துணிந்தெழுந்தால் நீயும் - வீரனே

எழுந்து வா !
தோழனே
எழுந்து வா!!

நாமும்
தேடித்தான் பார்ப்போம்!

அருவியாய் எழுந்து
தினம்
துள்ளிக் குதிப்போம்!!

படிப்படியாய்
அடியெடுத்து வைத்தால்
புது வழி பிறக்கும்!

நதியைப் போல்
துணிந்து நகர்ந்தால்
கடல் வந்து கிடைக்கும்!!

புயலாய் - நீயும்
உருமாறும் போது
எது - உன்னை தடுக்கும்?

தடையை உடைத்து
தாண்டும் போது
வெற்றி கொடி
உன் கையில் பறக்கும்!!

ஐயா - அப்துல் கலாம்
போன்று - நீயும்
நெடிய கனவு கண்டால்
உனது படைப்பும்
இந்த விண்ணை அளக்கும்!

உனக்குள்
விடாமுயற்சி இருந்தால்
ஒரு நாள்
உன்னைக் கண்டு
இந்த உலகம் வியக்கும்!!

ஆதலால்,
எழுந்து - வா !
தோழனே
எழுந்து - வா!!

துணிந்தெழுந்தால்
நீயும் - வீரனே!

எழுதியவர் : கிச்சாபாரதி (26-Apr-19, 2:17 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 61

மேலே