கோ பாரதி வாழ்த்து

கோ பாரதி

நீ கண்ணாடி
அணிந்த கென்னடி
குரு மீசை
வைத்திருக்கும்
குறுந்தொகை
தமிழ் வளர்க்கும்
பெருந்தகை
உனக்கு தமிழ்த்தாய்
அளித்து உதவவேண்டும்
பெருந்தொகை

தாசருக்கு முன்னால்
பாட்டிற்குக் கோ பாரதி
இங்கே
நம் கண் முன்னால்
கோ பாரதி

அவர் பாரதி
இவர் பாவெல்லாம் ரதி

அவர் பாவெல்லாம்
பாவல்ல பாகு
அதில் பார்க்கவில்லை
வேறுபாடு எனும் பாகு

அது இனிக்கின்ற
பாகல்ல
சாதிவெறி தனிக்கின்ற
பாகு

இவர்
வேந்தனின் நகல்
கோபதி ஏற்றி வைத்த அகல்

கலைவாணியிடம்
தெறித்த துகள்
இவர்
விழித்திருக்கும்
நேரம்தான் தமிழுக்குப் பகல்

தமிழ்த்தாய்த்தான்
இவருக்கு மகள்

இவர்
தோளில் இருப்பது
மேலாடை அல்ல
நூலாடை அல்ல
பாலாடை

பால் மனதை
பாலாடை அல்லவா
மறைத்து இருக்கும்

அது தறித் துண்டு அல்ல
பாரதி தாசன்
தமிழ் எழுத
கொடுத்துச் சென்ற கரித்துண்டு

தமிழுக்காக
பெண்ணை மணக்காது
இம் மண்ணை மணந்தவர்

தமிழை மட்டுமே
பேசும் உன் தொண்டை
வாழ்த்துகிறேன்
உன் தமிழ் தொண்டை

எழுதியவர் : புதுவைக் குமார் (29-Apr-19, 12:29 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : ko baarathi vaazthu
பார்வை : 45

மேலே