வானவில்
மாக்கொண்டு மண்ணில் வரைந்தாள்
ரங்கோலியாய் வான வில்லை வரைந்தவள்
தலை நிமிர்ந்து ஆணவத்தில் வானை நோக்க
எங்கிருந்தோ வந்து சேர்ந்தது கார்மேகக் கூட்டம்
அதை குட திசை கதிரோன் தங்க கிரணம்
கொண்டு வருட , வானில் வரைந்தான், வானில்
விண்ணையும் மண்ணையும் இணைக்கும் ரங்கோலி
வானவில்லாய் , மண்ணில் அவள் வரைந்த ரங்கோலி
வானவில் தூறலில் மெல்ல கலைய…..

