தமிழ் பேசும் இந்தியன்
காலத்தை நம் வசபடுத்தி
வெற்றி தாயை கட்டி அணைக்கையிலே
இந்தியன்
காலத்தின் ஆதியிலே என் தாய் தந்த மொழியை போற்றுகையிலே தமிழன்
கடல் அலைகளை எதிர்த்து எல்லையில்லாமல் நீந்தி தங்கம் வெல்கையிலே
இந்தியன்
கடல் அலைகளால் அடித்து
எல்லை கடந்து
அலைகழிக்கபடுக்கையிலே
தமிழன்
நாட்டின் நலன் காக்க உயிர் கொடுத்து இராணுவ வீரனாக போராடுகையிலே
இந்தியன்
நாட்டின் சில கொள்கைகளால் பறிக்க படும் உரிமைக்காக போராடுகையிலே
தமிழன்
தமிழனாய் பிறந்து இந்தியனாய் சாதிக்கும் எங்களுக்கு
தாய்நாடும் தமிழ்நாடும் என்றும் ஒன்று தான்
சாதனை படைத்து இந்தியனாக வாழ்வதே அருமை எனில்
தமிழனாய் இருந்து சாதனை படைப்பது பெருமை....
இ. ஸ்டெல்லா ஜெய்