காதல் உயிரெழுத்து அ ஆ

அழகு வெட்கதோடு
அலை பக்கம் வருமோ
ஆசை மிச்சமின்றி
ஆவல் விலகிச் செல்லுமோ
இதழ் முத்தம் தந்தால்
இதயம் மெல்லிசை பாடுமே
இ(ச்)சை உச்சம் பெற்று
உணர்வுகள் தூங்கும்
உறவுகள் ஏங்கும்
எண்ணக் கனவுகள் மீட்டும்
எழுந்திங்கு ஆடும்
ஏக்கங்கள் யாவும் ஊக்கம் பெற்று
ஏணியில் ஏறும்
ஐயம் நீங்கி
ஐம்புலமும் செயல்படும்
ஒத்த கருத்தில் இணைந்து
ஒற்றுமை கீதம் பாடும்
ஓஹோ வென்றும் ஆஹாவென்றும்
ஓடி ஆடும் மனம்
ஒளவையாய் மாறும் ஆசை
ஒளடதம் தீரும்
ஃ புள்ளியாய்
ஒருவனுக்கு ஒருத்தியென்றும்
நாம் இருவர் நமக்கொருவர் என்றும்
குடும்பம் வளம் பெறும்
காதல் நலம் தரும்!

எழுதியவர் : கிச்சாபாரதி (5-May-19, 12:37 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 48

மேலே