- பலா பட்டறை---------கவிதை

பலா பட்டறை
“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது!”





பின்கழுத்தின் வெம்மையினில்

எண்ணிரெண்டு த்வாரங்களின்

வெப்பக்காற்று



பொறித்து சிவந்திருந்த

முக்கோண தின்பண்டம்



மூக்கொழுகி வளையத்தில்

உடல் நுழைக்கும்

சாகச யாசக சிறுமி



தொடர் வண்டிப்பயணத்தில்

எட்டுத்திக்கும் ஏதேதோ

சப்தங்கள்



என இவை

எதுவும் அந்நியமாய்

உணரும் எனக்கு



ஆயிரம் காத தூரம்

போன உன் நினைவு

எப்போதும் அருகில் நிற்கும்..

- பலா பட்டறை



கீற்று வில் வெளிவந்த எனது கவிதை.

எழுதியவர் : - பலா பட்டறை--------- (5-May-19, 6:37 am)
பார்வை : 26

மேலே