எந்தன் தாய்
மூப்பின் தாக்கத்தால் வற்றிய உடம்பு,
சுமைத்தாங்கிபோல் குடும்ப பாரம்
தாங்கி தாங்கி சிரமத்தால் வாடிய முகம்,
இப்படி இப்போது காட்சி தந்தாலும்
இவள் உள்ளம் என்றுமே அன்பு சிறிதும்
வற்றா ஜீவநதி, அவள்தான் நான்
போற்றி பணிந்திடும் என்தன் தாய்
என்னை ஈன்ற அன்பின் சின்னம்..