தாகூர்

ரவீந்திரநாத் தாகூர்

இவனின்
பேனா கர்ப்பம்
அடைந்தது
தேசிய கீதம்
பிரசவம் ஆனது

தாகூரின்
நா கூரால்
அவன்
பா கூரானது
அதில்
பெண்ணடிமை
எண்ணங்கள்
சவம் ஆனது

க விதையில்
விளைந்த
நாத்து
இந்த
ரவீந்திர நாத்து

ரவி
நோபல்
பரிசுபெற்ற
மகா கவி

இவன்
கவி புனையும்
வாரணம்
அதில் சமூகக்
கருத்துக்களை
நாம் வாரனும்

இவன்
காதல் கவிதைகள்
பூ ரணம் செய்யாத
பூரணம்
இவன் கவி என்றும்
பிடிப்பதில்லை பூரனம்

இவன்
வரிகளே தேசிய கீதத்தின்
தோரணம்
சுதந்திரப் புரட்சிக்கு
இவன் கவியே காரணம்

மூடங்கள் இவன்
கவியால் கொண்டதோ
மா ரணம்
இவன் கவிபடித்து
போராட்ட வீரனாய்
நாம் மாறனும்

தோணியாய்
இவன் கவியில்
ஏறனும்
தோனியாய்
இக்கவிஞனையும்
நாம் ஏற்கனும்

இவன்
கழுத்திற்கு மேலே
தாடியை வைத்தான்
தன்
எழுத்திற்கு மேலே தடியை
வைத்தான்

இவன் வரி
வரி அல்ல எரி
இவன் அடி
அடி அல்ல
வெள்ளையனுக்கு அடி

எழுதியவர் : புதுவைக் குமார் (7-May-19, 10:06 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 53

மேலே