மாற்று எண்ணம் கொள்ளாத

திரவியம் தேட வேண்டி
தீவு தீவாய் சென்று வந்தேன்
தேடிய திரவியமோ
தேவைக்குக் கூட பற்றவில்லை

கைக்கொண்ட கல்விக்கு
ஏற்ற வேலை கிடைக்கும் என்று
கனவு பல கண்டு வந்தேன்
காலம் போனதேயன்றி கனவது கூடவில்லை

கைத்தொழிலை கற்றுக் கொண்டு
உடன் பயின்றோர் தெளிந்தெழ
மாற்று எண்ணம் கொள்ளாத நான்
வேற்று நாடு சென்று உழைத்தேன்

ஆற்றொனா துன்பம் வந்து அல்லல்
படுத்திய போதும் காசு ஒன்றே கதியென்று
கரடு முரடாய் வேலை செய்தேன்
கச்சிதமாய் பொருள் ஈட்டி சீரிளமை இழந்தேன்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (23-Apr-19, 5:41 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1576

மேலே