சொற்பமானவையே தோல்வியை
முயற்சிகள் பல தோல்வியுற்றாலும்
முயல்வதை தீரமாய் தொடருங்கள்
அயராது செய்யும் முயற்சியால் - பல
அற்புத நிகழ்வுகள் வெளிப்படும்
தெளிவடையா நிலையினாலே தான்
தொடரான தோல்விகள் தொடருகின்றன
அரிதான காரியங்களால் தோல்விகள்
அணிவகுத்து என்றும் வருவதில்லை
அற்பமானவை என நாம் நினைக்கின்ற
சொற்பமானவையே தோல்வியை தருகின்றன
பலமான ஆற்றல் எதுவும் தேவையில்லை
பதற்றமில்லாமல் செய்வதே வெற்றி தரும்.
- - - நன்னாடன்.