தாய் மொழி

பிறந்து சிறந்த மொழி அல்ல தமிழ் ,
சிறந்து பிறந்த மொழி எங்கள் தமிழ் .

உயிருக்கு உயிர் எழுத்தாய்
மெய்க்கு மெய் எழுத்தாய்
உலகுக்கு உயிர்மெய் எழுத்தாய் விளங்கும் தமிழ் .

மொழிகளின் பிறப்பிடம் தமிழ் என்போம்
தமிழின் பிறப்பிடம் குமரி என்போம்

ஊமையாய் திரிந்து
செய்கையாய் மாற்றம் பெற்று
ஒலியாய் ஒலித்து
பின் வரியாய் நீ வடிவெடுத்தாய் ..

உன்னை செப்பம் செய்கையில்
செந்தமிழ் ஆனாய்...

செந்தமிழில் இருந்து
வேறுபட்டு பேசையிலே எழுதையிலே
கொடுந்தமிழ் ஆனாய்...

பிற மொழிகளிடம் இருந்து
தனித்து நிற்கையில்
தனிதமிழ் ஆனாய்..

இயன்ற வரை
நற்சொல் கொண்டு பேசையிலே
நற்றமிழ் ஆனாய்..

பண்ணிசைத்து பாடையில் இசைத்தமிழ் ஆனாய்..
இயல்பாக பேசையில் இயல் தமிழ் ஆனாய்..
கூத்தாடி பாடையில் நாடக தமிழ் ஆனாய்..

இயல் இசை நாடகம்
இவைகளுடன் இணைந்து
முத்தமிழ் ஆனாய்..

பேச்சிலே வேறுபட்டாலும்
எழுதையிலே ஒன்றாய்

குமரியில் பிறந்தாலும்
தென் மேற்கு வட கிழக்கு என
பல கிளை மொழியானாய் ..

இத்தனை பெருமைகளை கொண்ட உன்னை
பிற மொழி கலப்பால் கலங்க படுத்தினோம்
தனி மொழி தாய் மொழி என பெருமை பட வேண்டிய உன்னை
பிற மொழி முன் மொழி என வெறுத்து ஒதுக்கினோம்

பிற மொழியில் பேசும் மூடர்க்கு தெரியாது
பிற மொழியின் பிறப்பிடமே நீ தான் என்று ..

தமிழன் அழியும் வரை அல்ல
மனிதன் அழியும் வரை தமிழ் அழியாது
கற் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மொழி தமிழ் மொழி..

ஆதி அந்தம் தமிழே
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ......

எழுதியவர் : ரஞ்சித் வாசு (10-May-19, 11:37 am)
சேர்த்தது : Ranjith Vasu
Tanglish : thaay mozhi
பார்வை : 4069

மேலே