பாரதியும் பன்னா ஆடையும்

பாரதியும் பன்னா ஆடையும்

பாட்டிசையைக் கற்றார் திரைப்படத்தால் பாமரரும்
பாதிப்பா டல்கண்டோம் வெண்திரையில் -- ராகமுடன்
தங்கமாம் ஏவியெம்மும் பாங்காய்ப் புகுத்திட்டார்
பொங்குமனம் துள்ளியெழ வே.

லட்சோப லட்சமக்கள் பாட்டை முணுமுணுத்தார்
பாட்டில் அறிந்திலர் ராகமெதும் -- விட்டாரா
அட்டாரி காம்போதி தர்பாரி கட்டையெட்டுப்
பாட்டையெல்லாம் பாடிமகிழ்ந் தார்

பாரதம் போற்றிப் புகழ்ந்தநம் பாரதியும்
பார்விடுத்த தேவனாகாப் போனானோ -- ஐயகோ
மன்னியும் கூறிரண்டாய் அங்குமுளன் இங்குமுளன்
எந்தன் தமிழர்பேர் கூறு

பின்நிகழ்வை தீர்க தரிசியென முன்னுரைத்தான்
முன்நிகழ் பாரதத்தை மேடையிட்டான் -- பின்நிகழ்வு
தண்சுதந்தி ரம்பெற்றோம் என்றார் பெறுமுன்னே
பண்ணிலவர் தீண்டா தெது ?

பாரதிதான் ஆரியனென் றான்தவறா? யார்சொன்னார்
பாரதி ஔவைபோல் பெண்ஆணும் -- சாதிசோடி
என்றார்கீழ் மேல்சாதி யில்லையென்றே சாடினான்
பன்னாடை இஃதறியார் காண்

கற்றறிந்த நம்தமிழர் ஏற்றமாய்கொண் டாடினர்
நற்றமிழர் பாரதியை ஏற்றிட -- அற்பன்
சிரம்கொய்த முண்டக் கிறுக்குமணி சொன்னான்
சிரந்தானில் லைப்பாப்பான் என்று

சல்லடையைக் கண்டான் மனிதன் சலிக்க
சலித்ததில் போகாப் புழுவாம் -- கெலித்தான்
கெலித்தானாம் சொன்னான் மனிதன் எதையாம்?
சலித்தப் பழையமக்கல் மாவு

பன்னாடை செய்தான் கடவுள் எதற்காம்சொல்
பண்ணிய ஆறறிவு கொண்ட -- மனிதனில்
நல்லறிஞர் தன்னையேசல் சொல்லப் படைத்தானோ
எள்ளுமனி தன்பன்னா டை

எழுதியவர் : பழனி ராஜன் (13-Apr-19, 11:48 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 71

மேலே