முதல் கனவு

என் கண்களின்
சேமிப்புக் கிடங்கில்
முழுவதுமாய் ஆக்கிரமித்து
எல்லாக் காட்சியிலும்
நிழலாய் பின்னிருந்து
உன்னுருவையே
முன்னுருவமாய்
நிலை நிறுத்தும்
முழுநிலவே ...
என் முதல் கனவே !

எழுதியவர் : வருண் மகிழன் (26-Apr-19, 12:43 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : muthal kanavu
பார்வை : 373

மேலே