அவளெனும் அலட்சிய போதை
அவள் தானே!!
அவசரத்தில்
எங்கோ வீசிய 'சீப்பு'
கைக்கு கிடைக்கும் பட்சத்தில்
தோன்றியதில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
தென்படும் தூரத்திலுள்ள 'TV Remote'-ஐ கைப்பெறும்போது
தெரிந்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
கரையாக்கி வீசிய 'சட்டையை'
கஞ்சியிட்டு கசங்காமல் அணியும்போது
உணர்ந்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
ருசியான உணவையும்
TV-யை ரசித்து உண்ணும்போது
அறிந்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
வீட்டுத்தரையில்
பயமின்றி உருளும்போது
நினைத்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
உறங்கிய போதும்
குடிநீர் அருந்தையில்
கண்டிருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
தடையின்றி மின்சாரம் பெறுகையில்
அறிந்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
அவளின் மாத வருமானம்
வீட்டில் சேர்க்கையில்
கணித்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
அனைத்திற்கும்
அலட்சிய ஓங்காரணம்
"அவள் தானே"!!!