பழகு பழகு பரவசத்தோடே

எல்லாம் உனக்குள்
இயந்திரமயமாய் மாறுவதற்குள்
இயற்கையோடு கொஞ்சம்
இணைந்து வாழப்பழகு

பழத்தையும் காயையும்
அதன் அதன் சுவையில்
சுவைத்து பழகி -நாக்கை
சுவைக்கு பழக்கு

உழைத்து உழைத்து
சேர்த்த பணத்தில்
சூழ உண்டு களித்து மகிழ்ந்து
அழகு வாழ்வை அனுபவிக்க பழகு

நீரும் வானும் நிலமும் கடலும்
இணைந்து செய்யும் நன்மை யாவும்
நீயும் நானும் நெடும் மாந்தர் யாவும்
நிறைவாய் செய்ய இயலுமோ என நினைத்து பழகு

நெல்லு உணவாய் மாறும் நிலையை
எண்ணுந்தோறும் உவகைத் தோன்றும்
எண்ணம் அதனை எண்ணி எண்ணி
ஏகாந்தம் கண்டு வாழப் பழகு.
- - - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (9-May-19, 6:16 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 170

மேலே