மௌனமும் பேசும்

தினமும் இரவில்
மௌனத்தினால்
தீட்டுகிறேன்,
பல கவிதைகளை
உனக்காக...
வார்த்தைகளாய் மாறி
அவை உன்னை
சேர்ந்திருக்க வாய்ப்பில்லை;
சுவாசமாய் உன்னை
தீண்டி இருக்கக்கூடும்!

என்றேனும்
அதை நீ உணருவாய்,
உன் சுவாசத்தில்
என் வாசம்
இல்லாத போது!!

எழுதியவர் : ரியாதமி (31-Dec-13, 5:11 pm)
சேர்த்தது : Riyathami
பார்வை : 142

மேலே