ஞானப் பூச்சி
எப்படிப்பா அது..
என்ற என் குழந்தையின்
கேள்விக்கு
விடையேதுமில்லை..
என்னிடம்..
பசுமை காடழித்து
பைஞ்சுதை வளர்த்த
நகர வாழ்வின் ஒரு
வெளிச்சம் போன
இரவில்..
தனியாய் மின்னிக்கொண்டு
வீட்டினுள் நுழைந்த
மின் மினி பூச்சி ஒன்றினை..
எப்படிப்பா அது..
என்று கேட்ட
என் குழந்தையின்
கேள்விக்கு...
அறிவியலாய் பதில்
சொல்ல விடையேதுமில்லை என்னிடம்..
தன்னுடலில் ஒளி வைத்து
தனியாய் வந்த
அந்த ஜீவன்
துளி நேரம் வெளிச்சம்
போனதற்கே புலம்பலுடன்
இருட்டில் பதுங்கிய
ஆறறிவு மனிதனுக்கு...
ஒரு வேளை ஏதேனும்
ஞானம் சொல்ல வந்திருக்குமோ???