ஆடுடா கண்ணா ஆடு

ஆடுடா கண்ணா ஆடு அளவோட ஆடு

தேடுற செல்வம் எல்லாம் கூடவராது

பண்பென்னும் விதையை நீ ஆழ் மனதில் போடு

அண்டை வீட்டாரோடு அன்போடு பழகு


விதவிதமான வித்தையை நீ விளையாட்டாய் பழகு

விதி என்று சொல்லுவோரை விட்டுத் தூர விலகு

வீண் விமர்சனம் செய்வோரை வேலாலே சொருகு

விண் மேகம் பொழிவதைப் போல் கருணையை பகிரு


இயற்கை என்னும் கொடையை தினமும் நீ வணங்கு

எவ்வகை பதவி பெறினும் தவறுக்காக வருந்து

எந்நிலையிலும் ஐம்பூதத்தைக் காசாக்குவதை தவிரு

வசிக்கும் ஊரில் விளையும் பயிரை உண்ண பழகு

--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (24-Apr-19, 9:16 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 247

மேலே