நீரோடையில் கால்நனைத்தெனை நீபார்க்க
சேவல்கூ வும்குரல் கேட்டுச்செக் கச்செவேல்
என்றுதித்தான் செங்கதி ரோன் !
கருங்குயில் கூவும்கூ வல்கேட்டு வெள்ளை
நிறத்தில் சிரித்தனபூக் கள் !
நீரோடை யில்கால் நனைத்தெனை நீபார்க்க
நெஞ்சோடை யில்சல னம் !
உன்கருங்கூந் தல்மல்லி கைவாசம் காற்றெனக்கு
நல்கும்அன் றாடப் பரிசு !
கருவிழி வெண்விழி யின்அசைவு எண்ணி
நடுவழியில் நின்றேன் திகைத்து !
சாலை நிழல்தேடி வந்தேன் மரம்சுமந்த
லாரிநிழ லில்நிற் கிறேன்
வற்றிய ஆழ்கிணத்தில் வாளிகள் சத்தம்
அரசியல்வா ளிச்சத்தம் இங்கு !