நம்ப முடியவில்லை
பார்த்த மாத்திரத்தில் மதி மயங்கி விழும் மதுமதியவளை காதலிக்க வேலை வித்தியை கூட பொருள் படுத்தாமல் ஒரு பெண் நாயைக் கண்டு பின் தொடரும் தெரு நாய்களைப் போல் அவள் பின்னால் அலையாய் அலைய நெருங்கி நெருங்கிப் போகிறேன்
அவளோ என்னை கண்டு விலகி விலகி போகிறாள், வான லோகத்து அழகிகளும் தானும் ஒருத்தி என்ற நினைப்பு அவளுக்கு, அவளின் அங்கமெல்லாம் தங்கம் என்ற நினைப்பு அவளுக்கு, அகந்தை யின் அரிச்சுவடி அவள், அந்த என்னை விரும் பாதவளை நான் விரும்பினால் என்னைவிட முட்டாள், என்னைவிட வேக்கெடுத்தவன், வெக்கங்கெட்டவன், வேறு எவனும் இருக்கமுடியாது இந்த பூமியிலே;
ஒவ்வொரு தான்யத்திலும் எழுதப்பட்டு இருக்கிறது அதை உண்ணப் போகிறவர் பெயர் என்பது எத்தனை உண்மையோ; அதேபோல் ஒவ்வொரு பெண்ணிலும் எழுதப்பட்டுள்ளது அவளை அடையப் போகிறவர் பெயர் என்பதும் அத்தனை உண்மை என்பதை உணர்ந்து கொண்டவன் நான்,
தீர்மானமாக யோசித்துப் பார்த்து என்னை விரும்பியவளை மணம் முடித்தேன் இருப்பினும் அவள் நினைவு என் இதய மாளிகையில் ஒரு மூலையில் வாடகைக்கு இருந்ததை சொல்லாமல் மறைக்க எனக்கு விரும்பவில்லை; ஆனாலும் என்னை நம்பி வந்தவளுக்கு எந்த குறையும் வைக்கவில்லை என்பது பொய்யல்ல அதை எனக்கு தெரியாமல் அவளை விசாரிக்கலாம்
காலங்கள் சில ஓடிவிட, கேள்வி பட்டேன் பலரை மருத்துவ மனைதனில் படுக்கடியாய் படுக்க வைத்திருக்கிறாள்
என்று; நம்ப முடியவில்லை
இன்னும் பலரை கல்லறைக்கே அனுப்பிவைத்திருக்கிறாள் என்று, நம்ப முடியவில்லை
பல குடும்பத்தை நடுதெருவிலே நிருத்தியிருக்கிறாள் ஓலமிடுகிறது குழந்தை குட்டிகள் உட்பட என்று, நம்ப முடியவில்லை
அவளும் எழுந்து நடக்க மாளாமல் இரண வலி தாளாமல் படுத்த படுக்கையாக கிடப்பதாக கேள்வி பட்டேன்; மல ஜலம் மஞ்சத்திலேயே கழித்த வண்ணம் கிடப்பதாக; உதவ முடிந்தால் நம்மால் ஆனவரை உதவலாம்; அவளை நினைத்து விட்ட ஒரே காரணத் திற்காக, மருத்துவ மனைக்கு அவளைக் காணச்சென்றேன்
○○மருத்துவ மனையை விட்டு மாற்றிக்கொண்டு போய் விட்டதாக சேதி○○ சொன்னார்கள்
○○பகீரென தூக்கிப்போட்டது எங்கே மாற்றிக் கொண்டு போனார்கள் என்று கேட்டேன்○○
○○கல்லறைக்கு○○ என்றார்கள் இதய மாளிகையில் இருந்து அவள் குடி பெயர்துக்கொண்டாள் ஆனால் இன்னவள் இந்த இடத்தில் குடியிருந்தவள் என்ற பெயர் மாறவில்லை
○○தம்பி உன்பெயர் முத்துதானே…!○○
○○ஆமாம் ○○
○○இந்தா நீ யாரைக்காண வந்தாயோ அவள் உனக்காக எழுதப்பட்ட கடிதத்தை ஒருவேளை எனது உயிர் பிரிந்துவிட்டால், அதன் பின்பு இதை உம்மிடம் ஒப்படைக்க என்னிடம் கொடுத்து வைத்திருந்தாள் இப்போது உயிர் பிரிந்து விட்டது வாங்கிக்கொள்○○ என்று கொடுத்தார்
○○அன்புள்ள நண்பா, நீ நினைத்தது போல் நான் நல்லவள் இல்லை; நீ உடல் எடைபோட்டு இருக்கிறாய்; ஆனால் மனிதர்களை எடைபோட கற்கவில்லை; நான் நல்லவளாகத்தான் இருந்தேன் ஆனால் இந்த உலகம் என்னை நல்லவளாக இருக்கவிடவில்லை; யார் யாரெல்லாம் நான் கெட்டுப்போக உடந்தை யாக இருந்தார்களோ அவர்களை அழிக்க வேண்டும் என்பதே என் குறி; அதில் ஒருவரும் தப்பவில்லை அதற்காக நான் கையிலே கத்தியோ, துப்பாக்கியோ, விஷமோ உபயோகிக்கவில்லை, பணம் கொடுத்து அடி ஆள் வைத்தோ அடிக்க வில்லை
அகிம்சையை கையாண்டேன் எனக்கு அவர்கள் தொற்றவைத்து நான் தொற்றிக் கொண்ட இம்சை நோயே அவர்களை பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம், உயிருக்கு உயிர் என்று பழி வாங்கியது ஏறக்குறைய எல்லாருக்கும் சமாதி கட்டி முடித்துவிட்டேன் அத்தனை பேர்களும் என் அழகுக்காக அலைந்தவர்கள்; என் செல்வத்திற்காக நெருங்கியவர்கள்; என் உடலை அனுபவிக்க தொடர்ந்தவர்கள்; ஆனால் என் மனதில் நின்றவன் நீ மட்டுமே ஆனாலும் நான் நினைத்து இருந்திருந்தால் உனக்கு கிடைத்திருப்பேன்; நீ என்னைத்தான் நினைத்திருந்தாய் என்பது எனக்குத் தெரியும்; நீ என்னை நினைக்கும் போது நான் நல்லவளாக இல்லையடா ; அதனால் தான் நான் உனக்கு கிடைக்கவில்லை; ஆனாலும் உன் மனதில் மட்டும் வாழ்ந்து இருந்தேன்; ஆயிரம் பேர் என்னை சிதைத்து இருந்தாலும்கூட நீ ஒருவன் மட்டுமே என் மனதில் நின்றவன் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேனடா ○○
○○ அந்த நன்றி கடனுக்காகவே நான் இந்த கடிதத்தை எழுதினேன் ; நான் இந்த பூமியைவிட்டு பிரிந்துவிட்டேன்; இதை படித்துவிட்டு உன் நினைவில் இருந்து எனக்கு விடுதலை கொடுத்துவிட்டு கிடைத்தவளோடு நலமோடு வாழும் வழியைப் பார் ; நீ எப்படியும் வருவாய் என்பது எனக்குத் தீர்க்கமாகத் தெரியும், அஞ்சலி தருவாய் என்பதும் தெரியும், நீ கொண்டுவந்த மலர்வளையத்தை என் கல்லறையில் சாத்திவிடு நான் ஏற்றுக்கொண்டேன் இன்னொரு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நாம் நிச்சயம் ஒன்று சேரலாம் இப்படிக்கு நினைவகம் ○○
அவள் எனக்காக எழுதிய கடிதத்தை படித்துவிட்டு கண்களை துடைத்துக்கொண்டு
ஒரு மலர் வளையத்தை அவள் நெஞ்சில் சாத்தி விட்டு வந்தேன்
○○அவள் கொடுக்க மறந்த விஷம்
காதல்; அதனால் நான் இறக்க மறந்தது நிஜம்; காலன் தன் பணியை செய்து முடித்திட்டு; அடுத்த பணியை தொடர முடியாத தவிப்பு; அவனுக்கு இப்படி ஒரு பொழப்பு ○○
○○ஒருவகையில் நான் அவளுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்○○
○○ஏனென்றால் நான் அவளால் நிரா கரிக்கப்பட்டவன் ஆயிற்றே○○
○○நல்ல வேளை நான் அவளிடம் இருந்து பிழைத்துக் கொண்டேன் என்று என்னால் சொல்லிக்கொள்ள முடியவில்லை ○○
○○பார்ப்பதற்கு நல்லவனாக தென்படுகிறான், பொத்தாம் பொதுவாக பத்தாம் பசலியாக இருக்கிறான் என்று என்னைக் காப்பாற்றி வாழ வைக்கவேண்டும் என்று அவள் என்னை வெறுத்திருக்க கூடுமோ இப்படி அவள் எடுத்த முடிவென எடுத்து க்கொண்டேன்; அது எதுவானாலும் கடவுளுக்கு நன்றி என்பேன் அத்தோடு அவள் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன் ○○
••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்