என் இதய ராணியே

என் இதய ராணியே...

என் இதயத்தை களவாடிய
என் இதய ராணியே
பயப்படாதே
களவாடிய குற்றித்திற்காக
காவல் நிலையம் செல்லமாட்டேன்
மாறாக நான் உன் வாழ்நாள் காதல் கைதியாகிவிட்டேன்.

அழகிய காந்த விழியாளே
கொஞ்சம் தமிழ் பேசும் செவ்விதழாளே
கொடி இடை கொண்ட
மான் நடையாளே

அழகிய சித்திரமே
என் பேரழகியே
நான் காதல் கைதி
என்பதால் அதிகாரம் உன்னிடத்தில்
ஆணையிடு
என்ன செய்ய வேண்டும்

உன் மாதுளம் இதழில்
என் இதழ் பதித்து
புது கவிதை எழுதவா
என்ன? உன் சந்திர முகம்
சூரியன் போல் ஆகிறது
கலாச்சாரம் தடுகிறதோ
தப்பு தான்
மண்ணிக்க வேண்டும்
கண்ணத்தில் வேண்டுமானாலும்
போட்டு கொள்கிறேன்.

என் அற்புத ஓவியமே
என் சொல் கேட்டு இந்த பூங்காவிற்காவது வந்தாயே
மிக்க மகிழ்ச்சி
இங்கே பூக்கள் எல்லாம் உன் முகம் பார்த்து நாணுகிறது
காரணம் உன்னை விட அவையாவும் அழகில் கம்மியாம்
அங்கே பார் வானவீதியில் இன்று நிலவின் வரவும் மிக,மிக தாமதம்
காரணம் பூமியில் ஒரு நிலவாக நீ ஒளி தருவதால்
உன்னை தொட்ட தென்றல் காற்று
என்னை தொட்டு செல்கிறது
கண்ணே என் கண்மனியே நீ எப்போது என்னை தீண்ட அனுமதிப்பாய் .
- பாலு.

எழுதியவர் : பாலு (28-Apr-19, 3:48 pm)
பார்வை : 510

மேலே