இனிய இல்லறம்
முற்றும் துறந்தவர்களுக்கு
முழு ஆடை ஆகாதாம்...
அதற்காக
ஆடை அணியா
வெண்ணிலவைக் கண்டால்
ஆசை பற்று கொண்டு
இல்லறம் திரும்புவான்
தன்னாடையை மறந்து
இயலாமையால் வரும்
இளமை துறவறத்தை
விட்டு ஒழித்து விட்டு
உன் கையது கொண்டு
என் மெய்யெங்கும் தீண்டி
வேண்டும் வேண்டுமென்று
தினம் வேண்டி வருவாய்
பெண்ணிடம்
எதை- நீ வேண்டாம் என்பாய்...?
வெட்கத்தை மறந்து
முத்தத்தை பகிர்ந்து
நீ உச்சம் தரு(ம்)வாய்
நான் சொர்க்கம் அடைவேன்