மாற்று திறனாளி

மாற்று திறனாளி👍

யானைக்கும் அடி சறுக்கும்
படைக்கும் பிரம்மனுக்கும்
பிழை நேரும்
வந்து பிறந்து விட்டோம்
சற்றும் வருத்தம் இல்லை
முன்பு ஊனமுற்றவர்
இப்போது மாற்றுதிறனாளி
எங்களுக்கு ஆறுதல் வார்த்தையாம்
நன்றி, மிக்க நன்றி
தயவு செய்து எங்கள் மீது
பரிதாபம் வேண்டாம்
தாட்சண்யமும் காட்ட வேண்டாம்
காரணம் அது எங்களுக்கு
உபத்திரமே
நாங்கள் மாற்றுதிறனாளிகள் அல்ல
சமுதாயத்தை மாற்றும் திறமைசாலிகள்
நாங்கள் ஊனமுற்றவர்கள் அல்ல
சமுதாயத்தில் உள்ள ஊனத்தை அகற்றுபவர்கள்
நாங்கள் பிரம்மன் படைத்த பிழைகள் அல்ல
அவன் படைத்த பிழைகளை சரி செய்ய
வந்தவர்கள்
நாங்கள் உடல் பலம் இல்லாதவர்கள் தான்
ஒப்பு கொள்கிறோம்
ஆனால் கடல் அளவு மனோபலமும், தன்னம்பிக்கை உடையவர்கள்
நாங்கள் தொட்ட சிகரத்தை கூட
எல்லாம் பலமும் பொருந்திய சில
சகமனிதன் தொடாத போது
நாங்கள் அதை நினைத்து பெருமை அடையமாட்டோம்
அனுபுங்கள் அந்த சக மனிதனை,
என் இனிய நண்பனை
நாங்கள் நல்லதொரு பயிற்சி
தருவோம்
இது ஆணவ பேச்சு அல்ல
இது கர்வத்துடன் பேசுவதும் அல்ல மிகுந்த
சமுதாய அக்கறையே.
- பாலு.

எழுதியவர் : பாலு (9-May-19, 9:17 am)
சேர்த்தது : balu
பார்வை : 699

மேலே