நாணும் பெண்ணைக் கண்டு

நாணும் பெண்ணைக் கண்டு

எல்லோர சிற்பம் போலே
அழகாய் வந்து நின்றாள்
கவிஞன் கண் முன்னால்
அசையாமல் நின்று பார்த்தேன்
அந்த அஜந்தா ஓவியத்தை
அடடா...அடடா...அடடா!
அசந்து போனது கண்கள்
என்னை தாக்கியது எழில் விண்கல்
இல்லையென்றால் பெண்கள்
கவிஞன் ஆவது எப்படி ஆண்கள்?

கலை தேவிக்கு மட்டும்
இடம் கொடுத்த நெஞ்சில்
வேறு யாருக்கும் இடமில்லை
என்றே - தினம் வாழ்ந்து வந்தேன்

பெண்ணே!
உன்னை நான் காணும்வரையில்
சிற்பக் கலையை கற்காமலே - இன்று
சிலைவடித்தேன் - உன்னாலே!

அந்த அபூர்வ சிற்பதை இரசிக்க
வெறும் கண்கள் மட்டும் போதவில்லை
புலமைக்கண் தேவைப்பட்டது
தலைக்கணத்தை நீக்கி
தமிழ் இலக்கணம் கற்றேன்
நாணும் உன்னைக் கண்டு
நானும் கவிஞன் ஆனேன்-இன்று!

அழகொழுகும் செந்தாமரை முகத்தைக்
கண்ட கருவண்டு
இன்னிசை பாடாமல் இருக்குமா?
செந்தேன் இதழைச் சுற்றி வந்து
மயங்கிதான் வீழ்ந்தது
மது ஏதும் உண்ணாமலே
மாது வாடை பட்டதிலே..!
பித்தம் தெளிய வாய்ப்பில்லை
அவளோடு இணையாமல்
புதுக்கவிதை பிறப்பதில்லை!

எழுதியவர் : கிச்சாபாரதி (29-Apr-19, 7:59 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 42

மேலே