கல்லூரி காலமே

கல்லூரி காலமே வாழ்க்கையின் பாடமே
சென்ற முதல் நாள் கண்ட அற்புத தாளமே
டிக் டிக் உணர்வின் நாளமே
கீச் கீச் பறவைகளின் சத்தமே
தொடங்கியது அடித்தளம்
தொழுகின்றேன் இறைவனை ஒருகணம்

யாரென்று தெரியாத அற்புத
உறவை நாம் கண்டோம்
யாவரும் அறியாத
பயணங்கள் நாம் சென்றோம்
கூடா நட்பு என்பார்கள் நாங்கள்
நாடாளும் நட்பு என்போம்


வாடா மச்சான் கட் அடிக்கலாம்
வேணாம் நிச்சயம் காலம் முக்கியம்
கல்வி ஒன்றே தான்
எதிர்கால சந்திப்பு
நட்பு என்றுமே நாளைய மகிழ்ச்சியின் தித்திப்பு
ஆணும் பெண்ணும் சமம் ஆனால் நட்பு இருபுறமும் பலம்
புரியாத புதிரை போல
தோழன் தோழி
அறியாத வயதில் வாழ்க்கை ஜாலி
ஒற்றை நோட்டை சுழற்றியே நடப்போம்
அழகிய பெண்ணைக் கண்டால்
கண்ஜாடையிட்டு சிரிப்போம்
உணவு சிற்றுண்டி பகிர்ந்தே உண்டோம் பேருந்து படியில்
தொங்கியே சென்றோம்
பாடங்களை அறிய குருப்பா இணைவோம்
தேர்வுத்தாளில் பிட்டால் இணைப்போம்

நெருங்குகின்ற கடைசி பருவம்
கண்ணில் கண்ணீர் துளிர்க்கும்
பிரிந்தாலும் என்ன தோழன் தோழியே
பழைய நட்பு என்றும் ஜீவன்
உயிராய்
எவ்வழி சொந்தம் என்றும் வந்தாளும்
நட்பின் நீ சொந்தம் என்றும் மாறாது மாறாது

எழுதியவர் : கவிஞர் க. காளீஸ்வரன் (13-May-19, 1:24 am)
சேர்த்தது : செந்தமிழ் புலவன்
Tanglish : kalluuri kaalame
பார்வை : 616

மேலே