புரட்டப்படும் இதயம்🌹🌹🌹
இதயம் புரட்டப் படுகிறது அந்தரங்கமான நினைவுகளை இசைப்பதற்காக.....
இசைக்கப்படும் நினைவுகளுக்கு வரிகளும் இல்லை மெட்டும் இல்லை......
அந்தரங்கமான அந்த நினைவுகள் எதையோ எழுத வந்து தடம் மாறி தவுடுபொடியாகிறது....
அந்தரங்கமான அந்த நினைவுகள்
எதையோ பாடுபொருளாக முணுமுணுக்கிறதே தவிர பாடப்படுவதில்லை....
அதற்கான இசையும்,வரியும் அவளின் இருதயத்தில் அல்லவா இருகிக்கிடக்கிறது....