அநாதை பிணமாய்

பச்சைப் பட்டாடை உடுத்திய
இளமை மாறா இளம்பெண்
என்னை
சுயநலக் காமுகர்கள்
ஆடைகளை களைத்து
நிர்வாணமாக்கி ஆதாயம்
தேட அதை
காணச் சகியாத வானம்
எனைத் தழுவிட மறுத்து
திரௌபதியை கை விட்ட
பாண்டவராய் அமைதி காக்க
ஆடைகள் களைந்தது
போதாதென்று
ஆழ்துளை கூட்டுப் புணர்வில்
என் அங்கங்களை சிதைக்க
என்நிலை இன்று ஆள்அரவம்
அற்ற
இடத்தில் கிடக்கும் அநாதைப்
பிணமாய்