என் தோழியே
கல்வி கனவு நிறைவேறும் முன்னே
தந்தை கனவுக்காக தான் கொண்ட கனவை
தள்ளி வைத்து தாய்க்காக மணமுடித்து
மறுவீடு உறவுகளுக்காக வாழ தொடங்கி
இல்லறத்தின் பரிசாக வாரிசு சுமந்து
போதைக்கு அடிமையான கணவனை திருத்த முயன்று
அதற்காக பல இன்னல்களை அடைந்து
எல்லாவற்றிற்கும் காரணம் நீ என்று வீண் சொல்லையும் ஏற்று
திருமண வாழ்வில் ஒரு ஆண்டினை கூட நிறைவேறாமல்
கட்டிய கணவனை பறிகொடுத்து
இன்னும் பத்தே நாட்களில் பிரசவ நாளை எண்ணி கொண்டு
ஊர் சொல்லை கேட்டு மனம் கலங்கி
இன்று கைம்பெண்ணாய் வீட்டில் முடங்கிய என் ஆருயிர் தோழியே உனக்கு என்னவென்று ஆறுதல் கூறுவேன் என்று அறியாமல் தவிக்கின்றேனடி....