பதினெட்டு வயதுக்கு மேலே

பாரிலே பிறந்து விட்டோம்
பார்க்கும் எவையும் துன்பந்தான்டா

பணத்திற்கு மதிப்பை வைத்து
பரபரப்பாய் சேர்ப்பதில் துன்பம்

பதினெட்டு வயதுக்கு மேலே
பள்ளிப் படிப்பை முடிக்காதது துன்பம்

தேடி அலைந்து வயிறார உண்டாலும்
தினந்தோறும் எடுக்கும் பசியால் துன்பம்

அருவி நதி கடல் என அத்தனையில் குளித்தாலும்
அடுத்தடுத்து அழுக்காகும் உடலால் துன்பம்

பிழையை மட்டுமே தொழிலாய் செய்யும் மானிடர்
பெருமையாய் பேசித்திரிவது துன்பம்
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Apr-19, 6:22 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 291

மேலே