமுடித்துக்கொண்டால் இளையவள் இலவசம் என்ற கணக்கில் முத்தழகியை வேண்டா வெறுப்பிற்கு கட்டிக்கொண்டப்பின், மனைவி முத்தழகி புருஷன் காளிதாசன் வீட்டில் இருப்பாள், மாமியார் பெரியநாயகி வயக்காட்டில் இருப்பாள் , மைத்துனன் தங்கமுத்து பள்ளியில் இருப்பான், மைத்துணைவி சொர்ணமுத்து தன் வீட்டில் தனியாக இருப்பாள் ஆசிரியர் காளிதாசன் பள்ளியில் ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லிவிட்டு மைத்துணைவி சொர்ணமுத்துவோடு வீட்டில் கும்மாளம் அடிப்பான் மனைவி இன்றுவரை கர்ப்பம் தரிக்க வில்லை

சொர்ணமுத்துவுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் வரை வாத்தியார் காளிதாசனுக்கு அதிர்ஷ்டம் அடித்து கொண்டு இருந்தது, கரு தங்காத சூட்சம முறைகளை கையாள துணை முதல்வர் பதவி வகிப்பது போல் துணை மனைவியாக பதவி ஏற்று செயல்பட்டாள்

நாகரீகம் கூடிவிட்டது சொர்ணமுத்துவுக்கு சினேகிதிகள் அடியே புது புடவை, அலங்கார சாதனங்கள், நெகபாலீஸ், உதட்டுச்சாயம் உனக்கு சூப்பராக இருக்குடி எப்படிடி, மேக்கப் சாதனங்கள் சினிமாவில் நடிக்க போகிற நடிகைகள் போல் சும்மா மினுக்குதடி, என்று கேட்டால் எங்க அம்மா அப்பா அண்ணன் தம்பதிகள் வாங்கி கொடுத்து அழகு பார்க்காததையெல்லாம் எங்க மாமா வாங்கி கொடுத்தார் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று பெருமையடித்துக்கொள்வாள் அதற்கு சினேகிதிகள் தொட்டு தாலி கட்டிய மனைவி வீட்டு வேலைக்காரியைவிட படுகேவலமாக நடத்தப்படுகிறாள் மாறாக மைத்துணைவி மினுக்கோ மினுக்கென மினுக்குகிறாள் அக்கா மனைவியா இல்லை தங்கச்சி மனைவியான்னு தெரியல மனதுக்குள் ஆதாயம் இல்லாமல் செட்டி ஆத்துல எறங்கமாட்டானாம் இவ ஒன்னும் கொடுக்காமல் அவன் கொடுத்து விடுவானா என்ன என்று சலித்துக் கொள்வார்கள் எங்களுக்கும் மாமன்கள் வாய்த்து இருக்கிறார்கள், பஞ்சு மாட்டாய் தின்பது போல ஏமாத்தி தின்றுவிடுவார்கள் பிச்சைக்காரனுங்க எல்லாரும் மாமியார் வீட்டை சொரண்டி கொண்டுபோக வந்தவனுங்க எச்சக்கையால காக்கா ஓட்டாதா எச்சப்பொருக்கி பிச்சக்கார பசங்க என்று சலித்துக்கொண்டார்கள்

மறாவது ஆண்டில் பக்கத்து ஊரில் வார்டனாக பணிபுரியும் வரதராசனுக்கு தங்கை சொர்ணமுத்துவை கல்யாணம் பண்ணி கொடுத்தான் இரண்டாவது கடமை நிறைவு பெற்றதென்று மன திருப்தி அடைந்தான் சிங்கமுத்து

முதல் இரவு கூட்டினார்கள் வார்டன் வரதராசன் எதிர் பார்த்தது போல் சொர்ணமுத்து இல்லை, உடல் கட்டு தளர்ந்து காணப்பட்டாள், நாற்று நட சேடை ஓட்டிய கழணியை போல் சோடை ஓடி தளர்ந்து இருந்தாள், சீப்பிப்போட்ட சக்கையில் சாரை தேடினால் எங்கிருந்து கிடைக்கும், அடக்கமுடியாத கோபம் அதனை மானம் மரியாதை கௌரவம் என்ற கம்பளத்தால் மூடப்பட்டதால் மோசம் போனோமே என்று துக்கத்தில் மூழ்கி இருந்தான்

நண்பர்கள் °°எப்படி விருந்து படுஜோர் போல இருக்கு பிழிஞ்சி எடுத்துட்டு இருப்பாங்க போல நண்பன் சோர்ந்து போய் கெடக்கான்°° என்று வெறுப்பு ஏற்றினார்கள்

நண்பர்கள் காதில் போட்டான் °°நான் மோசம் போயிட்டேண்டா°° என்று கண்ணீர் வடிக்க நண்பர்கள் வீட்டார்க்கு தெரிவித்து இருக்கிறார்கள்

வரதராசனின் அம்மா, மகளிர் மன்ற தலைவி ஆதலால் மருமகள் சொர்ணமுத்துவை தனியாக அழைத்து நோட்டமிட்டு முன்னழகு தொங்கலிட்டும் பின்னழகு சரிந்து போயும் தென்பட்டதை வைத்து இது கடவாணி கழண்ட வண்டி போல இருக்கு என்றெண்ணி, அமைதியாக மாமியார் கேட்டார்கள் ரகசியமாக °°ஏம்மா கேழ்கிறேனே என்று தப்பாக நெனைக்க வேண்டாம், எங்களுக்கு அங்காளி பங்காளிகள் நிறைய உண்டு, மேலும் மகளிர் மன்ற தலைவியாக இருப்பதை வைத்து அவர்கள் எங்கள் மேல் வைத்திருக்கும் மரியாதை மண்ணா போய்விடக்கூடாதே என்பதற்காக கேட்கிறேன் இதற்கு முன் உனக்கு யாரிடமாவது பழக்கம் உண்டா அப்படி இருந்தால் தயங்காம சொல்லு நாம பொம்பளைங்குள்ள என்ன கூச்சப்படாம சொல்லு, சொல்ல கூச்சப்படுவியோன்னு தான் உன்னை தனியாக வரச்சொல்லி கேக்கேன் ஏன்னா உனக்கு தாலி கட்டினவன் நிம்மதியா சந்தோஷமா இருக்கிறதா தெரியலையே, எதையோ பறிகொடுத்தவன் போல் இருக்கிறான் அதனால கேட்க வேண்டி இருக்கு இப்போ நீ உண்டு இல்லேன்னு சொன்னா நாலு பேருக்கு தெரியாம நாம உள்ளுக்குள்ளவே சரி பண்ணிக்கலாம் அதுக்காக கேக்கிறேம்மா

சொர்ணமுத்துவின் முகம் மாறிவிட்டது கீழே விழுந்து எழுந்து மீசையில் மண்ணு படவில்லை என்று கூறுவோர் முகபாவனையும் மனநிலையும் எப்படி தோற்றம் அளிக்குமோ அப்படியாகிவிட்டது

தெரிந்து கொண்டார்கள் என்பதை புரிந்து கொண்ட சொர்ணமுத்து வீட்டைவிட்டு போ என்று அவர்களே கழுத்தில் கையை வைத்து வெளியில் போ என்று சொல்லுவதற்கு முன் தானே பெட்டியை தூக்கிக்கொண்டு தாய் வீட்டுக்கு புறப்பட்டுவிட்டாள்

டேய் மகனே வரதராசா (அக்கம்பக்கம் உள்ளவர்கள் காதில் விழும்படி) உன் மனைவிக்கு அவங்க அம்மா ஞாபகம் வந்துட்டதாம் அவளை அவங்க வீடுவரை கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடு இரண்டு நாள் இருந்து விட்டு வரட்டும் என்றார் அம்மா

மகன் வரதராசன் புரிந்து கொண்டு தன் மனைவியை பலரும் பார்க்கும்படி சந்தோஷமாக அழைத்து கொண்டு போய் விட்டுவிட்டு வந்துவிட்டான்

அக்கா முத்தழகி வந்தாள், அம்மாவும் சேர்ந்து என்னாச்சு போவும் போது ரெட்டையா போனே வரும்போது ஒத்தையா வந்திருக்கே என்று கேட்க

இன்னும் என்னாகனும் உன் வீட்டுக்காரன் என் வாழ்க்கையை குழிதோண்டி பொதைச்சிட்டான் , சட்டியில ஒரு பருக்கை வைக்காம தின்னு ஏப்பம் விட்விட்டு வெறும் சட்டியை கட்டிக்கொண்டு போனவன் கழுவியா குடிப்பான், அது அவங்களுக்கு முதல் இரவு நிம்மதியாக நடைபெறவில்லை என்று தெரிந்து கொண்டார்கள் நல்ல வேளை எந்த கூச்சலும் குழப்பமும் பண்ணாமல் அனுப்பி வச்சிருக்காங்க

அக்காவுக்கும் அக்கா புருஷனுக்கும் மனஸ்தாபம் விஷயத்தை வெளியே விடவும் முடியாமலும் சும்மா இருந்து விடவும் முடியாமலும் திகைத்துப் போய் கொதியா கொதித்துப்போய் இருக்கிறார்கள் இது தம்பி சிங்கமுத்துக்கு தெரிந்தால் பூகம்பம் வெடிக்குமோ என்ற அச்சமும் உள்ளது தங்கை வீட்டாருக்கு தொல்லை கொடுக்காமல் டயிலரிங் டீச்சராக அவளின் வேலையை பிடித்து கொண்டாள்

தம்பி எட்டாம் வகுப்பு பாசாகி ஒன்பதாம் வகுப்பு வேறு பள்ளியில் இரண்டு மூன்று கிலோமீட்டர் தினம் நடந்து சென்று படித்துவந்தான் இரண்டு பெண்களை கட்டி கொடுத்து விட்டு பிறகே மூன்றாவது ஆண்டில் அண்ணன் சிங்கமுத்து கல்யாணம் செய்து, ஒரு மாதம் லீவு முடிவுற மனைவியை வீட்டிலேயே விட்டுவிட்டு தனது பணியைத் தொடற பயணம் ஆகும் போது தங்கையை அழைத்து உங்கள் வீட்டில் இருந்து யாரும் கல்யாணத்திற்கு வரவில்லையே ஏன்? என்று கேட்டான்

கையில் ஏதும் இல்லையோ என்னவோ ஒன்றும் செய்யாமல் கல்யாணத்திற்கு எப்படி போவது என்று நின்றுவிட்டார்கள் என்றாள்

அதனால என்ன கல்யாணத்திற்கு வந்து இருக்கலாம் இல்லையா உன் புருஷனுக்கும் போட்ட மச்சான் மோதிரம் ஒரு சவரன் வரவில்லையே என்று நான் ஒன்னும் வருத்தப்படவில்லை, சரிவிடு தம்பிக்கு கல்யாணம் ஆகும் போது போடலாம் என்று இருக்கலாம், இவ்வளவு தானா உங்க சொந்தம் ஆமாம் நீ ஏன் இன்னும் உங்க வீட்டுக்கு போகவில்லை ஏதாவது பிரச்சனையா என்ன

ஒன்னும் இல்லை அண்ணா அவர் வேலை விஷயமா வெளியில் இருக்கிறார் இங்கே இருக்கும் முகங்கள் எல்லாம் உனக்கு புதிய முகங்கள் மனசு விட்டு எதுவும் பேசமுடியாது அதனால் நான் வரும் வரை நீ உங்க அம்மா வீட்டிலேயே இரு நான் வந்த பிறகு உன்னை அழைச்சிக்கிட்டு போறேன்னார் அதான் என்று ஒரு அப்பட்டமான பொய்யை சொன்னாள்

ஓ....அப்படியா சரி எனக்கு லீவு முடிஞ்சிருச்சி நான் வரேன் என்று விடை பெற்றான்

மாப்பிள்ளை வீட்டார் அக்கம் பக்கத்திலும் பயங்கர கேள்விமயமாகவே இருந்தது உண்மையை சொன்னால் அவமானம் யாருக்கு நமக்கு தானே மானம் போய் உயிர் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன வேறு கல்யாணமும் பண்ணுவும் முடியாது என்று முடிவெடுத்து ஊரார் வாயிக்கு பயந்து , இருக்கும் சொந்த பந்தங்களுக்கு பயந்து சொர்ணமுத்துவை மீண்டும் அழைத்து வந்து வீட்டோடு வைத்துக் கொண்டார்கள், இவர்களை எதையும் தாங்கும் இதயங்கள் என்றே எண்ணினாள் எழுந்திரு என்றால் எழுவது உட்காரு என்றால் உட்காருவது போன்ற மரியாதை கொடுத்து அவர்கள் சொல்படி நடக்கலானாள் ஆனாலும் அவளின் கணவன் அவளிடம் முகம் கொடுத்து பேசுவது கிடையாது, கர்பமாகிவிட்டாள்

வீட்டார் ஜோசியரை அழைத்து முதல் இரவு நாளை கணக்கெடுத்து கர்பமானது தெரிந்தவரை கணக்கு போட்டு பார்த்தார்கள், கணக்கு துள்ளியமாக இருந்தது கண்டு கொஞ்சம் நிம்மதியாக இருக்கலானார்கள் நம் மகனுக்கு தான் கர்பமாகி இருக்கிறாள் என்று நம்பினார்கள்

நீங்கள் சந்தேகப்பட்டது தவறு என நினைக்கிறேன் அவள் படித்த பிள்ளை பள்ளியில் ஓடியாடி விளையாட வைப்பார்கள், யோகாசனம் செய்ய வைப்பார்கள், வலைப்பந்து போன்ற விளையாட்டும் உள்ளது அதனால் அவள் உடம்பில் தளர்வு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது அதை வைத்து அடிமாடு என்று தவறாக முடிவு பண்ணுவது சரியில்லை

அப்படி சொல்வது பெண்ணின் இனத்தையே அவமானமாக சித்தரிப்பது தவறு என நேக்கு தோன்றது அந்த காலத்தில் பள்ளியில் விளையாட்டெல்லாம் இல்லாதிருந்தது அதனால் பெண்கள் கட்டுக்குலையாமல் இருந்தார்கள் அது தான் உண்மை என்றது தான் கணவன் முதல் கொண்டு எல்லோரும் நம்பினார்கள்

கடவுளே உமக்கு கோடி நன்றி என்று நினைத்து யாருக்கும் தெரியாமல் ஜோசியருக்கு இரண்டாயிரம் ரூபாயை கொடுத்தாள் ஜோசியர் பூரித்து போனார்

கடவுள் இப்படி அவர்களிடம் சொல்லவைத்தான் சொல்லிட்டேன் அவர்களும் நம்பிட்டார்கள் நீயும் பிரார்த்தனை பண்ணிண்டு வா எல்லாம் நன்னாயிடும் கவலையை விடும்

அதே சந்தோஷம் கணவனுக்கும் வந்து யாருக்கும் தெரியாமல் மூனாயிரம் ரூபாயை கொடுத்தான் ஜோசிருக்கு

தம்பி என் மகளுக்கு யனிவர்சிடி பரிட்ச்சை எழுத ஹால் டிக்கெட்டு வாங்க எக்ஸாம் பீஸ் கட்ட காலனா கையில் இல்லாமல் இருந்தேன் உன் மூலமா கடவுள் அதற்கு வழி பண்ணிட்டான் ரொம்ப நன்றி தம்பி என்றார் ஜோசியர்

இங்கே மிலிட்டரி காரன் சிங்கமுத்துவின் மனைவி கரும்பு ருசி கண்ட எறும்பு போல இப்படி ஆசைக்காட்டி மோசம் பண்ணிவிட்டு போனவன் எப்போது வருவானோ அவன் அருகிலேயே இருக்க வேண்டும் அவன் அனைப்பிலேயே திளைக்க வேண்டும் போலிருக்கிறதே என் ஆசைக்கு அச்சாரம் தருவானோ என்ற தூக்கத்துக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ஏக்கத்தோடு சிந்தனைகளை பகடை காய்களாக்கி சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தாள் சிங்க முத்துவின் மனைவி பூங்காவனம்

மூன்றாவது மாதம் அவளது கரு கலைந்து விட்டது வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை சொன்னால் வருந்துவார்கள் என்று மறைத்து விட்டாள்

பூங்காவனத்தின் அண்ணன் மங்காத்தா ஆட்டம் ஆடி தோற்ற முகமாயிருக்க அண்ணனின் நாலு சக்கர வாகனத்தை நான்கு ஐந்து மாத தவணையை கட்டாமல் இருந்து இருக்கிறான் வங்கியில் இருந்து ஆட்கள் வந்து வண்டியை பிடிங்கிக்கொண்டு போக வந்துள்ளார்கள்

ஊரார் பார்க்க இது நடந்தால் மானப் பிரச்சினை யாகிவிடும் என்னையும் கேவலமாக நினைத்து நக்களிக்கப் பார்கள் என்று பணத்தை கொடுத்து விட யார் யாரிடமோ போய் கேட்டு கிடைக்காததால் கடைசியில் திடீரென்று தனது தங்கையிடம் பணம் ஐயாயிரம் கேட்டு இருந்தான்

எனக்கு எந்த குறையும் வைக்காமல் சீரும் சிறப்புமா நல்ல மாதிரியா மனசுக்கு திருப்தியாக கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க அவங்களுக்கு ஒரு இக்கட்டுன்னும் போது எப்படி விட்டுவிட முடியும் அதை கருதி உதவ முனைந்தாள்

அவளது கையில் இரண்டாயிரம் வீட்டில் செலவுக்காக வைத்திருந்த பணத்தோடு கூட வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அடுத்தவரிடம் தனது நகைகளில் ஒன்றை அடகு வைத்து பணத்தை வாங்கி அண்ணனுக்கு கொடுத்து அனுப்பிவிட்டாள்

நகையை வாங்கி பணம் கொடுத்தவரின் மகன் மைத்துனன் தங்கமுத்து கூட ஒன்பதாவது படிப்பவன் எதார்த்த மாக °° டேய் தங்கமுத்து உங்க அண்ணி எங்க அம்மாகிட்ட நகையை அடகு வைத்து பணம் வாங்கிக்கொண்டு போனதுடா போட்டிருக்கும் நகையை அடகு வைக்கும் அளவுக்கு வீட்டிலே கஷ்டமா உங்க அண்ணன் மாதாமாதம் பணம் அனுப்புவது இல்லையா ஒர் மிலிட்டரி காரர் பொண்டாட்டி இப்படி செய்தது மனசுக்கு கஷ்டமா இருந்ததுடா அதனால சொல்ல வந்தேன் °° என்று வருத்தமாக சொன்னான்

தங்கமுத்துவுக்கு பகீரென ஆகிவிட்டது °° இருக்கும்டா°° என்று நண்பனுக்கு பதில் சொல்லிவிட்டு யோசிக்கலானான்

°° அண்ணா அனுப்பிய பணம் இவ்வளவு சீக்கிரம் தீர்ந்து போய் விட்டிருக்குமா, அரிசி பருப்பு நம்ம நிலத்தில விளையிது வாங்க வேண்டிய அவசியம் இல்லையே அப்படியே தீர்ந்து போனாலும் அம்மா கைநீட்டி கடன் வாங்கியோ, இல்லை பொருளை அடகு வைத்தோ நானறியேன் வீட்டுக்கு வாழ வந்தவங்க செலவாளியோ அம்மாவுக்கு சொல்லி ஜாக்கிறதையா இருக்க சொல்லனும்°° என்று பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குப்போனான் °° அம்மா எங்க பள்ளியில் இருந்து எல்லோரும் பாட சம்மந்தமா சுற்றுலா போவனுமாம் பணம் ஐநூறு கொடும்மா°° என்று ஆரம்பித்தான்

°° மருமகளே உன்னோட மச்சினனுக்கு ஒரு ஐநூறு ரூபாய் வேண்டுமாம் கொடும்மா அதுக்கு தகுந்தவாறு செலவை கட்டுபடுத்து°° என்றார்கள்

மருமகள் பூங்காவனம் வகையா மாட்டினோம் என்று என்ன பண்ணுவது என்று ஒன்றும் புரியாமல் திகைத்தாள் அவளால் நிலைகால் கொள்ள முடியவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் தின்ன வேண்டியதை குப்பை டப்பாவில் போடுகிறாள், குப்பை டப்பாவில் போட வேண்டியதை வாயில் போடுகிறாள் பின் அவளே தலையில் அடித்துக்கொள்கிறாள் அதை நினைத்து அசடு வழிகிறாள் கடைசியில் வேறு வழியில்லை என்று ஒரு முடிவுக்கு வந்து °° கொழுந்தனாரே இப்படி கொஞ்சம் வாயேன் என்று உள்ளே அழைத்தாள்°° கொழுந்தன் உள்ளே போனதும் அவனை கட்டி தழுவி முத்த மொழியைப் பொழிய

தங்கமுத்துவுக்கோ நடுக்கம் கண்டுவிட்டது முகமெல்லாம் வேர்த்து கொட்டுகிறது, உடம்பெல்லாம் அணல் பறக்கலாயின, அவனின் முகமெல்லாம் அவள் மார்பில் ஒட்ட வைத்துக்கொண்டதால் இத்தனை நடந்தும் அண்ணி என்பவள் ஒரு தாயிக்கு சமம் என்று சொல்வார்கள் என நினைத்து தழுவத் துடித்த அவனது கைகளை தொங்கவிட்டே வைத்திருந்தான் °° வேணாம் அண்ணி இது அண்ணனுக்கு தெரிஞ்சா என்னை கொன்னேபுடுவார் இதனால் விரோதிகளாயிட வாய்ப்பு உருவாயிடும்°° என்றான்

°° நான் அண்ணி இருக்கேன் °°

°°நீங்க இருப்பீங்க நாங்க அண்ணன் தம்பியாக ஒன்றாக இருப்போமா °°

°° அட கடவுளே என் தலையில் தொவைச்ச துணியையே துவைக்க வச்சிருக்கீயே நான் அப்படி என்ன பாவம் பண்ணேன்°° என்று நினைக்க அவனை அறியாமலேயே ஒரு அவமானம் போர்வை போர்த்தியது

°° பயப்படாமல் இரு ஏன் பயப்படுறே நான் என்ன புலியா சிங்கமா அண்ணிடா உன் அண்ணன் பொண்டாட்டி °° என்றாள்

°° அண்ணன் என்னடா தம்பி என்னடா நீங்க இரண்டு பேரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் தானேயடா, அண்ணன் தொட்டால் என்ன தம்பி தொட்டால் என்ன என்கிறாங்க போல இருக்கு°° என அவன் நினைவில் ஓடியது

°° நான் உங்களை யாரையும் கேட்காமல் எங்க அண்ணனுக்கு பணம் கொடுத்தேன், நமக்கு இந்த மாத செலவுக்கு உங்க அண்ணன் உங்க அம்மா பேருக்கு அனுப்பின இரண்டாயிரத்தை என்னிடம் இந்தாம்மா வச்சி சிக்கனமாக செலவு பண்ணுன்னு சொல்லி கொடுத்தாங்க அந்த பணத்தோடக்கூட மூவாயிரம் நகையை அடகு வச்சி மீதி பணம் வாங்கி ஐயாயிரம் ரூபாய் என் அண்ணனிடம் கொடுத்துவிட்டேன் அவர் வண்டிக்கு தவணையை கட்டாமல் இருந்திருக்கிறார் வங்கியில் இருந்து ஆட்கள் வந்து வண்டியை ஓட்டிக்கொண்டு போவப்போறாங்களாம் அவர் கேட்ட இடத்தில் பணம் சாயல மானப் பிரச்சினை அதனால கொடுத்தேன் இப்போ உனக்கும் பணம் தேவைபடுது °° என்று ரகசியமாக சொன்னாள்

ஓ...இதற்கு தான் இத்தனை சவர்த்தனையா ஏதாவது தப்பு பண்ணிவிட வேண்டியது அதை சரிகட்ட இந்த மாதிரி மந்திரங்களை ஓத வேண்டியது, நல்லா வருவீங்க என்று நினைத்தான்

°° நகையை யார்கிட்ட வச்சி பணம் வாங்கினீங்க°°

°° உன் கூட படிக்கிறானே உன் சிநேகிதன் அந்த பையனோட அம்மாகிட்ட கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து மீட்டுக்கிறேன் என்று சொல்லி வாங்கினேன் ம்..ம்... உனக்கு ஏங்கிட்டேயிருந்து ஏதாவது வேணுமா தயங்காமல் கேளு தாரேன், நீ என்னை என்ன வேணுமின்னாலும் கூட பண்ணிக்கோ ஆனால் உங்க அம்மா கிட்டேயும் உங்க அண்ணன்கிட்டேயும் போட்டு கொடுத்துடாதே கண்ணா °° என்று கெஞ்சினாள்

அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன சொல்லிடப்போறாங்க

ஏண்டி நீ நகைபோட்டுக்கிட்டு வந்தா உன் இஷ்டப்படி எது வேணுமின்னாலும் பண்ணுவியா உங்க அம்மா வீட்டுக்கு தெரிஞ்சா முப்பது சவரன் நகை போட்டு அனுப்பினேன் எல்லாத்தையு வச்சி பொருக்கி தின்னுட்டாங்களான்னு பழியை எங்க மேலப் போட்டு எங்கலையில்ல வைய்யிவாங்கன்னு ஊரு உலகமெல்லாம் சொல்லிச் சொல்லி எங்க மானத்தை தெரு சிரிக்க வைத்துவிட மாட்டாங்களா

அண்ணனுக்கு தெரிஞ்சாலும் இப்போ நீங்க சொன்னமாதிரித்தான் சொல்வார் மனக்கஷ்டம் இப்படித்தான் பிறக்க வழி உண்டாயிடுது இப்போ என்ன பண்ணலாம்

நம்ம நண்பன் சொன்னது போலவே சொல்றாங்க மறைக்கிற மாதிரி தோணல கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான் °° ஆஹா நல்ல டீலிங்கா இருக்கே°° என்று நினைத்து °° உனக்கு எது வேணுமின்னாலும் தயங்காம கேளுன்னு சொன்னீங்களே பணம் தான் சுத்தமா இல்லையே அப்புறம் எப்படி கேட்பது °°என்றான் மைத்துனன்

°° நான் பணத்தை சொல்லவில்லை என்னைய சொன்னேன் உங்க அண்ணன் போட்ட ஆட்டம் மாதிரி உனக்கும் ஆடனுமின்னா கேளுன்னேன் °° என்றாள் அண்ணி

அண்ணன் குடி போதையில் ஆடியிருப்பார் எனக்கு அந்த பழக்கமே கெடையாது அப்புறம் எப்படி அண்ணன் ஆடிய ஆட்டத்தை ஆடுவது என்றான்

ஆமாம் இல்ல ஒரு பாட்டல் ஓப்பன் பண்ணது இருக்கு வேணுமின்னா குடிச்சி பாரேன்

°° என்ன யோசிக்கிறேன்னாள் °°

°° ம்...ஒன்றுமில்லை °°

°° நீ இப்போ என்ன யோசிக்கிறேன்னு எனக்குத் தெரியும் °°

°° என்ன யோசிக்கிறேன் °°

°° இன்னொருத்தர் ஓட்டின வண்டியை
நாம ஓட்டினா அது சரிப்பட்டு வருமா எங்கேயாவது மோட்டுல மோதிக்குமா பள்ளத்தில் கொண்டு போய் விழ வச்சிடுமான்னு தானே யோசிக்கிறே °°

°° ஐய்.....யோ... அபாரம் °°

°° ம்...நாங்களும் பள்ளிக்கூட வாசலை மிதிச்சவங்கதாம்பா °°

°°சூப்பர் ஆமாம் கேட்டுத்தான் கொடுப்பீங்களா, நல்லா டெக்னிக்கா பேசுறீங்க, சரி நான் பிக்னிக் போகல போதுமா, ஆனாலும் இந்த மாதத்தை எப்படி ஓட்டுவே °°

°°அதான் தெரியாமல் கொழப்பமா இருக்கு மச்சினனே , நீ பிக்னிக் போகலன்னாலும், உங்க அம்மா திடீர்னு ஏதாவது வாங்க பணம் கிணங் கேட்டால் என்ன பண்றதின்னு ஒன்னும் புரியவில்லை, நீயோ பள்ளிக்கூடம் போகிற பிள்ளை ஊங்கிட்டேயும் ஒன்னும் இருக்காது, பூரா பணத்துக்கும் நகையையே அடகு வச்சிருக்கலாமேன்னு இப்பொ யோசனை வருது, கையில இருந்த பணம் அப்படியே இருந்திருக்குமில்ல, உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா மானத்தை வாங்கிடுவாங்க, ஊரு பூறா நாறடிச்சிடுவாங்க, இந்த விஷயம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா ஏதாவது கொஞ்ச நஞ்சம் கொடுக்கிறதைக்கூட நிறுத்திக்குவாங்க பயமா இருக்கு நீ தான் விவரம் தெரிஞ்ச பிள்ளையாச்சே ஏதாவது யோசனை சொல்லேன் °° என்று மீண்டும் கட்டி பிடித்துக் கொண்டாள்

°° அடேயப்பா விஷயம் ஏகபட்ட பேரை போய் தாக்குதலை ஏற்படுத்துது, ரொம்ப தூரம் வரை போவுது , பயப்படாதே அண்ணன் போகும் போது அம்மாவுக்கும் அண்ணி உங்க இரண்டு பேருக்குமே தெரியாமல் வீட்டில் இருப்பவர்களை தொல்லை பண்ணாதே இந்தா இதைவச்சி உன் பள்ளிக்கூட செலவு என்னாவோ அதை பாத்துக்கோ பத்தாமல் போனால் அம்மாகிட்டயோ இல்லை அண்ணிகிட்டயோ கேட்காதே எனக்கு கடிதம் எழுது என்று கொடுத்துவிட்டு போனார் இதுவரைக்கும் செலவு எதுவும் வரல, நான் செலவு பண்ணாமல் வச்சிருக்கேன் அதவச்சி மாதத்தை ஓட்டிக்கலாம் ஆமாம் கட்டிப்புடிச்சிட்டு இப்படி அம்போன்னு விட்டா எப்படி °° என்றான் மைத்துனன்

°° மைத்துனனை தம் மடியில் படுக்க வைத்துக்கொண்டு ஆமாம் இதைபத்தியெல்லாம் உனக்கு தெரியுமா, எப்படி தெரியும் எவளாவது காதலி கீதலின்னு இருக்கிறாளா °°

°° என்ன நீயா கூப்பிட்டு, நீயா கட்டி புடிச்சிட்டு இப்போ பேச்சை திசை திருப்புவது கொஞ்சம் கூட நல்லா இல்ல, காதலி ஒரு வேள இருந்தால் கூட அவங்ககிட்ட இப்படி நடந்துக்கிறது அநாகரீகம் இல்லையா அதுக்கு பெயர் காதல் இல்லை காமம் இப்படிதான் யாருகிட்டேயும் உளறி வைக்காதீங்க, நான் பணம் தரமாட்டேன் நீ எப்படி இந்த மாசத்தை ஓட்டுவீயோ எனக்கு தெரியாது, இதை அம்மாவுக்கும் அண்ணனுக்கும் தெரியபடுத் தப்போறேன்°° என்று கூறி இடத்தை விட்டு எழுந்தான் வெளியில் போக
கொஞ்சம் நேரம் யோசிச்சாள் பிறகு என்ன நினைத்தாளோ அவனை போகவிடாமல் போய் குறுக்கே நின்று தடுத்தாள் மீண்டும் அவனை கட்டி பிடித்து °° இப்போ நான் என்ன அப்படி கேட்க கூடாததை கேட்டுவிட்டேன் உனக்கு இந்த விஷயமெல்லாம் எப்படி தெரியும் என்று தானே கேட்டேன் தெரிஞ்சி இருந்தா இதனால் தெரியும் , தெரியலன்னா தெரியலன்னு சொல்ல வேண்டியது தானே அதுக்கு தடால்ன்னு எழுந்து போற இந்த மாதிரி பேசிக்கிட்டாதான் அந்த நெனப்பே வரும் அதனால பேசினேன் இதுகூட தெரியாம இருக்கிறீயே °° என்றாள் அண்ணி

°° தங்கத்தில் உறுதியா இருக்கோனுமுன்னு செம்பை கலக்கிறதும் இப்படித்தானா°° மனதுக்குள் நினைத்துக்கொண்டான் °°நீ இந்த வீட்டுக்கு வரும் வரைக்கும் சத்தியமா இதைபத்தி யெல்லாம் ஒன்னும் தெரியாது, நினைத்து கூட பார்த்ததில்லை பள்ளிக்கூடம் படிப்பு இதை விட்டா வேறெதவும் தெரியாது °°

°° இப்போ திடீர்னு எப்படி தெரிஞ்சிக்கிட்டே °°

°° திடு திப்புன்னு என்னை கட்டி புடிச்சதாலே, நீயும் அண்ணாவும் போட்ட ஆட்டம் இருக்கே கொஞ்ச நஞ்சமா என்ன சொரணை வராதவனுக்கு கூட சொரணை வந்துடும் எனக்கும் அப்படிதான் அம்மா இருக்காங்க வயசு பையன் இருக்கான் என்று அடக்க ஒடுக்கமாக நடந்து இருக்கனும் கிடைக்காமல் கெடைச்ச கம்பங்கூழு சிந்தாம குடிடா சில்லி மூக்கா என்பாங்க நீங்களா காஞ்ச மாட்டை கம்புல விட்டா போல இல்ல நடந்துகிட்டீங்க
அப்படி நடந்துகிட்டு இருந்திருந்தா நான் எதையும் தெரிஞ்சிக்காம இருந்திருப்பேன்°°

°° ஆமாம் அவர் ஏங்கிட்ட கொஞ்சம் ஓவராதான் நடந்து கிட்டார், மிலிட்டரி காரர் ஆச்சே போதையை அவரும் போட்டுக்கிட்டு எனக்கும் போட்டு விட்டுட்டு பாடா படுத்திடுவார் °°

°° அப்புறம் எப்படி எனக்கு தூக்கம் வரும்
உங்க இரண்டு பேருகிட்டேயும் தான் தெரிஞ்சிக்கிட்டேன் °°

°° சரிசரி வா...முதலில் வெளியில் அம்மா எங்க இருக்காங்கன்னு பார்த்து சரிபண்ணிட்டுவா °°

°° கட்டுத்தெருவில் ஆடுகள் இல்லை ஆவிழ்த்துக்கொண்டு மேய்க்க போயிட்டாங்க போல இருக்கு°° என்றான்

°° நல்லா தெரிமா பொக்கையால போனது பொறிமாவு என்ற கதையா அயிடப்போவுது , அப்போ கதவை மூடிட்டு வா°° என்றாள்

அண்ணி மடங்கிவிட்டாள் அப்போது ஆரம்பித்தவன் மூனு பிள்ளைகளை பெறும்வரை அவனுக்கு கல்யாணம் பண்ணும் வரை தொடர்ந்தது, படிப்பை கோட்டை விட்டுவிட்டான்

கரு தங்கிவிட்டது மாதங்கள் முன்னபின்ன வருமே காட்டி கொடுத்துவிட்டதே என்ற கவலையே படவில்லை யாரும் அதைப்பற்றி சிந்திக்கவே இல்லை என்பது அவளின் நல்ல நேரம் எனலாம்

அண்ணன் பிடிக்காதவங்க கையை காலை பிடித்து தம்பியையும் மிலிட்டரியில் சேர்த்து விட்டான்

இரண்டு பேரும் லீவு கிடைக்கும் போது சேர்த்து வரமாட்டார்கள் அண்ணன் லீவில் வருவதற்கு முன் தம்பி வந்து விடுவான், அண்ணன் வரப்போகும் நாளை சொல்லிவிடுவாள், அதை வைத்து தம்பி வந்து விடுவான், தம்பி போன பிறகுதான் அண்ணன் வருவான் லீவில் அதற்குள்ளாக கர்ப்பம் ஆகிவிட்ட அறி குறி அவளுக்கு தெரிந்து விடும்

இப்படியாக சில காலங்கள் ஓடின, தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க
இருவரும் ஒன்றாக வரவேண்டியது இருந்தது, பெண்ணை பார்த்தார்கள் கல்யாணம் முடிந்தது

°° உங்க அண்ணனோடு ஒரே வீட்டில் என்னால இருக்க முடியாது வாங்க எங்க ஊரோடு போயிடலாம்°° என்று வேப்பிலை அடித்தாள் இரண்டாவது மருமகள் அவளின் கணவனுக்கு,

°° இங்கே பாருங்க அவங்க எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சிட்டவங்க நாம இப்போது தான் புதுசா கல்யாணம் பண்ணி இருக்கோம், நாம அப்படி இப்படி இருந்துக்கோணுமுன்னா முடியாது, மனசுவிட்டு பேசிக்கொள்ளவும் முடியாது ஏதாவது குறை சொல்லிக்கிட்டு இருப்பாங்க நமக்கு மனகஷ்டம் வரும் நாம ஒன்னு சொல்ல அவங்க ஒன்னு சொல்ல வீணான விபரீதம் உண்டாவும் அப்புறம் நாலு பேர் பார்த்து சிரிப்பவங்களும், காரி துப்புகிறவங்களும் உருவாவாங்க நமக்கு அசிங்கம் உங்களுக்கு உண்டானதை பிரிச்சி கொடுக்கச் சொல்லி கொடுக்கிறதை வாங்கிகிட்டு ஒதுங்கிக்கிறது தான் நமக்கு அழகு°° என்றாள்

மனைவி சொன்னது எல்லாம் சரின்னு பட்டது °° சரி அப்படியே செய்யலாம்°° என்றான்

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை அண்ணி பூங்காவனம் கேட்டுக்கொண்டிருந்தாள் அது இவர்களுக்கு தெரியாது முதலில் பெரிய ஆஸ்பத்திரியில் பூங்காவனத்துடன் படித்தவள் கைம்பெண்ணாக பணிபுரிகிறாள் அவளிடம் சென்று மனம்திறந்து மானம் போனாலும் பொவட்டும் என்று பேசினாள்

இங்க பாரு வள்ளி எனக்கு பிறந்த மூனு பெண்களும் என்வீட்டுக்காரனுக்கு பிறந்தவர்கள் இல்லை

°°என்னடி சொல்றே°° அதிர்ந்து போனாள் சிநேகிதி

°°ஆமாம் அவர் லீவில் வரும்போது எனக்கு இரண்டாம் மாசத்திலேயே மாதவிடாய் நின்று விடும் அப்போ எனக்கு புள்ள தங்கிடுச்சி என்று தெரிந்து விடும் வீட்டுக்காரருக்கு அதை பத்தி நெனைக்கிறதே இல்லை வந்தோமா கெடைச்சதா குடியில்லாமல் நெருங்கமாட்டார் ஒருமாதம் லோலுபட்டுவிட்டு போய்டுவார் இப்படி யாக மூனும் மைத்துனருக்கு பொறந்தது இப்போது கல்யாணம் ஆயிடுச்சி சொத்து பிரிக்கிறது பற்றி ஆம்படியானும் பொண்டாட்டியும் பேசிக்கிட்டாங்க இருக்கிறதில ஒரு பொட்டு கூட கொடுப்பதாக இல்லை அதை தான் சரி செய்யனும் அதனால இதுங்க அவனுக்கு தான் பொறந்தது என்று வாயால் சொன்னால் எடுபடாது அதை நிருபிக்க வழி என்ன சொல்லு புள்ளை கொடுக்கிறவன் ஒருத்தன் அதுகளுக்குன்னு ஜென்மத்தை செருப்பால் அடிக்காத குறையா, எல்லையில் காத்து மழையில் பனியில் அவஸ்தை பட்டவன் சம்மந்தம் இல்லாதவனா செலவு செய்வான் °°

°° டிஎன்னே டெஸ்ட் எடுத்தா கண்டுபிடிச்சிடலாம்°°

°° மனசு கேக்கல அதுக்காக நான் என்ன பண்ணுவது சொல்லுடி கழுத்துவரைக்கும் வெள்ளம் வந்துவிட்டது முழுவுறதுன்னு தெரிஞ்சி போச்சி இனிமேல் ஜான் தப்பினா என்ன முழம் தப்பினா என்ன ஒருகை பார்த்துவிடுவது என்ற குறியில் இருக்கிறேன் சொல்லு நீ சொன்ன அந்த டெஸ்ட்டு பண்ண நான் என்ன பண்ணனும் °°

°° ஒன்னும் வேண்டாம் இரத்த பரிசோதனை செய்தால் கண்டுபிடித்துவிடலாம் என்று நினைக்கிறேன் எனக்கு சரியா தெரியாது அதுக்கு நீ டாக்டரைதான் கன்சல்ட் பண்ணனும் °°

°°அப்படியா டாக்டரை எப்படி சந்திக்கிறது°°

ஒன்னு பண்ணேன் அதுக்கு முன்ன உடந்தை யானவனை தனியா கூப்பிட்டு மெறட்டிப்பாரு படிஞ்சா சரி இல்லேன்னா நீ ஒரு வக்கீலை புடிச்சி கேஸ் போட்டீன்னா தேவையான எல்லாத்தையும் அவங்க இருக்கும் இடத்தில் இருந்து கரந்து கொண்டுவந்துவிடுவாங்க°°

°° அதுவும் சரிதான் சரிசரி °° மைத்துனனை தனியாக சந்திக்க வழிவகுத்தாள் அவனும் வரச்சொன்ன இடத்துக்கு வந்தான்

°° இங்கே பார் மைத்துனா மூனு பொண்ணு பிள்ளைங்களுக்கும் சரியா சொல்லப்போனால் அப்பா நீதான், நீ கொடுத்த பிள்ளைக்கு அடுத்தவங்க செலவு செய்ய அவங்க தலைவிதி இல்லை அதனால அவங்க கல்யாணம் எல்லாமும் உன் செலவில் தான் நடக்கனும் மைத்துனா என் பொண்ணுங்க அவங்க அப்பா லீவலு வந்தாக்கூட அவருகிட்ட போகமாட்டாளுங்க ஒரு அன்னியனைப்போல பாத்தாங்க ஆனா ஓங்கிட்ட சித்தப்பா சித்தப்பான்னு உயிரை விட்டாளுங்களேடா நேத்தைக்கு நீயும் உன் பொண்டாட்டியையும் பங்கு பாகத்தை பற்றி பேசினதை நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன் பங்கு பாகம் வேணுமுன்னா ஒவ்வொரு புள்ள பேர்லேயும் அஞ்சஞ்சி லட்ச ரூபாயை போடு அவங்களை கட்டி கொடுக்க இல்லை பங்கு பாகமுன்னு கிட்ட வரக்கூடாது எப்படி உத்தேசம் °° என்றாள் அண்ணிக்காரி

°° அதுக்கு எனக்குத்தான் பொறந்ததுன்னு எதைவச்சி சொல்றே அதுக்கு என்ன ஆதாரம் எப்படி நிருபிப்பே °° மைத்துனன்

°° ஏய்...இப்போ நீ எந்த உலகத்தில இருக்கிற, இது கார்காலம் இல்லை தம்பி கலியுகம் கொஞ்சம் நிதானித்து எதையும் யோசனை பண்ணி பேசு, ( சொடக்கு போட்டு ) பிள்ளைகள் மூனுமே உங்க அண்ணன் முகசாடையில் இல்லாமல் உன் முகம் சாடையில் இருப்பது உனக்கு தெரியவில்லையா, அதுவே முதல் ஆதாரம், நீ உன் மனசாட்சிபடி இல்லேன்னு மட்டும் சொல்லு தம்பி அப்புறம் காட்டுறேன் இந்த அண்ணியோட சுய ரூபத்தை, கேஸ் போட்டு விஷயம் எல்லாத்தையும் சொல்வேன் எனக்கு மானம் மரியாதையைப் பற்றி கவலை இல்லை பொண்ணுங்க எதிர்காலம் தான் எனக்கு முக்கியம் அதை நிருபிக்க டாக்டருங்க உன்னை தேடி வருவாங்க ரத்த பரிசோதனை பண்ணுவாங்க, பொண்ணுங்க மூனுபேரின் ஒடம்புல யாரோடு ரத்தம் ஓடுதுன்னு உண்மையை புட்டு புட்டு வச்சிடுவாங்க அப்புறம் உன் பொண்டாட்டியே உன்னை உன் டிக்கியில ஒதைச்சி வெளியில் இழுத்து விடுவா இவ்வளவு ஏன் காலு செருப்பால் கூட அடித்து தொரத்தப்படலாம் இதெல்லாம் நடக்கனுமா உனக்கு என்னென்ன தெரியுமோ அதையெல்லாம் பேசு, உனக்கு என்னென்ன செஞ்சா இதிலிருந்து தப்பிக்கலாமுன்னு மனசில புலப்படுதோ அதையெல்லாம் செய்து பார், பணங்காசை வாரி எறைச்சி நீ தப்பிக்கலாம், அப்படி ஒன்னு நடந்தா நான் தான் உனக்கு எமன் உன்னைய கொன்னேபுடுவேன் °° என்றாள் அண்ணி

°° ஆம்பளை விலா எலும்பில் இருந்து பொம்பளையை உருவாக்கியதாக புனித நூல்கள் சொல்கிறது, பொம்பளைக்கு அந்த நன்றி விசுவாம் கூட இல்லாமல் ஒரு விலா எலும்பு குறைவான பலவீனம் தெரிந்து கொண்டு அவன் விலாவிலேயே எட்டி எட்டி உதைக்கிறாளுங்க போல இருக்கு°° என்று நினைத்து அமைதியா நின்றிருந்தான் மைத்துனன்

°° ரொம்ப யோசிக்காதே மைத்துனா மண்டை வெடிச்சிடும், தொண்டையும் இருக்கிக் கொள்ளும் இது மட்டும் இல்லை நீ வேலை செய்யிற இடத்துக்கு தெரிய வந்ததுன்னா செய்யிற வேலைக்கே வசமான ஆப்பு அடித்து விடுவாங்க உன் வழக்கு தீர்ந்து பிறகு வேலைக்கு வா என்று நிறுத்தி வைப்பாங்க அதுக்கப்புறம் திண்டிக்கே திண்டாடனும் என்ன சொல்றே மைத்துனா°° ஏளனமாக சொன்னாள் அண்ணியார்

°° நானாகவா உன்னை கட்டிபுடிச்சேன் நீ ஒரு தப்பை செஞ்சிட்டு அந்த தப்பை மறைக்க எங்கேயோ சிவனேன்னு கெடந்து என்னை பலிக்கடாவா ஆக்கிக் கொண்டு இப்போ என்ன பிலிம் காட்டுறே,

புருஷன் உணரச்சியை உசுப்பேத்தி விட்டுவிட்டு போயிட்டான் அட நானே தப்பு பண்ணதா வச்சிக்கோ உனக்கெங்கே போச்சி அறிவு நீ சோறுதானே திங்கிற இல்லை வேறு எதையாவது திங்கிறீயா உடனே உங்க அண்ணனுக்கு சொல்லி கோட்ரஸ் ரெடி பண்ணி உம்பொட்டாடிய கொஞ்சம் நாளைக்கு கூடவே வச்சிருப்பா அவ வயிற்றில் பூச்சோ புழுவோ உண்டானதும் கொண்டுவந்து விட்டுவிட்டு போவேன்னு எடுத்து சொல்லியிருக்கலாமில்ல இப்போ உனக்கும் எனக்கும் இடையில இந்த வம்பு வந்திருக்குமா

அம்மா தாயே ராட்சசி எனக்கு வீடும் வேணாம் வாசலும் வேணாம் நிலமும் வேணாம் ஒன்னும் வேணாம் நீயே வாரியடிச்சிக்கிட்டுப்போ ஆளைவிடு °° எரிந்து விழுந்தான் மைத்துனன்

°° வாயால் சொன்னால் ஒத்துக்கொள்ள
முடியாது நான் என்பேரில் எழுத சொல்லி என்னோட ஆத்தா வீட்டுக்கு சுருட்டிக்கொண்டு போக கேட்கல உனக்கு பொறந்த உன் பொண்ணுங்க பேர்ல எழுது °° என்றாள் அண்ணி

இந்த வாக்குவாதம் ஒரு புளிய மரத்து நிழலில் நடக்கிறது மரத்தை புளிக்காக குத்தகைக்கு எடுத்தவன் சிங்கமுத்துவுக்கு பரிச்சயமானவன் மரமரமாக புளியம்பழத்தை பறிக்கும் அவன் புளியம்பழத்தை பறிப்பதை நிறுத்திவிட்டு இவர்கள் கதைகளை கேட்டுக்கொண்டிருந்ததோடுமட்டும் இல்லை தன் கைப்பேசியால் வீடியோவும் எடுத்துக்கொண்டு விட்டான் அவளின் கணவனுக்கு அனுப்பி வைத்தான் கணவன் வந்தான்
தனது சொந்தக்காரர் செத்துவிட்டதாக பொய் சொல்லி லீவு வாங்கிக்கொண்டு ஊருக்கு வந்தான் பெட்டி படுக்கையை வீட்டில் போட்டுவிட்டு எதையோ பறிகொடுத்தது போல் அமர்ந்து இருந்தான்°°

°° என்ன திடீர்னு கடிதம் எதுவும் போடாமல் கூட வந்து இருக்கீங்க என்ன உடம்புக்கு முடியலையா என்ன °° என்று மனைவி கேட்டாள்

கேட்டவள் கெட்டவளாக இருப்பினும் இருக்கும் மூன்று பெண் பிள்ளைகள் எனக்கு பிறக்க வில்லையானாலும் அவர்கள் எதிர்காலம் பலமாக பாதிக்கபட்டு விடக்கூடாது என்பதற்காக
தின்னுப்பாத்தவன் ஒருவன் நின்னுப்பாத்தவன் மேல் பழியா என நினைத்து அவளிடம் °° ஒன்னும் இல்லை என் சிநேகிதன் காலமாயிட்டான் என்னை ராணுவத்தில் சேர்த்தவன் அந்த நன்றிக்காக, நான் நன்றி கெட்டவன் இல்லை என்று போய் கலந்து விட்டு வாறேன்°° என்று பொய் சொல்லிவிட்டு புறப்பட்டு போய் மருந்து கடையில் விஷத்தை வாங்கிவந்து யாரிடமும் எதுவும் பேசாமல் உள்ளே போய் தன்னுடைய மிலிட்டரி ரம்மில் கலந்து குடித்து விட்டான் அவ்வளவுதான் கப்பல் கவிழ்ந்து போச்சி "

°° மருந்து குடிக்கிற அளவுக்கு என்ன பிரச்சினை°° உறவுகள் கேட்கிறது

°°வீட்டில் ஒன்னும் எனக்குத் தெரிந்து பிரச்சினை எதுவும் இல்லையே °°அம்மா சொன்னது

°°வேலை தளத்தில் ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ .... ஏதாவது சொன்னதுண்டா அதுவும் இல்லையே °° உறவினர்

°°அதுவும் தெரியலையே நான் பெத்தது நான் செத்தா என்னை வாரி போட வேண்டியவனை இப்போது பெத்தவளே தான் பெத்ததை வாரி போட வச்சிடுச்சே இனி நான் செத்தா யாரு வாரி போடுவார்கள் °° அம்மா சொன்னார்கள்

அழுது முடித்து கொண்டு போய் அடக்கம் செய்துவிட்டு வந்து ஆளுக்கொரு மூலையில் துக்கத்தில் தோய்ந்து அமர்ந்து இருந்தார்கள்

கணவனோட கைப்பேசி மணி உள்ளே அடிக்கும் சப்தம் கேட்டு பூங்காவனம் உள்ளே போனாள் அது தன் கணவனின் கைப்பேசி இண்டு அழைப்பு வந்து யாரும் எடுக்காத காரணத்தால் மிஸ் காலாகி இருந்தது வாட்ஸ்அப்பில் செய்தி வந்திருப்பதை காட்டியது அதை திறந்து பார்த்தாள்

அன்று கணவனின் பிறந்த நாள் வாழ்த்து சேதி இருந்தது
பிறந்த தேதியும் அன்றே, இறந்த தேதியும் அன்றே ஒரு நாள் குறைவாகவோ இல்லை கூடுதலாகவோ இல்லை இது போல் நிகழ்வது அபூர்வம்
அதை அவளது கணவனுக்கு வீடியோ அனுப்பினவனது புளியை விற்க பெங்களூர் சென்றிருக்கிறார் அங்கிருந்து சிங்கமுத்து தவறிவிட்டது சங்கதி தெரியாமல் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பி இருக்கிறார் அதில் கணவனுக்கு முன் அனுப்பிய வீடியோவும் இருந்திருக்கிறது அதை திறந்து பார்க்க புளிய மரத்தடியில் மைத்துனனோடு பேசியது இருந்தது முடியும் வரை பார்த்தாள்
ஓ....இதனால் தான் மானம் தாங்காமல் இந்த காரியம். செய்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்து கொண்டாள் மனதை வருத்தியது, உடல் ஆட்டம் கண்டுவிட்டது,
மனசாட்சி கோடாரியால் அவள் இதயத்தை பிளந்தது போல் இருந்தது
யாரிடமும் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவியாய் தனிமையில் தவித்தாள் அந்த பயம் அவளை பைத்தியம் ஆக்கிவிட்டது

கணவனின் கைபேசியை மடியில் கட்டிக்கொண்டு என் கணவனை நானே கொன்றுவிட்டேன் என்று தனக்குத் தானேகண்ணில் படுகிறவர் களிடத்திலும் கூறி வருகிறாள்

பைத்தியக்காரி ஏதோ உளறுகிறாள் என்று யாரும் அதை பெரிதாக கருதவில்லை அவளிடம் எப்படி என்று கேட்டால் அவள் உண்மையையே சொன்னாலும் நம்புவதற்கு, யாரும் நம்புவார்களா, மாட்டார்கள்

°°போய் பங்கு பாகத்தை பிரித்து கொண்டு வா இல்லையா இந்த விவாக ரத்து பத்திரத்தில் கையெழுத்து போடு,
பிள்ளைகள் வேணுமா எது ஓங்கூட வரேன்னுதோ அதுகளை இழுத்து கொண்டு போ, இடத்தை காலி பண்ணு தங்கமுத்து விரட்டப்பட்டான் அவனது மனைவியால்

இந்தப்பக்கம் அண்ணி, அந்தப்பக்கம் கட்டிய மனைவி சோதனைமேல் சோதனை, கடவுள் என்னை சோதிக்க வில்லை என்றால் அவன் கடவுளே இல்லை; அந்த சோதனையில் மீளவில்லை என்றால் நான் மனிதனே இல்லை; என்று நினைத்து விவாகரத்து கடிதத்தை மனைவிக்கு கொடுத்து விட்டு தன் சொந்த ஊரோடு வந்துவிட்டான்

அண்ணி அவளது குற்ற உணர்வு அவளை தனிமை படுத்தியது
ஒரு பாழடைந்த கிணற்றங்கரையில் தனியாக அமர்ந்து இருந்தாள் உச்சி வெயில் உச்சத்தில் இருக்க தலை சுற்றல் வந்து உருண்டு கிணற்றில் விழுந்து உயிர் விட்டாள் அண்ணி

அவளை அடக்கம் செய்துவிட்டு தனது பங்கை இரண்டாக பிரித்து அண்ணன் பங்கை முழுவதையும் மூன்றாக்கி பெண்கள் மூவர் பெயரில் எழுதி விட்டு அவன் பங்கை ஐந்தாக பிரித்து இரண்டு பங்கை அவனுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு எழுதிவிட்டு மீதம் உள்ள மூன்று பங்கில் மூன்று பெண்களுக்கும் கல்யாணம் பண்ணி வைத்து தனக்கு வரும் பென்ஷனில் அவன் காலத்தை ஓட்டுகிறான் தங்கமுத்து

வாழ்க்கை சவாரசியமானது; அதை
ரசிக்க தெரியாத வர்க்கெல்லாம்
புசிக்கவே கிடைக்காது எதுவுமே;
ருசிக்கவே முடியாது எதையுமே;
ஆனால் நம்பிக்கை சொல்கிறது நானே
உனக்கு கடவுள் என்று , வித்தை ஊன்று நெத்தாகும் சொத்தை நீக்கிட சொத்தாகும் என்று சொல்வதுண்டு; எல்லாவற்றையும் இழக்க வேண்டிய கட்டாயம் , எனக்கு கிடைக்க இருந்தது இளநீர் ஆனாலும் எனக்கு கிடைத்தது முத்தின தேங்காயும் காஞ்சி போன கொப்பரையும் தான் அதை வைத்து எண்ணெய் பிழிய என்னால் முடியாததால் என்னையே பிழிந்து
புண்ணாக்கு ஆக்கிவிட்டார்கள்

என்னை வஞ்சித்தவர்களாவது நல்லா இருக்கட்டும் என்று பார்த்தால் இழந்தவனைவிட பறித்தவன் நல்லா இல்லை வருத்தமாக இருக்கிறது
இன்னொருவரை நம்பி அவர் பின்னால் நான் நடைபோட விரும்பவில்லை, என்னையொருவர் நம்பி என் முன்னால் கிழியாத உடைபோட விரும்புகின்றேன்

புகழ்ச்சியோ மகிழ்ச்சியோ அதனால்
எனக்கு கிட்டும் என்றால் அதனை
ஏற்க என்னால் முடியாது , புற்றின் பாம்பை வெளிக்கொணர
மகுடி ஊதுவோர் புகழ்வோராவார்
திகழ்வோராவார்

பெண் பாவம் பொல்லாதது தான் ஆனால் எந்த பெண் மீதும் ஆசை வைக்கும் பக்குவத்தை அடையாதவனாக இருந்தேன் யார் செய்த குற்றம் என்று எனக்கு இன்று வரை விளங்கவில்லை இனி விளங்கியென்ன விளங்காது போயென்ன

என் தவறு அண்ணி சொன்னபிறகே புத்திக்கு எட்டியது அண்ணி சொன்னது போல் நானோ அல்லது அம்மாவுக்கு சொல்லியோ அண்ணணுக்கு கடிதம் போட்டு இருக்கலாம் அண்ணியை கொண்டு போய் கூடவே கொஞ்சம் நாள் வைத்திரு அவள் வயிற்றில் பூச்சோ புழுவோ உண்டானப்பின் கொண்டுவந்து விட்டுவிடு என்று ஒரு அனுபவமும் இல்லாதவனிடத்தில் இப்படி எதிர்பார்ப்பு அதிகம் இல்லையா

இனிமேல் இரத்த சம்மந்தம் பட்டவர்கள் ஆனாலும் இரத்த சம்மந்தம் இல்லாதவர்களே யானாலும் இருவரும் உயிர்கள் தானே அண்ணியாரின் விருப்பம் போல் பிள்ளைகளை சீராக்கிவிட்டேன் இப்போது அண்ணி ஆன்மா சாந்தி அடைந்திருக்கும் என்று நம்பினான் தங்கமுத்து
°°°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (9-Apr-19, 9:21 am)
பார்வை : 185

மேலே