Riyathami - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Riyathami |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 06-Nov-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 195 |
புள்ளி | : 50 |
அனைவரின் புன்னகையும் ஒரு மொழியே :):):)....
தாயின் பேச்சைக்
கேட்டு நடக்கும்
கணவன்மார்கள்
கிடைக்கப் பெற்ற பெண்களும்
ஓர் வகையில் ஏழை தான்..
அவர்கள் தரப்பு
ஞாயங்கள் ஒருப்போதும்
கேட்கப்படுவதும் இல்லை!!
வெல்லப்படுவதும் இல்லை!!
காதலிக்கையில்
அவளிடம் பிடித்த
குறும்புதான்
காலப்போக்கில்
"அவ கெடக்குறா லூசு" எனும் அலட்சியப் போதையாகிறது
ஓர் ஆணுக்கு!!
அவள் தானே!!
அவசரத்தில்
எங்கோ வீசிய 'சீப்பு'
கைக்கு கிடைக்கும் பட்சத்தில்
தோன்றியதில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
தென்படும் தூரத்திலுள்ள 'TV Remote'-ஐ கைப்பெறும்போது
தெரிந்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
கரையாக்கி வீசிய 'சட்டையை'
கஞ்சியிட்டு கசங்காமல் அணியும்போது
உணர்ந்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
ருசியான உணவையும்
TV-யை ரசித்து உண்ணும்போது
அறிந்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
வீட்டுத்தரையில்
பயமின்றி உருளும்போது
நினைத்திருக்கவில்லை;
அதில் அவள் உழைப்பு உள்ளதென்று!!
உறங்கிய போதும்
குடிநீர் அருந்தையில்
கண்
ஒட்டி பிறந்திருப்பேனடி
காலத்தை வீணடிக்காமல்
- உன்னுடன் இரட்டையாய்!!
ஒட்டி பிறந்திருப்பேனடி
காலம் பல கடந்து
- உன் குழந்தையாய்!!
திருவிழாவாம் உன் திருமணம்
உற்சவத்தின் போது
காணாமல் போன
கைக்குழந்தையாய்
என் மனம்!!
கதறலை கேட்டு
நீ வரும் முன்
வந்தடைகிறது விழி நீர்!!
இதில்
வீழ்ந்தது யாரோ?
வென்றது யாரோ?
வீழ்ந்தது நீ எனில்,
வென்றதும் நீயே!!
வீழ்ந்தது என் அன்பின் மோதலில்!!
வென்றது நம் பாசப்போரில்!!
- என் இதய தேவதையின் (அக்கா) பிரவில் வாடும் அவள் தீர்கதரிசி.
I MISS HER EVER MINUTE AND EVERY SECONDS
எங்கே இறைவன். .?
செந்தமிழுக்கு இல்லா உரிமை
வெண்மேனிக்கு
கிடைக்கும் என்றால்
செல்லாதே பெண்ணே -அங்கு
சீரழிப்பார் உன்னை .
பொட்டுக்கும் தாலிக்கும்
பொருந்தாத இடமெனில்
புறக்கணித்து விடு பெண்ணே-அங்கு
பெருமை இழப்பாய் பெண்மையின் .
விழிநோக்கா ஆண்மையின்
விழி பார்க்க நேர்கையில்
விலகிசெல் பெண்ணே
அங்கு -பாதுகாக்கப்படும் உன் பத்தினித்துவம்.
ஆடம்பர வாழ்வை விரும்பாதே
பெண்ணே
அழிந்திட கூடும் உன் அடக்கத்தின்
சிறப்பு .
பெற்றவர் முதியோர் என வெறுக்காதே பெண்ணே
இரண்டு பெற்ற பின் தளர்ந்திடுவாய்
மறக்காதே கண்ணே .
பணம் மட்டும் போதும் என்று
எண்ணாதே பெண்ணே.
பாசத்தையும் சேமித்திட
கற்றுக்கொள் கண்ணே
தினமும் இரவில்
மௌனத்தினால்
தீட்டுகிறேன்,
பல கவிதைகளை
உனக்காக...
வார்த்தைகளாய் மாறி
அவை உன்னை
சேர்ந்திருக்க வாய்ப்பில்லை;
சுவாசமாய் உன்னை
தீண்டி இருக்கக்கூடும்!
என்றேனும்
அதை நீ உணருவாய்,
உன் சுவாசத்தில்
என் வாசம்
இல்லாத போது!!