கழிமுகத்தில் செழித்த போதும்
விதையால் வளர்ந்து வரும்
விருட்சங்கள் பல உண்டு
வேரை பிடிங்கி நட்டால்
விருட்சமாகும் மரங்கள் உண்டு
தண்டை ஊன்றி வைத்து
தல விருட்சம் வளர்ந்தது உண்டு
எச்சத்தில் எங்கும் சென்று
விருட்சம் வின்னளவு வளர்ந்தது உண்டு
நீரிலே மிதந்து சென்று பார்முழுதும்
மரம் சீருடன் வளர்ந்தது உண்டு
காடுடன் வளர்ந்த போதும்
கட்டடத்தை பிளந்து வளர்ந்தும்
கழிமுகத்தில் செழித்த போதும்
சுழி அளவும் துயரம் தரா நல்மரத்தை
துதித்தே போற்றி மகிழ்வோம்.
--- நன்னாடன்