அம்மா

ஒருதுளியை வடிகட்டி ஒர்
அணுவை

உயிராக்கி உருவாக்கி உதிர
உணவூட்டி

சிறைக்குள் சீராட்டி வெளியேற்றி
குளிப்பாட்டி

தாயாய் தாதியாய் சகோதரியாய்
நட்பாய்

அப்பப்பா நான் பட்டகடனை
எப்படி தீர்ப்பேன்

அம்மா?

எழுதியவர் : நா.சேகர் (10-Apr-19, 10:01 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : amma
பார்வை : 552

மேலே