மனதின் முதல் காதல்

ஏதும் தோன்றாமல் ஏதேதோ மனம் நினைத்து
தொடர்கதையாய் தொடர்ந்துவிடும்
உன் முன் மௌனம் போல்

பேசிட ஆயிரம் உண்டு
ஒத்திகையில் தோல்வி கண்டு
மீண்டும் முயல்வதென
கஜினியை மிஞ்சி விட்டு

தட்டு தடுமாறி உளரிட சில வார்த்தை
அர்த்தமில்லாமல் சப்தமில்லாமல்
உனக்கு கேட்டும் கேக்காமல்
புன்னகை நீ உதிர்க்க
என் காதல் உதிருதடி

ஒற்றை மலருடன் ஓர் கடிதம்
சில்லென வீசும் சாரல் மழையாய்
நாலாய் எட்டாய் அதை மடித்து
சொல்லாமல் சொல்லிய காதல் வைத்து

உன்னிடம் சொல்லிட தினம் தவித்து
சொன்னால் போதும் என நினைத்து
நீ மறுப்பினும் பெரிதல்ல என முடிவெடுத்து
சொல்லும் வேளையில் நீ இடைமறித்து

கையில் வைத்தாய் மனஅழைப்பிதழை
நொடியில் உலகம் இருளுமென
கனநொடியில் காதல் கருகுமென
சிவமாய் மாறி நின்றேனே
மனதோடு காதலை கொன்றேனே

வாழ்ந்திட நானும் நடைபிணமாய்
வைத்தேன் உன்பெயரை என் பிள்ளைக்கு
அதை மனம் மட்டும் அறியும்
முதல் காதல் என ...........

எழுதியவர் : ருத்ரன் (16-Apr-19, 11:30 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 335

மேலே